நீயே என் இதய தேவதை_44_பாரதி

0
425

வீட்டுக்குள் வந்து அமர்ந்ததிலிருந்து ஆனந்த் தன்னை குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்த அன்பரசன் என்னடா அப்படி பாக்குற என

உன் நடவடிக்கையெல்லாம் பாக்கும் போது எனக்கென்னவோ உன் மேல சந்தேகமாக இருக்கு.

சந்தேகமே வேண்டாம்.நீ நினைக்கிறது உண்மைதான் என

துள்ளிக்குதித்தவன் நம்பவே முடியலைடா பங்காளி.யாருடா அந்த பொண்ணு ? எப்போ கல்யாணம். என ஆர்வமாக வினவ

பொறுமையா கேளு என்றுவிட்டு கவியைப் பற்றிக் கூற

ஆனந்த் அமைதியானான்.

என்னாச்சு….டா என வினவ

அவ புருசன் இறந்து போய் இரண்டு வாரம் தான் ஆகியிருக்கு என்று ஆரம்பித்தவனை

நான் என்ன நாளைக்கே  என்னை கல்யாணம் பண்ணிக்க ன்னு அவகிட்ட போய்  நிக்கப் போறனா என்ன ….? அதெல்லாம் பொறுமையா சொல்லுவன் என்றவனிடம்

கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன்
அவ புருசன் செத்ததுல ரொம்ப சந்தோசம் போல உனக்கு என்று கேட்டு விட்டு அவன் கோபிப்பானோ என்று அவனை நோக்க

அன்பரசனோ சாதாரணமாக அப்படி கூட இருக்கலாம் என்று ஆனந்தை அதிரச் செய்தான்.

டேய்…. என்றவனிடம்

உண்மையா டா.கவியை கல்யாணம் பண்ணிக்கினும் எனக்கு தோணுனதுனால  அவன் செத்து போய்டணும் னு நினைக்கலை.மத்தபடி நான் இதுவரை பார்க்க கூட இல்லாத ஒரு மனுசன் இறந்து போனது அவ்வளவோ சோகமா லாம் இல்லைடா.கவி கஷ்டப் படுறான்னு அவளை பாக்கும்போது பாவாமா இருந்தது.தவிர ரூட் க்ளியர் னு ஒரு பக்கம் சந்தோசமாக இருக்கிறதும் உண்மைதான் என்று மனதை மறையாமல் சொல்லிவிட

ஆனந்திற்கு நிதர்சனமென்று பட்டது.
எப்பேர்ப்பட்ட நல்ல மனிதனும் சில நேரங்களிலும் சல்லித் தனமானவர்ள் தான் என்று நினைத்துக் கொண்டான்.

சரி அதெல்லாம் விடு.உன் ரூட்டும் க்ளியர் ஆய்டுச்சாமே.அப்பா போன் பணணாரு என

சொல்லிட்டாராடா….என்று நித்யாவுடனான கல்யாணப் பேச்சில்  வெட்கப்பட்டவனை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.ச்சைக்  பாக்க முடியலைடா என்று வாந்தி வருவது போல சைகை செய்தவனை  முறைத்தவன்…

டேய் ….என்றுஆனந்த்  அடிக்க வர  சிரிப்புடனே அவனை தடுத்து அப்படியே உட்கார வைத்த அன்பரசனோ
சொல்லுடா என

என்ன சொல்றது.

இல்லடா.நான் இவ்ளோ கலாட்டா பண்ணியும் விசாலி அத்தை பொண்ணு கொடுக்க சம்மதிச்சிட்டாங்களா…? என

நீ அவ்ளோ கலாட்டா பண்ணதால தான் பங்காளி அத்தை சம்மதிருச்சிருக்கு.முதல்ல உன் மேல கோவப்பட்டதுக்காக நித்யா கூட சாரி சொல்ல சொன்னா….என்று அவன் கூற

ஒன்னும் புரியலையே என்றவனுக்கு முழுக்கதையை சொல்ல ஆரம்பித்தான் ஆனந்த்.

ஆனந்த் வீட்டில் தந்தை மெதுவாக திருமணப் பேச்சை எடுக்க, நித்யாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வம்படியாய் நின்றான்.அவருக்கும் ஏற்கனவே மகனது காதல் தெரிந்திருந்ததால் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை.

கொஞ்சம் பேசி அவனை மாற்றிப் பாரக்க எண்ணினார்.அது முடியாமல் போகவும் நித்யா  வீட்டில் பெண் கேட்க ஒப்புக் கொண்டார்.அவர்கள் மறுத்துவிட்டால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றுவிட்டார்.

அன்று அன்பு நித்யா- ஆனந்த் காதலை பொதுவில் போட்டுடைத்து விட உறவினர்களில் யாரும் நித்யா கேட்டு வரவில்லை.அந்நேரம் ஆனந்த் வீட்டில் பெண் கேட்க,கொஞ்சம் தயங்கினாலும் நித்யாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதை கருத்தில் கொண்டு பச்சை கொடி காட்டிவிட்டார்.

என்று அத்தனையும் சொல்லிழிட்டு ஆனந்த் அன்பரசனின் முகம் பார்க்க

அவனோ “ப்ளான் பண்ணி தான அடிச்சன்.ச்ச்ச எப்படி மிஸ் ஆகிடுச்சு”என்று சத்தமாக யோசிக்க

அருகில் என்ன கிடைக்கிறது எடுத்து அவன் மீது வீசலாம் என்று தேடியவனைக் கண்டு ஓட ஆரம்பிக்க ஆனந்தோ டேய் நில்லுடா….இன்னைக்கு உனக்கு இருக்கு என்றபடியே துரத்தினான்.

ஒரு வாரம் முடிந்திருக்க கவி முன்பு போல அதிகம் சிரிப்பது இல்லையென்றாலும் ஓரளவு தேறியிருந்தாள்.வாய் ஓயாது பேசும் ப்ரியாவுடன் ஷர்மியுடன் இருப்பவள் அவ்வப்போது அவர்களின் செயலில் மெலிதாக புன்னகைப்பாள்.அன்பரசனும் அதை கவனித்து வந்தான்.

முதல் ஷிப்ட்  வேலை முடிந்து ப்ரியாவும் ஷர்மியும் அன்பரசனை கேண்ட்டீனில் மறித்து நிற்க வைக்க

என்ன வேணும் என்று கேட்டவனிடம்,

அண்ணா புது போன் வாங்கிட்ட போல சொல்லவேயில்லை என ஷர்மி இளித்து வைக்க

இந்த குட்டிச் சாத்தான் எப்படி மோப்பம் பிடிச்சது என்று அவளை சந்தேகமாகப் பார்த்தவன் ஆமா அதுக்கென்ன இப்போ? என்றபடி கையில் இருந்த செல்போனை அணைத்து சட்டைப் பையில் வைத்தான்.

ச்சீ ச்சீ இந்த போன்லாம் எங்களுக்கு வேண்டாம் என ப்ரியா சொல்ல

நான் எப்போ உங்களுக்கு தர்றதா சொன்னேன் என அவன் கேட்டான்.

அது வந்துண்ணா…..என இழுக்க

சீககிரம் சொல்லித் தொலை.அடுத்த ஷிப்ட்க்கு பசங்க வந்திருவாங்க என

உன் பழைய போன் என்னாச்சு.ஏன் போன் மாத்துன என ஷர்மி கேட்க

போன்ல சின்னதா ஒரு பிரச்சனை.சரி செய்றதுக்கு பதில் புதுசு வாங்கிட்டேன்.அதுனால என்ன

உன் பழைய போன் தாயேன்.நாங்க சரி  செஞ்சுக்கிறோம் என கெஞ்ச

ப்ரியாவிடம் மொபைல் இருப்பது அவனுக்குத் தெரியும்.ஆதலால் ஷர்மிக்கு தான் போன் கேட்பதாக நினைத்து  இந்த வயசுல உனக்கு எதுக்கு போன்…?  அதெல்லாம் தர முடியாது. போ.அப்படியே வேணும்னாலும் பேஸிக் மாடல் எதுனா யூஸ் பண்ணு.  என சொல்லி துரத்தப் பார்க்க

ஷர்மி அருகில் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு தனது ஷூ- சாக்சில் மறைத்து வைத்திருந்த தனது பூத்தும் புது ரெட் மீ போனை எடுத்துக் காட்டியவள் பாத்தீங்களா என் கிட்ட ஏற்கனவே போன் இருக்கு என வியந்து போனான் அன்பரசன்.

பல்பு வங்கினாலும் எல்லாம் உன் வீட்ல சொல்லணும். செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க என்று சொன்னவன் .

அப்போ யாருக்கு போன் என வினவ

கவிக்கு என்ற பிரியா அவகிட்ட போன் இல்லையாம்.அதுனால நாங்க வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் பேசிக்க முடியலைல அதான் அவளுக்காக பழைய போன் யாரும் விலைக்கு தராங்களா னு கம்பெனி முழுக்க கேட்டுப் பாத்தன்.எதும் செட் ஆகலை.

உன் பழைய போன் தாயேன்.பைசா மாச மாசம் தரேன் என

கவி என்றதும் யோசிக்கவே இல்லாமல் தர முடிவு செய்தவன் போன் ஓகே.சிம்க்கு என்ன பண்ணுவ என என் சகெண்ட் சிம் சும்மாதான் இருக்கு அது போன்ல போட்டு யூஸ் பண்ணிக்கட்டும்.

நாளைக்கு எடுத்துட்டு  வரன்.ரீஸெட் பண்ணி யூஸ் பண்ணிக்க சொல்லு என்றுவிட்டு நகர்ந்தான்.ப்ரியாவின் அந்த போண் நம்பர் அவனுக்கும் தெரியும் என்பதால் மனம் உள்ளூர குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here