நீயே என் இதய தேவதை_41_பாரதி

0
505

அன்பு இங்க வா.உன் லைன் பொண்ணுதான இத்தனை நாள் ஆப்சென்ட் ஆகியிருக்கா.ஏதும் விசாரிக்கலையா நீ?  என்ற மேனேஜரின் கேள்வியில்
ஏற்கனவே கடுப்பிலிருந்தவன் ஆத்திரத்தின் உச்சம் அடைந்தான்.நான் ஏன் சார் விசாரிக்கணும். அது என்ன என் லைனு.நீங்க சூப்பர்வைசர் வேலையையும் சேர்த்து தலையில கட்டுறதால நான் சூப்பர்வைசர் கிடையாது.வினோத் அண்ணனக் கேளுங்க.இல்லைனா அவங்க கான்ட்ராக்ட் ல கேளுங்க. வீணா என்ட்ட கத்தாதீங்க என்று அவரை வறுத்தெடுத்து விட்டு  அவனது வேலையைப் பாரக்க சென்றான்.
மேனேஜருக்கே ஒன்றும் புரியவில்லை.ஏனென்றால் அவர் சாதாரணமாகத் தான் அவனை இப்படி கேட்டார்.  அதற்கு அவன் சொன்னது எல்லாம் உண்மை தான் .ஆனால் அவனுக்கு ஏன் இத்தனை கோபம் என்று விளங்கவில்லை.”பைத்தியக்காரன்”என்று முனுமுனுத்து விட்டு அவரும் கணினியை நோக்கத் தொடங்கினார்.

அவன் ஏன் இப்படி எல்லாரிடமும் எரிந்து விழுகிறான் என்று அந்த பைத்தியக் காரனுக்கே  விளங்கவில்லையே.
மாயா பிறந்தநாள் முடிந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஒரு வாரமாக கவி வேலைக்கு வரவில்லை.முதல் நாள் விடுமுறையின் போது ஏதோ உடம்பு சரியில்லை என்று நினைத்துக் கொண்டவன் இரண்டாம் நாள் ப்ரியா விடம் கேட்டான்.பின் அவள் பணியில் சேரும்போது கொடுத்திருந்த போன் எண்ணை அழைத்துப் பார்த்தான்.அந்த எண் உபயோகத்தில் இருப்பது போலத் தோன்றவில்லை.
என்னாச்சு உன் ப்ரென்ட்க்கு.வேலைக்கு வந்து ஒரு மாசம் கூட முடியலை.அதுக்குள்ள இத்தனை லீவு எனக் கேட்க 
அவளோ தெரியலை ண்ணா என்றாள்.உண்மையும் அதுதான்.
அப்போ இத்தனை நாள் என்ன தான் பழகுன.அட்லீஸ்ட் அவ போன் நம்பர் கூட இல்லையா உன்கிட்ட என்று காரணமே இல்லாமல் பிரியாவிடம் ஷர்மியிடம் எரிந்து விழுந்தான் அன்பு.
சரி எப்படியும் சம்பளம் வாங்கவாவது வருவாள் என்று நினைத்தான்.அப்படியும் நடக்கவில்லை.
அன்புவை விட ப்ரியாவுக்கு கவியின் மீது அதிக கோபம். கவி விடுமுறையான மூன்றாவது நாளில் அவளது மேன்சன் அறைக்குச் சென்று பார்த்தாள்.பூட்டப்பட்டிருந்த கதவுகள் தான் வரவேற்றது. இத்தனை நாட்கள் யாரிடமும்  சொல்லாமல் கொள்ளாமல் அப்படி எங்குதான் சென்றிருப்பாள்.அப்படி செல்ல முடிகிறதென்றால் இத்தனை நாள் அவள் தங்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் தான் என்ன ? என்று நிறையவே யோசித்தாலும் அடிக்கடி அவளுக்கு என்னவாயிற்றோ என்று சில நேரம் பயம் சூழ்ந்து கொள்ளும்.அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது என்று சொல்லி தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள்.
அன்பு கொஞ்ச நாளாக நிறுத்தியிருந்த குடிப் பழக்கத்தை மீண்டும் கையிலெடுத்தான்.சந்தியா தன் திருமணத்தை பற்றி பேசிய நாள் அவளை சமாளித்து அனுப்பினாலும் அவனுள்ளும் அதே கேள்விதான் ஒலித்தது.

இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இந்த வெறுமையும் தனிமையும்.குடி போதையில் அன்பரசனின்  மனம் தனக்கு தானே கேள்விகேட்டு பதிலும் சொல்லிக் கொண்டிருந்தது.
எத்தனையோ பணியாளர்கள் இரண்டு மூன்று வாரங்கள் கூட விடுமுறை எடுத்து திரும்பி வரவில்லையா?  கவிதா  மீது ஏன் இத்தனை கோபம்? அவள் மீது மட்டுமா ? அவள் கூட பழகியவர்களையும் அவளை பற்றி தன்னிடம் கேள்வி கேட்பவர்களையும் கூட அல்லவா தாளித்துக் கொண்டிருக்கிறான்.
ஏன்…? 
அவர்களெல்லாம் முன்னமே காரணம்  சொல்லிவிட்டு விடுப்பு எடுப்பார்கள்.இப்படியா எதுவும் சொல்லாமல் தொலைந்து போவார்கள்? 
சரி அப்படியே அவள் தொலைந்து போனால் தான் உனக்கு என்ன? 
அவனால் பதில் சொல்ல முடியவில்லை.கவியின் பிரிவு ஏன் தன்னை இத்தனை இயல்புக்கு மாறாய் நடக்க வைக்கிறது என்பது புரியவில்லை.
யாரும் தன்னிடம் நெருங்கி விடக் கூடாது என்று தனக்கே வேலி போட்டு கொண்டவன் தான் இன்று ஒருத்திஅருகில் இல்லை என்பதற்காக தடுமாறிக் கொண்டிருக்கிறான்.அவள் என்ன  ஆண்டாயிரம் காலம் கூட வாழ்ந்தவளா?  அல்லது ஆயுள் முழுவதும் உடன் வரப் போவளா? என்று அவனது மனமே கேலியாய் சிரித்தது.
பாரத்தே நாள் முதலே அவள் மீது மனம்  கொள்ளும் ஆர்வத்தை வெறும் ஈர்ப்பென்றே வகையிலே அடக்கி விட்டான்.  ஆனால் அது அப்படி அல்லவோ என்று இப்போது அவனுக்கு  தோன்றுகிறது.சரி அது அல்ல என்றால் வேறென்ன ? என்ற கேள்விக்கு பதிலில்லை அவனிடம்.
சரி என்று ஒன்று உண்டு.தவறென்று ஒன்று உண்டு ஆனால் மனமோ அதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது.என்ன செய்வது இந்த காதல் எனும் இராட்சத உணர்வு எந்த நாம் வகுத்த எந்த  கட்டமைப்புக்குள்ளும் அடங்குவதில்லையே.
அவளது கணவனை விட்டு பிரிந்திருக்கிறாள்.அது நிரந்தரமான பிரிவா ? என்று அவனுக்குத் தெரியாது.அவளது கடந்த காலம் பற்றி அவளாய் சொன்னால் ஒழிய அவளது தோழிகளுக்கு கூட தெரியாது.மாயாவைத் தவிர அவளுக்கு உறவென்று யாரும் இருக்கிறார்களா என்பது தெரியாது.இப்படி தீடிரென தொலைந்து போக அவளுக்கு ஏதும் காரணம் இருக்குமோ? தெரியாது.இப்படி  ஏகப்பட்ட தெரியாதுகளுக்கு  பிறகு அவளுக்கு ஏதும் ஆகியிரு௧்குமோ….? என்றதன் தெரியாது  தான் மனதில் பயம் சூழ்ந்து கொஞ்சமாய் பதட்டமுறச் செய்தது.
அவளுக்கு .மனம் அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டால் மட்டும் போதும்,அவளது பாதுகாப்பு மட்டும் உறுதியாய் தெரிந்துவிட்டால் போதும்  என்று அழுதது.என்ன இருந்த போதும் அவள் மீண்டும் வருவாள் என்று உள்ளுணர்வு ஒரு புறம் சொல்லிக் கொண்டேயிருந்தது.

“எங்க தாண்டி போன….”? என்று முனுமுனுத்துக் கொண்டான்.

இப்படியாக யாரிடம் சொல்லாமல் தொலைந்து போய்  எல்லோரையும் தவிக்கவிட்டவள் இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்கு வந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here