நீயே என் இதய தேவதை_39_பாரதி

0
378

நீண்டநேரத்திற்குப் பிறகு காதில் அடைத்துவைத்திருந்த கையை எடுத்தான் அன்பு.இத்தனை நேரம் வெளியில் நிற்க வைத்திருந்த அண்ணனை காய்ச்சி எடுத்திருந்தாள் சந்தியா.என்ன சொல்வான்…? நிமிடத்திற்கு ஒருமுறை மொபைலைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு  இன்றைக்கு மொபைலை பார்க்கவே தோன்றவில்லை.

சாரிடா….சாரிடா….கோவம் போச்சா உள்ளே போய் பேசுவோம் வா …வாங்க மச்சான் என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

வீடு இருந்த நிலையைப் பார்த்த சந்தியாவுக்கு இன்னும் அண்ணன் மேல் கோபம் கோபமாக வந்தது.இருந்தும் பேச வேண்டிய விஷயத்துக்காக கொஞ்சம் அமைதி காத்தாள்.

அப்போதைக்கு துடைப்பத்தை எடுத்து ஹால் வரையில் பெருக்கி சுத்தப் படுத்தினாள்.  இருவரையும் சோபாவில் அமரச் சொன்னாள்.

“டீ போட்றேன் மச்சான்” என அன்பு எழுந்திருக்க புவனேஸ்வரனுக்கு உள்ளுக்குள் கிலியானது.உன் தங்கச்சிய கட்டுன பாவத்துக்கு இதை வேற  அனுபவிக்கனுமாடா ? என்று எண்ணிக் கொண்டான்.

நீ  பேசிட்டு இரு…நான் டீ போட்டு மூனு பேருக்கும் எடுத்துட்டு வரன்.என்று சந்தியா எழுந்து கிச்சனுக்கு  போக அவள் கணவனுக்கு கொஞ்சம் நிம்மதியானது.

புவனேஷ் என்ன பேசப் போகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்தபடியே அமரந்திருந்தான்.கிச்சனிலிருந்து புவனேஷிடம் “பேசுங்க” என்றபடி சைகை காட்டினாள் சந்தியா.அண்ணனுக்குனதங்கைக்கும்  இடையில் பாவமாக வந்து மாட்டிக் கொண்ட புவனேஷ் அது வந்து மச்சான்…என்று திக்கித் திணறினான்.
என்னதான் செய்வான் அவனும்?

எங்கண்ணன் வாழ்க்கையத்
தொலைச்சிட்டு அங்க தனியா இருந்து கஷ்டப்படுது.ஆனது ஆகிப் போச்சு னு  அவனுக்கு  ஒரு வாழ்க்கை அமைச்சி கொடுக்க யோசிச்சிருக்கிங்களா நீங்க ?
.அது முகத்தை பார்க்கவே பாவமா இருக்கு என்று கண்ணீர் வடித்தவள்

நம்ம விட்டா அவருக்கு யாரு இருக்கா? நீங்களே இப்படி அமைதியா இருந்தா எங்கண்ணன் கடைசி வரை தனியாவே இருந்துருமோ?னு பயமா இருக்கு என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

    மனைவி அழுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அவனும் மச்சானிடம் சம்மதம் கேட்டு அவனுக்காக பெண் பார்த்து தன் சொந்த செலவிலே திருமணம் செய்து வைக்கிறேன் என்று வாக்களித்தான்.

அவள் கொடுத்த பில்ட் அப்பில் தனது மச்சான் தேவதாஸ் மாதிரி சுற்றிக் கொண்டிருப்பான்.அவனிடம் சென்று எத்தனை நாளைக்கு இப்படி அவளையே நினைத்து சோகத்திலே உழன்று கொண்டிருக்கப் போறீங்க என்றெல்லாம் பேச தன்னை தயார் செய்து கொண்டு வந்து பார்த்தால் அவனோ முன்பை விட உற்சாகமாக ஸ்டைடலாக இருப்பது போலத் தான் தோன்றியது.

இன்னும் சொல்லப் போனால் புவனேஷை விட பொலிவாக இருந்தான்.

அந்த நேரம் என்ன மச்சான் இளைச்சிட்டிங்க போல… வேலை ரொம்ப அதிகமோ ? என்று அன்பரசனே பேச்சை ஆரம்பித்து வைக்க,

கொஞ்ச நாளாத்தான் என்று வெளியில் சொன்னவன் உள்ளுக்குள்
ஏன் டா கேக்கமாட்ட நீ .உனக்கென்ன கல்யாணம் ஆனாலும் சிங்கிளா ஜாலியா சுத்திட்டிருக்க….பொண்டாட்டினு ஒருத்திய கட்டி மேய்ச்சா கஷ்டம் தெரியும்  என்று எண்ணிக் கொண்டவன் இதற்காவது இப்படி பழிவாங்கவாவது  இவனுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று மனதில் சபதமே எடுத்துக் கொண்டு வாயை திறக்க

நீங்க ஏங்க இவன்கிட்ட பேச இப்படி பயப்படுறீங்க.நானே பேசிக்கறேன்.நீங்க டீ குடீங்க  என்ற  மனைவியின் சொல்லை தட்டாதவனாக திறந்த வாயை டீ சாப்பிட பயன்படுத்திக் கொண்டான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here