நீயே என் இதய தேவதை_37_பாரதி

0
395

நாளை புதன்கிழமை. விடிந்தாள் மாயாவின் முதல் பிறந்தநாள்.ஆனால் அவளால் சிறிய அளவில் கூட ஏதும் செய்ய முடியாது என்பது வருத்தமளித்தது. தாயின் வருத்தம் ஏதும் தெரியாமல் அசந்து தூங்கி கொண்டிருந்தது குழந்தை.அதன் முகத்தை மெலிதாக வருடி நெற்றியில் முத்தம் பதித்தாள்.அம்மாவை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டது பாப்பா.அந்த அணைப்பே அவளுக்கு தற்போதைய ஆறுதலானது.

சித்தியின் வீட்டில் தங்கும்போது வந்த சம்பவங்களை யோசித்துப் பார்த்தாள்.வாழ்க்கையை தொலைத்துவிட்டு கைக்குழந்தையோடு நிழல் தேடி  வந்தவளுக்குத் தான் எத்தனை மனக்கசப்புகள்.கூடவே அவ்வப்போது எதிர்கொள்ளும் ஆண்களின் கழுகு கண்கள்.பரிதாபமான உச்சுக் கொட்டல்கள். வாழவெட்டி என்பதான முனுமுனுப்புகள்.ஒருவேளை அப்படி ஒரு சூழலிலே மாயா வளர நேர்ந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைக்கும் போதே உள்ளூர திக்கென்றது.

இங்கு அப்படியில்லை.தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும்படியான சூழல்.சுகுணா சித்தி, காமாட்சி அம்மா போன்ற அன்பான மனிதர்களுடன் தானே வாழ்கிறாள்.அதுவும் ப்ரியா,ஷர்மியின் நட்பு கிடைத்தெல்லாம் வரமாக எண்ணிக் கொண்டாள்.கடவுள் தன்னை அப்படி ஒன்றும் கைவிட்டுவிடவில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தூங்கினாள்.காலை 5 மணிக்கெல்லாம் எழுந்தவள் பால் வாங்கி வந்து காய்ச்சிக் கொண்டிருக்க கதவு தட்டபட்டது.

திறந்து பார்த்தால் சுகுணா கையில் ஏதோ பையோடு நின்றாள்.

என்ன சித்தி இது என

பாப்பா தூங்குறாளா ? இந்தா இது உனக்கு …? இது பாப்பாக்கு என்றபடி நீட்ட

என்ன இது என பிரித்துப் பார்த்தவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
எதுக்கு இதெல்லாம் ? என்றாலும் அழுதுவிட்டாள்.

நல்ல நாள் அதுவுமா…. அழாதம்மா .குளிச்சிட்டு புடவை கட்டிக்கோ என்று சுகுணா அங்கிருந்த அடுப்பில் கேசரி செய்ய ஆரம்பித்தாள்.

குழந்தையை சுகுணாவிடம் ஒப்படைத்து விட்டு காலை 6 மணிக்கெல்லாம் கம்பெனிக்கு சென்றாள்.

அன்புவுக்கு ரெகுலர் ஷிப்ட் மாற்றப்பட 9.15  அலுவலகம் வர காம்பவுண்ட் க்குள் நுழைந்ததும் செக்யுரிட்டி அவனை சோதித்துவிட்டு செக்யூரிட்டி  ரூமுக்குள அனுப்பினாள்.

நீலாக்கா ரெஜிஸ்டர்…என்றபடி பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்தவன் அப்போதுதான் கவனித்தான்.அழுத கண்களுடன் அங்கு நாற்காலியில்  அமர்ந்திருப்பது கவிதாவைப் பார்த்தவன் ஸ்தம்பித்து போனான்.

பார்த்தவனுக்கு அவளிடமிருந்து கண்களை பிரித்தெடுக்கவே கடினமாக இருந்தது.அடர்நீல நிற புடவை அவள் உடலை  தழுவியிருந்தது. இயற்கையாக அழகி தான்.அவள் எந்த அலங்காரமும் செய்து அவன் பார்த்ததில்லை.இப்போதும் அப்படித்தான்.ஆனால் இந்த புடவை அவளின் நிறத்துக்கு பொருத்தமாய் அமைய தேவதை போலிருந்தாள்.

நீலாக்கா சைன் பண்ணு என அழைக்கவும் தான் அவன் புவிக்கு வந்து சேர்ந்தான்.

என்ன உடம்பு சரியில்லையா…? ஏன் இஙக வேலை செய்யுற இடத்தை விட்டு இங்க வந்த…? என வினவ கவி நீலாவைப் பார்த்தாள்.

என்ன முழிக்கிறா …. ? என்று நினைத்துக் கொண்டு என்னக்கா ஆச்சு.எதுக்கு இந்தப் பொண்ண கூட்டிட்டு வந்த என கண்டிப்போடு கேட்டான்.கவியின் அழுத கண்கள் அப்படி பேச வைத்தது.

அத ஏன் நீ கேக்குற…? உன் மேனேஜர் வரட்டும் என சத்தம் போட்டாள்.உண்மையில்
நீலாவுக்கு அன்பு இப்படி கேட்கவும் வயிறு எரிந்தது.அவன் இதற்கு முன்பு கவியைப்  பார்த்து பிரமித்ததையும் கவனித்திருந்தாள்.

ஹே….ரீசன் தான கேட்டன்.அதுக்கு ஏன் இப்படி கத்துற…என்று கேட்க

ரீசன் தான் உங்க லைன் மேனேஜர் கிட்ட சொல்லிக்கறேன்.

அவருக்கு  இன்னைக்கு ஹெட் ஆபிஸ் ல மீட்டிங் இருக்கு.2 மணிக்குத்தான் வருவாரு.எதுன்னாலும் என்னைத் தான் பாத்துக்க சொல்லியிருக்காரு.என்னன்னு சொல்லு

………….

சரி நீ சொல்ல வேணாம்.கிளம்பி வா.

எங்க வரணும்? நான் எதுக்கு வரணும்?

எதுக்கா.அவங்கள கூட்டிட்டு வந்துஇங்க வச்சிருக்க. கேட்டா ரீசனும் சொல்ல மாட்ற.அந்த வேலையெல்லாம் யார் செய்றது? நீ வந்து பாரு என

நீலாவுக்கு கோபம் வந்து மூக்கு சிவந்தது.தன்னை வேலைப் பார்க்க சொல்ல இவன் யார் ? என்று.

இவ இன்னும் யூனிபார்ம் போட்டு வரலை. என சொல்ல

அவங்க கான்ட்ராக்ட்ல புதுசா சேர்ந்த யாருக்கும் யூனிபார்ம் தரலை.ஹெச் ஓ டீ  கிட்ட சொல்லியாச்சு.அடுத்த வாரம் வரை டைம் தர சொல்லியிருக்காரு.
அப்படியே பார்த்தாலும் எல்லாரையும் விட்டுட்டு இவளை மட்டும் ஏன் பிடிச்சு வச்சிருக்க. என சந்தேகமாக கேட்டான்.

இந்த பொண்ணு இன்னைக்கு ஏன் புடவை கட்டிட்டு வந்திருக்கு என

அன்பரசனுக்கு நீலாவை அறைந்து விடும் அளவுக்கு ஆத்திரம் அதை செயல்படுத்த முடியாததால் அதன் உக்கிரத்தை சொல்லில் காட்டினான்.ஏய்….பைத்தியம்.நம்ம கம்பெனியில பாதி  பொண்ணுங்க புடவையில தான் வேலைக்கு வராங்க.இதுக்காகலாம் பனிஷ் பண்ணுவியா.நம்ம கம்பெனி ட்ரெஸ் கோட்ல சாரி கட்டக் கூடாதுனு இருக்கா என்ன ? என எரிந்து விழவும்

இல்ல.இவ ஹிப் தெரியுற மாதிரி கட்டியிருக்கா என பொய் சொல்ல  அதுவரை அமைதியாய் இருந்த கவி எழுந்த சார் சார்….அப்படியெல்லாம் இல்லை. என அவசரமாக சொன்னாள்.

அவளை மீண்டும் கவனித்து பார்க்க அப்படி எதுவும் தெரியவில்லை.

அவளைப் பார்த்து சரி  நீ உன் இடத்துக்கு போய் வேலையைப் பாரு என்று அனுப்பி வைத்தவன் நீலாவிடம் திரும்பி நீ எதுன்னாலும் மேனேஜர் ட்ட பேசிக்க என்றுவிட்டு ரெஜிஸ்டரில் கையொப்பமிட்டான்.நீலாவுக்கு இதையெல்லாம் மேனேஜரிடம் சொல்லிவிடுவானோ என்று பயமாக இருந்தது.

சரியாக பத்து மணிக்கு எல்லாரும் கேண்டீனுக்கு செல்ல அதுவரை கவிதா ப்ரியா ஷர்மியிடம் பேசவேயில்லை.நீலா அவளை திட்டி கீழே அழைத்து செல்லும் போது அவர்கள் சிரித்துக் கொண்டே டாடா சொல்லி அனுப்பி வைத்தனர். கோபத்தில் கூட அழுகை தான் வந்தது அவளுக்கு.

இப்போது கேன்ட்டீனுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்து அங்கேயே நின்றாள்.ஷர்மியோ சாப்பாடு காலியாகிடும் வாடீ என இழுத்துப் பார்க்க ம்ம்கூம் அசைவதாய் இல்லை.

கண்ணினியில் மூழ்கிவிட்டு சற்று தாமதமாக எழுந்த அன்பு இவர்களை கீழே செல்லாமல் இங்கேயே நிற்கவும் ப்ரியாவைப் பார்த்து சாப்பிட போகலையா …? என்றான்.

அதற்கு ஷர்மியோ இவ வரமாட்றா ண்ணா…. கவியைக் காட்ட அதானப் பார்த்தன்.இல்லைணா முதல் ஆளா பந்தியில போய் ஒக்காந்திருப்பியே என கேலி செய்துவிட்டு
ஏன் பசிக்கலையா உனக்கு…?என கவியைக் கேட்க

அவள் இல்லை என்பதாய் தலையசைத்தாள்.

அதெல்லாம் பசிக்கும்.ஏதோ கோவமாக இருக்கா என ப்ரியா சொல்ல

கவியை நெருங்கி எதுக்கு கோவம் எனக் கேட்க அவளோ காலையில் நடந்ததை சொன்னாள்.இதை கேட்ட மூன்று பேரும் இதுக்கு அழுற…. என சிரிக்க கவி மூன்று பேரையும் முறைத்தாள்.

வர வர எல்லாத்துக்கும் அழ ஆரம்பிச்சிட்ட என ப்ரியா குறைபட

உன்னை அதுபோல திட்டி செக்யூரிட்டி ரூம்ல கூட்டிட்டு போய் வச்சா என்ன பண்ணுவ…?

ம்ம் பேன் ஸ்விட்ச் போட்டுட்டு  அங்கேயே  
பொர்த்திட்டு தூங்கியிருப்பா ….என அன்பு சொல்ல.ப்ரியா அதை ஆமோதித்தாள்.

நாங்கலாம் இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காதானு இருக்கோம்.இரண்டு மணிநேரம் உன்னை கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வச்சதுக்கு போய் இப்படி அழுற.என ஷர்மி கேட்க

கவி இப்படி யோசிக்கவில்லை.பின்னே கம்பெனியின் அத்தனை விதிகளையும் அந்த குட்டிச் சாத்தான்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டிருந்தது அவளுக்கு ஆச்சர்யமளித்தது.

வாங்க சாப்பிட போலாம் என்று ஷர்மி அழைக்க கவி தான் எடுத்து வந்த கேசரியை  அவளிடம் கொடுத்துவிட்டு உடன் நடந்தாள்.

அன்புவும் ப்ரியாவுடன் பேசிக்கொண்டே வர நால்வரும் கேண்ட்டீன் வந்தனர்.முதல் முறை பிரியாணியில் ஏமாந்தது போல் இப்போது ஏமாற மனமில்லாத ப்ரியா லன்ச் பாக்சில் உள்ள கேசரியை நான்கு பாகங்களாக சரிசமமாக பிரித்து தனது பங்கையும்  எடுத்துக் கொண்டு ஷர்மி பங்கையும் எடுத்து வைத்துக் கொண்டு அன்புவுக்கு தந்தாள்.

அவனோ உசாராத்தான் இருக்கிங்க என்று சிரித்து விட்டு தன் அருகிலிருந்த சின்ன பையனுக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு சாப்பிட்டான்.

அதன் பிறகு மதியம் வரை  ஷர்மியும் ப்ரியாவும் அடிக்கடி தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க தன்னிடம் அவர்கள் ஏதோ மறைப்பதை போல் உணர்ந்தாள் கவி.

என்னவென்று கேட்டாலும் ஒன்றுமில்லை என்பதைத்தான் திரும்ப திரும்ப சொன்னார்கள்.அடி போங்கடி என்றுவிட்டு அவள் தன் வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

வேலை முடியும் தருவாயில் மட்டும் ப்ரியா உன் ரூம் எங்க இருக்கு…? எனக் கேட்க என்ன திடீர்னு எனத் தோன்றினாலும் அட்ரெஸை சொன்னாள்.

பிறகு இரண்டாவது ஷிபட்க்கான ஆட்கள் வந்துவிட்டதும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் கவி இருவரையும் அழைக்க, இல்லை இன்னைக்கு நீ போ.
எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு பிரியா சொல்ல சரி நானும் வெயிட் பண்றேன் என்று கவி அங்கயே நிற்க இல்லை இல்லை உன் வேன் போய்டும் நீ போ.என்று அவளை துரத்திவிட கவிக்கு வித்தியாசமாய் பட்டது.எதுவும் சொல்லாமல் வீட்டிற்குச் சென்றாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here