நீயே என் இதய தேவதை_46_ பாரதி

0
477

பொங்கலுக்கு நிறைய பணியாளர்கள் அவர்களது சொந்த ஊர் சென்று வருவார்கள். ஆக ஜனவரி மாதம் மட்டும் நிறைய பேர் விடுப்பிலிருப்பார்கள்.எனவே ஜனவரி மாதத்திற்கு முன்பு மட்டும் கம்பெனி புதிய ஆர்டர் எதையும் எடுக்காது.எனவே தான் அன்பரசனை இப்போது ரீவொர்க் செய்ய சொல்லி தண்டனை தர முடிந்தது மேனேஜரால்.

அவனுக்கு முதலில் கொஞ்சம் சூப்பர்வைசர் கெத்து குறைந்து பணியாளனாக வேலை செய்வது சங்கோஜமாக இருந்தது.பின்பு அது ஒரு மாதிரி பழகிப் போனது.அதிலும் கவியின் அருகாமை மிகுந்த சந்தோசத்தை அளித்தது.

ஒருநாள் சுபியை பற்றி  ஆரம்பித்து அவளது வால்தனங்களை பற்றி சிரித்துக்கொண்டே ப்ரியாவிடம் சொல்லிக் கொண்டிருந்த அன்புவை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் கவி. சுபியை பற்றி பேசும்போது மட்டும் அவன் கண்கள்  மின்னுவது போலிருந்தது.ஏதோ உள்ளுணர்வு தோன்ற அன்பரசன் சட்டென்று  கவியிடம் பார்வையை
திருப்பி  என்னவென்று புருவம் உயர்த்தி கேட்க ,

அவன் இவ்வாறு கேட்பான் என்று எதிர்பார்க்காதவள் அவனது பார்வையில் தடுமாறிப் பின்  இல்லை சார் ஒன்னுமில்லை  என்று உளறிக் கொட்டுவிட்டு  மீண்டும் தன் வேலையைப் பார்க்க அந்த சில நொடிகள் அன்பரசனுக்கு வானில் பறப்பதை போன்றதொரு உணர்வை தந்தது.

அன்பரசனே கூட வந்து வேலை பார்த்து அரட்டையடித்து கொண்டிருக்க பேசக் கூடாதென்று  கண்டிக்க யாரும் இல்லாததில் கவி ப்ரியா ஷர்மி மூவரும் சந்தோசமாக, உற்சாகமாக திரிந்தனர்.எல்லாம் பொங்கல் விடுமுறை முடிந்து அரவிந்தன் மீண்டும் பணியில் சேரும் வரைதான்.

பொங்கல் விடுறை எல்லாம் முடிந்த பின்னர் வேலை அதிகமாகிவிட அன்பு மீண்டும் தரம் பார்க்கும் பணியையும் சூப்பர்வைசர் வேலையையும் மாற்றி மாற்றி பார்க்க ஆரம்பித்தான்.

அப்போது ஒருநாள் கவியின் ரிஜக்சன் பாக்சை செக் செய்தவன் என்ன ப்ரியா கூட சண்டையா…? என கேட்க

ஆமா…ஆனா அது எப்படி உங்களுக்குத் தெரியும்.அவ தான் சொன்னாளா
என்று முறைப்புடன் கேட்டாள்.அன்பு அவளுடன் வேலை பார்க்கும் பொழுது  நன்றாக பேசி பழகிவிட்டதால் இப்பொழுதெல்லாம் அவனிடம் பயம் இல்லாது இயல்பாக பேசினாள்.

அவதான் சொல்லணும் னு இல்லை.என்றவனை புரியாது பார்த்தவள் பின்ன எப்படித் தெரியும் என்று குழப்பத்தோடு கேட்க

இன்னைக்கு உன் கவுண்ட்டிங் தாறுமாறா இருக்கு.ரிஜக்சனும் கம்மியா இருக்கு என சொல்ல

என்ன சார் சம்மந்தமே இல்லாம பேசுறீங்க…

சம்மந்தம் இருக்கு.நீயும் அவளும் சண்டை போட்டாத்தான உங்க வேலையவே ஒழுங்கா பாக்குறீங்க.அத வச்சு கெஸ் பண்ணேன் என்று சொல்லிவிட்டு சிரிக்க கவி அவனை முறைத்தாலும் அவன் சொல்வது நூறு சதவீத உண்மை என்பது அவளுக்கு புரிந்து தான் இருந்தது.

சரி என்ன பிரச்சினை சொல்லு.நான் ஏதாவது செய்ய முடியுதா னு பாக்குறேன் என

உங்கலுக்கு அரவிந்த் அண்ணா தெரியுமா?

நம்ம ப்ளோர் ல தான வேலை பாககுறான்.அவனை தெரியாம எப்படி மேல சொல்லு என்றவனிடம்

நான் சொல்றதை வச்சு நீங்க ப்ரியாவை தப்பா நினைக்க கூடாது என்று பீடிகையுடன் ஆரம்பித்தவளை என்னவென்று பார்க்க தயக்கத்துடன் கவி அரவிந்தனை விரும்புறதா சொல்றா என சொல்லி அவன் முகம் பார்க்க

அவனோ சாதாரணமாக இது உனக்கு இப்பத்தான் தெரியுமா ? என்று சொல்ல

உங்களுக்கு முன்னாடியே தெரியுமா…?

நம்ம கம்பெனியில எல்லோருக்கும் தெரியும்.

அரவிந்தனோட வயசுத் தெரியுமா? அவருக்கு கல்யாணமாகி பொண்டாட்டி இரண்டு குழந்தைகள் இருக்காங்கனு தெரியுமா…? என கேட்க

தெரியும்  என்பதாய் தலையசைத்தான்.

       தெரியுமா…?என்று அதிர்ந்தவள்  அப்போ நீங்க ஏன் அவளை முன்னமே கண்டிக்கலை.இது தப்புனு சொல்லலை.என்று இடம் மறந்து சற்று சத்தமாய் பேச

கத்தாத.மேனேஜர் பாக்கிறாரு.பொறுமையா பேசு கவி என்றவன் அவள் அமைதியாக இருக்க

ப்ப்ச்ச் உனக்கு முன்னாடியே எனக்கு ப்ரியாவை நல்லாத் தெரியும்.நான் அவளை கண்டிச்சிருக்க மாட்டேன்றியா.எத்தனையோ தடவை பொறுமையா எடுத்து சொல்லிருக்கேன்.சில தடவை நல்லா திட்டியும் இருக்கன்.அப்பவும் அவ மாறல.வேற என்ன பண்ண முடியும் என்னால என்று அவன் அலுத்துக் கொள்ள

எடுத்து சொல்லியும் கேக்கலைனா அறைஞ்சாச்சு திருத்தியிருக்கணும்ல என்றவளிடம்

ஏய்…லூசு.நான் என்ன அவளுக்கு கூடப் பொறந்த அண்ணனா ? அவமேல ஓரளவுக்கு மேல என்னால எப்படி உரிமையெடுத்துக்க முடியும்.
அது போக பட்டுதான் திருந்தணும் னு அவ விதியில இருந்தா யாரால மாத்த முடியும்  என்றுவிட்டு நகர்ந்தவனை இயலாமையோடு பார்த்தாள் கவி.

அவன் சொன்ன பட்டுதான் திருந்தணும் அவள் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.இந்த வயதில் ஒருவேளை ப்ரியா வழி மாறி போய்விட்டால் என்னென்ன கஷ்டங்களை பட நேரிடும்.அதன் பிறகு திருந்துவதில் தான் என்ன லாபம் என்று அவள் சிந்தை எதையெதையோ யோசித்து மேலும் பயமுறுத்த அன்பரசனின் உதவியை நாடினாள்.

அவளுக்கும் வேறு வழியில்லை.அவனைத் தவிர ப்ரியா அந்த கம்பெனியில் யாரையும் மதித்து பேசி அவள் பார்த்தது கிடையாது.அன்பரசனிடம் மட்டுமே அவளுக்கு அன்பும் மரியாதையும் உண்டு என்று அறிந்து அவனிடம் சென்றாள்.

பணிநேரம் முடிந்தும் அங்கேயே நின்றுகொண்டிருந்தவளிடம் அன்பு என்னவென்று கேட்க அவளோ உங்களை பார்க்கத் தான் வெயிட் பண்றேன் என அவனுக்கு கேட்கும் போதே மயக்கம் வந்தது. மீண்டும் வானில் பறப்பது போல தோன்றியது.

பிறகு கவி ப்ரியாவிடம் இன்னொரு தடவை சொல்லி பாருங்க என  வானில் பறந்து கொண்டிருந்தவனை அப்படியே தரையில் விழுந்தான்.

இவ விட மாட்ட போலயே.நான் கூட வேற ஏதோ நினைச்சு ரொம்ப சந்தோசப்பட்டுட்டன் என்று முனுத்தவனை பார்த்து உள்மனம் கேலியாக சிரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here