நீயே என் இதய தேவதை_38_பாரதி

0
418

தட்டப்பட்ட கதவை திறந்ததும் சர்ப்பரைஸ் என்றபடி ப்ரியாவும் ஷர்மியும் உள்ளே குதிக்க கவி ஒருகணம் அதிர்ந்துபோனாள்.
பின்பு ஹே ….நீங்க எப்படி இங்க என்று சந்தோஷத்தில் இருவரையும் கட்டிக்கொள்ள என்ன  நடக்குது எனத் தெரியாமல் முழித்த குழந்தை தானும் தத்தி தத்தி நடந்து வந்து அம்மாவை கட்டிக் கொண்டது.

மாயாவை முதல் முறை பார்த்த  ஷர்மி அவளை தூக்கி கொஞ்ச மாயா அவளிடம் இருந்து தப்பித்து ஓடப் பார்த்தது. அவளா விடுவாள்? பாப்பா அப்படியே உன்ன மாதிரியே இருக்கு கவி என்று அவளை இழுத்து பிடிக்க
குழந்தை ம்மா அம்மா என்று கவியை நாடியது.

குழந்தையை பயமுறுத்தாத ஷர்மி என்றபடி ப்ரியா அவளை தூக்கிக் கொள்ள அவள் அனைப்பில் அடங்கிக்  கொண்டது.

நீ போய் மூஞ்சு கழுவிட்டு வா போலாம்.டைம் ஆச்சு கிளம்பு என்று கவியை அவசரப் படுத்தினார்களே தவிர எங்கு என்று இருவரும் சொல்லவில்லை.

நல்லவேளை  வீட்டுக்கு வீட்டிற்கு வந்தவுடன் சுடிதார் மாற்றவில்லை என்று எண்ணிக்கொண்ட கவி முகம் கழுவி தலையை மட்டும் மீண்டும் கலைத்து சீவினாள்.அதற்குள் பிரியா குழந்தைக்கு வாங்கி வந்த ட்ரெஸை, வளையல்,செயினை அணிவித்து, பொட்டு வைத்து அலங்காரம் செய்துவிட்டவள் தன் கையால் திருஷ்டி கழித்து முத்தமிட்டாள்.

எங்கே டீ போறோம்…இப்பயாச்சும் சொல்லுங்க என வற்புறுத்தி கேட்ட கவியிடம் கோவிலுக்கு போலாம் என சொல்ல அவள் கொஞ்சம் இங்கயே இருங்க என்று சுகுணாவிடம் சொல்லிவிட்டு வந்தாள்.

பக்கத்தில் தான் இருந்தது.அந்த சின்ன கோவில். கவியிடம் ஷர்மியும்  நீ போய் சாமி கும்பிட்டு வாங்க என

நீ வர்லையா …..

நான் இதோ வர்ரேன்….நீ முதல்ல போ என அனுப்பி வைத்தாள்.

அவர்கள் பிரகாரம் சுற்றி சாமி கும்பிட்டு வந்து பார்க்க சின்ன ஸ்டூலில் கேக்கை பிரித்து வைத்திருக்க அவர்கள் கம்பெனியில் வேலை பார்க்கும் சின்ன பையன்கள் நாலைந்து பேர் இருந்தனர்.அதில் இருவர்   குட்டி குட்டி மெழுகுவர்த்தி ஏற்றி கேக்கை அலங்கரிக்க ஒருவன் அதை புகைபடம் எடுத்தான் . இதைப் பார்த்தவுடன் எல்லாம் ப்ரியாவின் வேலை என்பது கவிக்கு புரிந்து போனது.

ஆம்.முன்பே கோவில் பூசாரியிடம் கேக் வெட்ட  அனுமதி கேட்டிருந்தாள்.

காதுகுத்து கிடா வெட்டு எல்லாம் நடக்கிற கோவிலில் பர்த் டே கொண்டாட  ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தவரோ ஜிகினா கிகினா லாம் கொட்டி வைக்கக்கூடாது.குப்பையெல்லாம் இருந்தா பெருக்கிட்டு போகணும்  என ஒற்றை நிபந்தனையுடன் அனுமதி தந்தார்.

ஷர்மி மாயாவுடன் விளையாடிபடி கவியை அழைத்து அங்கு வர கவிக்கு சந்தோசத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்போதும் போல் கண்ணீர் சொல்லாமலே வந்தது.இந்த முறை மிகுந்த சந்தோசத்தில்.அதை புரிந்தவளாகப்  ப்ரியா
நாங்க  இருக்கோம்டீ உனக்கு என்று கவியின் தோளை அணைத்துக் கொண்டாள்.

அழுததுலாம் போதும் பாப்பாவ கேக் வெட்ட  வைங்க என்று ஒரு பொடிசு சொல்ல வெயிட் பண்ணுடா…இன்னும் ஒரு கெஸ்ட் வரணும் என் ப்ரியா கவி யாரந்த கெஸ்ட் என தெரியாமல் குழம்பி போனாள்.

ப்ரியா பையன்களிடம் காசு கொடுத்து கேக்கை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வரச் சொல்லிவிட்டாள்.
பின் ஷர்மியுடன் அன்பரசனின் பைக்கில் தான் கவியின் மேன்சன் கென்றனர்.ப்ரியா உள்ளே கூப்பிட பாப்பாவை பார்க்க ஆசைதான் என்றாலும்  யாரேனும் ஏதாவது தவறாக பேசுவார்கள் என்ற பயத்தில் உள்ளே செல்ல மறுத்தான்.சரியென்று அவனிடமும் கோவில் வர சொல்லிவிட்டாள்.

லேட் ஆய்டுச்சா என்றபடி கோவிலுக்குள் நுழைந்த அன்புவை எல்லோரும் வியந்து பார்த்தனர்.பெரும்பாலும் அவனை யூனிபார்மில் பார்த்து பழகிய கவிக்கு ஜீன்ஸ் சர்ட்டில் இன்னும் இவன் அழகாய் இருப்பதாய் பட்டது. இமைக்க மறந்து பார்த்திருந்தாள் கவி.இருக்காத பின்னே? வெகு  நாட்களுக்குப் பிறகு தோற்றத்தில் அக்கறை எடுத்து கிளம்பி வந்திருக்கிறான்.பசங்களும் சூப்பர் ண்ணா என்று சொல்ல புன்னகையுடன் அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here