நீயே என் இதய தேவதை_45_பாரதி

0
378

அன்று மாலையே தனது பழைய செல்போனை கடையில் கொடுத்து பழுது பார்த்து அடுத்தநாள் ப்ரியாவிடம் கொடுத்துவிட்டான்.

ப்ரியா கவியிடம் உனக்குத்தான் என்று கொடுக்க

அவளோ விலை ரொம்ப அதிகமா இருக்கும் போலயே யாரோடது இது…? என

என் பழைய போன் தான் என்ற
ப்ரியா கவிக்கு அந்த மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.அதன் பிறகென்ன பணிநேரத்திற்கு பிறகு வாட்ஸ் அப்பிலும் கான்பரன்ஸ் காலிலும் அவர்களின் அரட்டை தொடர

மொபைலை கொடுத்தவனோ தினம்  தினம் அந்த போன் நம்பரை பார்த்தபடி அழைக்கலாமா வேண்டாமா என்று தயங்கி கொண்டிருந்தான்.

அன்று கவி பணிக்கு  தாமதாய் வந்து அவசர அவசரமாய் மாடிப்பறியேற
கையில் ஏதோ பேப்பரை பார்த்துக் குழம்பிக் கொண்டே  அன்பு கீழிறங்கி வர தெரியாமல் இருவரும் இடித்துக் கொண்டனர்.

முதலில் ஏதோ பையன் என்று நினைத்து பாத்து போயேன்டா …என்று சலித்துக் கொண்ட அன்பு தன் தேகம் உணர்ந்த மென்மையில் எதிரில் இருப்பது யாரென்று பார்க்க கவி.

அன்றொரு நாள் இப்படித்தானே தெரியாமல் இடித்த ஒரு பெண்ணை திட்டிவிட்டுச் சென்றான்.இப்போது என்ன சொல்ல போகிறானோ என்று பயந்து அன்பரசனைப் பார்க்க

கவியின் கலங்கிய கண்களைப் பார்த்தவனோ பயந்து போனான்.ஏற்கனவே இவ என்னை பொம்பளைப் பொறுக்கி ரேஞ்சுல தான் நினைப்பா.தெரியாம இடிச்சதுக்கு என்ன நினைப்பாளோ என்றபடி அவளிடம் சாரி கேட்பதற்குள்

கவியின் சாரி சார்.தெரியாம இடிச்சிட்டேன் என்று தயங்கி நிதானமாக கூற

அசடு வழிய  இல்லை இல்லை.நான்  தான் பாக்காம வந்து மோதிட்டேன்.நான் தான் சாரி சொல்லனும். சாரி என்று புன்னகைத்து விட்டு நகர்ந்தவனை ஆச்சர்யமாக பார்த்தாள் கவி.

தனது இடத்திற்கு சென்றாள்.ப்ரியாவுடன் ஷர்மியும் அங்குதான் பேசிக் கொண்டிருந்தாள்.மேனேஜர் ரவுண்ட்ஸ் போயிருப்பார் போல.

அவர்களிடம் கீழே நடந்ததை சொல்லி நல்லவேளை அன்பு சார் என்னை திட்டவேயில்லை என்று சொல்லி சிரிக்க

தெரியாமல் இடிச்சதுக்கு எதுக்கு திட்டணும் என்று
ஷர்மி புரியாமல் ப்ரியாவை பார்க்க “பைத்தியம் “என்று கவியை கைக்காட்ட இருவரும் சிரித்துக் கொண்டனர்.கவி இதையெல்லாம் கவனிக்காது வேலையப் பார்க்க ஆரம்பித்தாள்.

அங்கு இன்னொரு பைத்தியமோ ரிஜக்சன் மெட்டீரியல் அதிகமா இருக்கு என்று மேனேஜர் வறுத்தெடுக்கும் போது சிரித்துக்கொண்டிருந்தது.

டிரிம்மிங் செக்ஷனிலிருந்து வந்த மெட்டீரீயல்களின் எண்ணிக்கை கொண்டு பார்க்ககும் போது ஏற்றுமதிக்கு தயாராகிருந்த பொருட்களின் எண்ணிக்கை ரொம்பவும் குறைவாக இருப்பதை கவனித்த மேனேஜர் ரிஜக்சன் பாக்சை ஆராய சொன்னார்.அதில் எல்லாரையும்  விடவும் அசெம்பிள் லைனில் ரிஜக்சன் அதிகமாக இருக்க வினோத்தையும் அன்புவையும் நிற்க வைத்து காய்ந்து கொண்டிருந்தார் .

அவர்களும் அந்த லைனில் இருந்த எல்லாரையும் அழைத்து கேட்க முதல் ஷிப்ட் பணியாளர்கள் இரண்டாம் ஷிப்ட் பசங்களை குற்றம் சாட்ட  இரண்டாவது ஷிப்ட் பணியாளர் முதல் ஷிப்ட் பணியாளர்களை குற்றம் சாட்டினர்.

மேனேஜரோ வினோத் தையும் அன்பரசனையும் பிடித்துக் கொண்டார்.
மெட்டீரீயல் என்ன சும்மா கிடைக்குதா? உங்களுக்கு? அதுல இருக்க ஒரு சின்ன நெட்டோட விலை என்ன தெரியுமா டா ? எம்.டி.க்கு தெரிஞ்சா  என்ன ஆகும் தெரியுமா…?
என்றவரை கண்டு வினோத் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று பார்க்க
அன்பரசனோ ஏதோ மயக்க நிலையிலே இருந்தவன் தனது “சாரி சார்”என்று கவி சொன்னது போல் சொல்லிவிட்டு சிரித்தான்.

மேனேஜரின் பிபி ஏகத்துக்கும் ஏறி என்ன எழவு டா இது….? இவனுக்கு என்னடா ஆச்சு என வினோத்திடம் கேட்டுவிட்டு

டேய் நான் இங்க காட்டுகத்தலா கத்திட்டு இருக்கன்.கொஞ்சமாக கூட மதிக்காம சிரிச்சிட்டிருக்கியா என அவர் அவனை பிடித்து உலுக்க சூழலுணரந்து சீரியஸாக சாரி சார் என்றான்.

சாரி சொன்னா ரிஜக்சன் எல்லாம் சரியாப் போய்டுமா? கேள்வி கேட்டா சிரிச்சா வைக்குற..

………..

இவனை என்ன பண்ணலாம் என்று யோசித்து விட்டு அவனை பார்த்து
பொங்கல் நெருங்குற நேரம் நம்ம புது ஆர்டர் எதும் எடுக்குறதில்லை.எல்லோருக்கும் வேலை கம்மியாதான் இருக்கும்.க்வாலிட்டி செக் பண்ற வேலையை சித்ரா பாக்கட்டும். என்றவரை அப்போ ணான் என்ன பண்றது எனும் படி பார்க்க

இந்த ரிஜக்ட் மெட்டீரியல் எல்லாத்தையும் க்ரைண்டிங்க்கு அனுப்ப முடியாது.அதுனால நீயே பசங்க கூட இருந்து ரீவொர்க் பண்ணி கொடு.அதை அவங்க மறுபடி அசெம்பிள் பண்ணட்டும் என நாட்டாமை போல் தீர்ப்பு சொன்னார்.

நேற்று வரை ஓரிடத்தில் நிற்காமல் சுழன்று கொண்டே எல்லாரிடமும் வேலை வாங்குபவன் இன்று தனக்கு அருகில் நின்று சுத்தியலை தட்டிக் கொண்டு நிற்பதை பார்க்க சிரிப்பை அடக்க நினைத்தும் முடியாமல் ப்ரியா சிரித்துவிட்டாள்.

அவள் சிரித்ததும் அவளைப் போன்ற நினைத்த கவியும் சிரித்துவிட இரண்டு பேரும் என்ன நினைத்து சிரித்திருப்பார்கள் என்று அறிந்த அவனோ சுத்தியலை தூக்கி கொண்டு அடிப்பது போல் வர ப்ரியா மேலும் சிரித்தாள்.

அவள் மீது கோபம் வந்தாலும் அவ மட்டுமா சிரிக்கிறா…? மொத்த லைனுமே உன்னைப் பாத்துதான் சிரிக்குது … என மனக்குரல் கேட்க

இடவலமாய் தலையசைத்து விட்டு அந்த மேனேஜர் கிட்ட ஒரேஒரு முறை சிரிச்சி வச்சுட்டு நான் படுற கஷ்டம்  இருக்கே. மொத்த இமேஜையும் ஒரு நாள்ல டேமேஜ் பண்ணிட்டான் என்றவனை

சார்  நீங்க மைண்ட் வாய்ஸ் னு நினைச்சிட்டு சத்தமா பேசிட்டு இருக்கீங்க என சொல்லி கவி சிரிக்க அதை கேட்டு அவனுக்கு இடப்புறம் இருந்த ப்ரியாவும் சிரிக்க ஆரம்பித்தாள்.

கவியை அலட்சியமாய் பார்த்துவிட்டு ப்ரியாவிடம் திரும்பியவன் புள்ளைபூச்சிக்செல்லாம் கொடுக்கு முளைக்கும் நான் என்ன கனவா கண்டேன்? எல்லாம் அந்த சுண்ணாம்பு தலையன சொல்லணும் க்ளாஸ்ல பேசுற சின்ன  பசங்களுக்கு பனிஷ்மென்ட்டா டீச்சர் பொண்ணுங்க பக்கத்துல ஒக்கார வைக்குற மாதிரி ரெண்டு பொம்பளை பிள்ளைகளுக்கு நடுவில நிக்கவிட்டு மானத்தை வாங்குறான் பாரு என்று தலையில் அடித்துக் கொள்ள

திரும்பவும்  அங்கு சிரிப்பு சத்தம்.

அங்கு வந்த வினோத் என்ன இவ்ளோ சத்தம் ஒழுஙகா மூனு பேரும் வேலையை பாருங்க? பேச்சு தான் அதிகமா இருக்கு என்று போறபோக்கில் அன்பரசனையும் சேர்த்து சொல்லிவிட்டு போக “அண்ணா இங்க வாயேன் என்று அன்பு  பாசமாக அழைத்தான்.

என்னடா என்று அருகில் வந்தவனது காலை தனது காலால் ஓங்கி மிதிக்க வினோத் வலியில் ஆ என்று கத்தப்போக ஏற்கனவே உன் மேல செம கடுப்பில இருக்கேன்.இந்த பக்கம் வந்து அதிகாரம் பண்ற வேலை வச்சிகிட்ட கொன்றுவேன்.ஓடிப் போய்டு என்றவனிடம் மேலும் மிதி வாங்காது அங்கிருந்து ஓடிவிட்டான் வினோத்.

மேனேஜர் அதையெல்லாம் கவனித்தாலும் கண்டுகொள்வதாய் இல்லை.பின்னே வயதான காலத்தில் அவர் காலை மிதித்து வைத்தால் என்ன செய்வது….?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here