நீயே என் இதய தேவதை_40_ பாரதி

0
450

சந்தியா என்ன பேசப் போகிறாள் என்பதை முன்னமே யூகித்திருந்தான் அன்பு.அவன் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நிறைய முறை போனில் பேசும் போது நாசுக்காய் கேட்டிருக்கிறாள்.அன்புவோ அப்படியே பேச்சை திசைமாற்றிவிடுவான்.
இதற்கு மேல் இது வேலைக்காகாது என்று நேரடியாகவே மச்சானை அழைத்து வந்திருக்கிறாள் என்பது புரிந்தாலும் அவளாகவே ஆரம்பிக்கட்டும் எனறு பொறுமை காத்தான்.

என்னைக்கோ ஒரு நாள் தான் நான் வீடு எப்படி இருக்கு பாத்தியா ?

…..

எத்தனை நாளுதான் இப்படியே தறுதலையா சுத்துறதா எண்ணம்?

………….

உன்னை அப்படியெல்லாம் காலம் முழுசும் தனியா விட முடியாது.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்தாலும் ஒன்றும் புரியாதது போன்ற பாவனையுடன் புவனேஷை பார்த்தவன் என்னாச்சு மச்சான் ? என்க

என்னை ஏண்டா பாத்து வைக்கிற எனும் படி புவனேஷ் கொடுத்த ரியாக்ஷனில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

அவன் விளையாடுகிறான் என்பதை புரிந்து கொண்ட சந்தியாக்கு எரிச்சல் தோன்றியது.விளையாடும்படியான பேச்சா இது…? என்று. ஆதலால் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

இன்னும் எத்தனை இப்படி தனியாகவே இருப்ப, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் என்றவளைப் பார்த்து

நான் பார்த்து வளர்ந்த வாண்டுக் குட்டி எப்படி பெரிய மனுஷி போல பேசுது என்று எண்ணம் தோன்றினாலும்
சரி பண்ணிக்கிறேன் எனச் சாதாரணமாக  சொன்னாள். டீ குடித்து கொண்டிருந்த புவனேஷ் க்கு நம்ப முடியாத  அதிர்ச்சியில் புறையேறியது.
சந்தியாவுக்குமே இது அதிர்ச்சிதான்.
அண்ணன் இன்னொரு திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டான்.அவனை சம்மதிக்க வைக்க பெரிய அளவில் சிரமப் பட வேண்டியிருக்கும் என்றவளுக்கு அவன் கூறிய பதில் இன்ப அதிர்ச்சி.

நெஜமாவா ண்ணா என்ன

நிஜமாத்தான். என்று கூறியதில் சந்தியாவை விட புவனேஷ் தான் அதிக சந்தோசப்பட்டான்.இந்த விஷயத்தில் மனைவியுடனான பிண்க்குகளை சரி செய்து கொள்ளலாம் என்று எண்ணி.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல்  ஆனா ஒரு கண்டிஷன் என அன்பு இழுக்க….
புவனேஷ் க்கு சப்பென்று ஆனது.இந்த வில்லங்கம் பிடிச்சவன் ஏதோ சொல்லி சந்தியாவை ஏமாற்றப் போகிறான் என்பது மட்டும் புரிந்தது.சில நேரங்களில் அன்புவை சந்தியாவை விடவும் புவனேஷ் புரிந்து வைத்திருந்தான்.

என்ன என்ன கண்டிஷன் என்று சந்தியா ஆர்வமானாள்?

சொல்றன் டா…. நீ முதல்ல டீ குடீ….. நான் போய் ப்ரெஷ் ஆயிட்டு வேரன் எனச் சொல்லி அவனது அறைக்குள் நுழைந்துவிட்டான்.

அவன் எப்போது வெளியே வருவான் என்று  கதவுகளையே பார்த்தபடியே  காத்திருந்து அவனிடம் என்ன  கண்டிஷன் ….? என்று கேட்டாள்.

அதற்கு அவன் சொன்ன பதிலில் சந்தியா தன்னைத் தானே நொந்து கொள்ள வேண்டியதாய் இருந்தது.
அமைதியாக ஷோபாவில் புவனேஷின் அருகில் வந்து அமர்ந்தான் அன்பு.

சந்தியா அப்படி என்ன கண்டிஷன் என் அவசரப் படுத்த

கொஞ்சம் பொறு.சொல்றேன் டா.

சீக்கிரம் சொல்லு

இவள் விடப் போவதில்லை என்று தெரிந்துகொண்டவன் தனது மனதில் இருந்ததை கூறினான்.

அதாவது….டா. நடந்த விஷயங்களால எல்லோருக்கும் கஷ்டம்தான் னாலும்  நான் இதுல நேரடியாக பாதிக்கப் பட்டு இருக்கேன்.எவ்வளவோ அவமானப் பட்டுட்டேன்.இன்னமும் கூட  இதில இருந்து மீண்டுடல.என் ஆபிஸ் லயே எனக்கு பின்னாடி என்னைப் பத்தி கேவலமாத் தான் பேசி சிரிப்பாங்க.ஆனா இது பத்தி  பேசுறவங்க கிட்டயிருந்து தப்பிக்க என்னை ரொம்ப மோசமானவனா காட்டியிருக்கேன்.இரண்டு வருஷமா எனக்குனு நம்ம  சொந்தக்காரங்க மத்தியில இருக்க நல்ல பேரையெல்லாம் நானே கெடுத்து வச்சிருக்கேன். அதையும் மீறி எனக்கு யார் பொண்ணு கொடுப்பாங்க னு யோசி

அதெல்லாம் நான் பாத்துக்கறேன்  அண்ணா.நடந்ததை கெட்ட கனவா நெனச்சு மறந்திடு…என சந்தியா இடைமறித்து சொல்ல

கொஞ்சம் பொறு…நான் பேசி முடிச்சிடுறன்.நான் கெட்ட கனவா நினைச்சு மறந்திடலாம்.ஆனா நம்ம சொந்தக்காரங்க.அவங்க எல்லார்க்கிட்டேயும் எனக்கு கல்யாணம்னு சொல்லி எப்படி போய் நிப்பேன்.

சரி.அவங்க கூட வேணாம் உன் வீட்ல எனக்கு கல்யாணம் சொன்னா குடும்பத்தோடு வந்து வாழ்த்துவாங்களா ?  வாழ்த்த் கூட வேணாம்.என் கடந்த காலத்தை பற்றி மறுபடியும் அவமானப்படுத்த மாட்டாங்கனு என்ன நிச்சயம்? யோசித்துப் பாரு என

ஆம்.இப்போதும் சந்தியா இங்கு வந்திருப்பது அவளது அத்தைக்கு தெரியாது.அவள் வீடடில் அன்புவுடனான உறவையே முறித்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்கள் தான்.ஆனால் அப்படி பார்த்து இவனை இப்படியே விட்டால்  அது இன்னும் மோசமான எதிர்விளைவுகளைத் தானே ஏற்படுத்தும்?  என்று எண்ணிக் கொண்டவள் கடைசியா என்ன சொல்ல வர குரலில் கோபத்தை வரவழைத்துக் கொண்டாள்.

இது மட்டும் இல்லைடா.

இனனும் இருக்கட்டும்.நீ முடிவா என்ன சொல்ல வர னு மட்டும் சொல்லு என சத்தம் போட

இப்பவும் சொல்றேன்.நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொல்லலை.நான் சொன்ன எல்லாப் பிரச்சனைகளையும் தவிர எனக்குள்ளேயும் நிறைய மனக்கசப்பு இருக்கு.இத்தனையும் தாண்டி இப்போ கல்யாணம் தேவையா னு தான் இருக்கு என்றவனுக்கு என்ன பதில் சொல்வது தெரியாது சந்தியா விழித்தாள்.

ஆனா இதையெல்லாமல் மீறி  ஏதாச்சும் ஒரு பொண்ணப்  பார்க்கும்போது அவ கூட வாழந்தே ஆகனும் னு தோணும் போது மற்ற பிரச்சனைலாம் வெறும் தூசு னு உணர்ந்தா   நான் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் போது அவன் மனத்திரையில் ஒரு உருவம் வந்து சாக்லேட் கொடுத்தபடி சிரித்தது.

சந்தியாவுக்கு இவன் என்னதான் சொல்ல வருகிறான் என்றே புரியவில்லை.புவனேஷோ தெளிவா குழப்பிட்டான் என்று முனுமுனுக்க அன்பு இதையெல்லாம் கவனிக்காது ஒருத்தியின் நினைவில் மூழ்கிப் போயிருந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here