நீயே என் இதய தேவதை_47_பாரதி

0
468

என்ன சார்… என்றவளைக் கண்டு

ஹான் ஒன்னுமில்லை.நீ என்ன சொல்லிட்டிருந்த

ப்ரியா கிட்ட இன்னொரு முறை பேசி பாருங்க சார் என

சற்று முன்னர் நிகழ்ந்த ஏமாற்றத்தின் சலிப்பில்  ப்ப்ச்ச்…அதெல்லாம் என்னால முடியாது கவிதா . நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு. என அவளை விரட்ட அவளுக்கு கோவம் வந்தது.

என்ன சார் நீங்க இப்படி பொறுப்பில்லாம பேசுறீங்க.அவ இப்படியே பண்ணிட்டு இருந்தா அவ வாழ்க்கை என்னவாகுறது? உங்களுக்கு கீழ வேலைப் பாக்குற சின்ன பசங்க தப்பு பண்ணா சொல்லி திருத்த மாட்டீங்களா…? என்று கோவத்தில் எதையெதையோ பேசிக் கொண்டிருப்பவளைப் பார்க்க சிரிப்பு வந்தது அன்புவுக்கு.

ஓஓஓஓ….. மேடம்க்கு கோவம்லாம் வருமா…? சரிங்க மேடம்.என் வேலையை பார்க்க என் கம்பெனி எனக்கு சேலரி தருது.நீங்க சொல்ற மாதிரி அந்த தப்பு பண்றவங்கள  திருத்துற வேலையப் பாக்க நீங்க சம்பளம் தருவீங்களா…? என்றுவிட்டு சிரித்தவனை கண்டு மனதிற்குள் கருவிக் கொண்டு வெளியில்  முறைத்து வைக்க

ஏய் என்ன என்கிட்ட ஹெலப் கேட்டுட்டு என்னையே முறைக்கிற….உனக்காக கொஞ்சம் யோசிச்சு பாக்கலாம் நெனச்சேன்.இனிமே முடியாது.கிளம்பு என

சார் சார் ப்ளீஸ் சார்     சாரி சார்……என்று கெஞ்சியவளைப் பார்க்க  பாவமாக இருக்க “ம்ம்க்கும்” என்று தொண்டையை செருமிக்கொண்டவன் சரி சரி. மூஞ்சியை அப்படி வைக்காத.அவ இந்த விஷயத்துல மாறுவா ன்ற நம்பிக்கை எனக்கு இல்லை.ஆனா  உனக்காக அவகிட்ட 1234 வது தடவையா இதப் பத்தி பேசிப் பாக்குறன்.எனக்காக நீ என்ன செய்வ என்று அவன் சாதாரணமாக கேட்க
புரியாது முழித்தவள் என்ன சார் என

நான் உனக்காக கவி கிட்ட பேசுறன்.நீ எனக்காக என்ன செய்வ என்று வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நிதானமாக சொன்னான்.

அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.நான் என்ன செய்யணும் சார்..? என்று குழப்பமா கேட்க

நான் சொல்லவா….?என்பவனை ஆராய்ச்சி கண்களோடு நோக்கினாள்

முன்ன மாதிரி  நெத்தியில பொட்டு வை.என்றவனைக் கண்டு விரக்தியாய் புன்னகைத்தாள்.

என்ன சிரிக்குற…? நீ லீவு போட்டு மறுபடி வந்ததிலிருந்து பாக்குறன் நெத்தியில பொட்டு வைக்கிறதில்லை.ரொம்ப பார்மலிட்டீஸ் பாப்பாங்களா உங்க வீட்ல என கேட்க

அப்படியெல்லாம் இல்லை சார்.நாங்க காரியம் எல்லாம் முடிச்சிட்டு ஊருல தங்கும் போது சித்தி கொஞ்ச நாள் வரை பொட்டு வைக்காத.ஊருல எதாச்சும் சொல்வாங்க னு சொன்னாங்க.இங்க வந்தும் அதே பழகிடுச்சி என்றுவிட்டு வரேன் சார் என்று விடைபெற்று நகர்ந்தவளை  கண் பார்வையிலிருந்து மறையும் வரை  பார்த்துக் கொண்டிருந்தான்.

வேனில் ஏறிய கவிக்கு குழப்பம் சூழ்ந்த மனநிலை.அரவிந்தன் இரண்டு மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த அன்றே ஷர்மிக்கு முகம் சரியில்லை.

அது ஏன் பிறகுதான் கவிக்கு புரிந்தது. ப்ரியாவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்தது.வேலை நேரத்தில் கூட ப்ரியா தனியாக சென்று தேவையே இன்றி அரவிந்திடம் அடிக்கடி பேசிவிட்டு வந்தாள்.அரவிந்தும் அப்படி தான்.ப்ரியா இருக்கும் இடம் வந்து வழிந்து கொண்டிருப்பார்.போகும் போதும் வரும்போதும் அரவிந்தன் ப்ரியாவை உரசிவிட்டு செல்வதையும் அவளும் அதற்கு எதும் சொல்லாமல் வெட்கப்படுவதையும்  பார்க்கும்பாது கவிக்கு அவளை இழுத்து வைத்து அறைந்தால் என்னவென்று தோன்றும்.

இவர்களது பழக்கத்தினால்  ப்ரியாவுக்கு முன்னால் அவளிடம் நன்றாக பேசுபவர்கள் கூட அவள் இல்லாத நேரத்தில் அவளைப் பற்றி ரொம்பவும் கொச்சையாக பேசிக் கொண்டனர்.இதை கவனித்த கவி அன்றே ப்ரியாவிடம் இதை பற்றி கேட்க

ஆமா டீ அவரை விரும்புறேன் என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.

அவருக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைங்க இருக்கு. அவரைப் போய் எப்படி என

நான் என்ன அவரை கல்யாணம் பண்ணிக்க போறன் னா சொன்னன்.என்று ப்ரியா அசால்ட்டாக கேட்க கவியும் ஷர்மியும் தான் அதிர்ந்து போனார்கள்.

எனக்கு அவரப் பிடிக்கும்.அவர் கிட்ட பேசப் பிடிக்கும்.வீட்டிற்கு போய்ட்டா அங்க அவர்கிட்ட பேச முடியாது.அதான் இங்க பேசுறேன்.அதைத் தாண்டி ஒன்னும் இல்லை டீ என் ப்ரியா சொல்ல

இந்த கம்பெனியில எல்லோரும் எப்படி உனக்கு பின்னாடி என்னென்ன பேசுறாங்க தெரியுமா…? என்று ஷர்மி சீற

அதப் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

கவியும் தொடர்ந்து முயற்சித்து ப்ரியாவிடம் இது தவறென்று சொல்ல புரிய வைக்கப் பார்க்க அவளோ விடக்கொண்டனாய் இருந்தாள்.

நீ சொல்றதுலாம் எனக்கு புரியுது கவி.நான் பண்றது தப்புனு எனக்குத் தெரியும்.  ஆனாலும் அவர்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலை . நான் அப்படித்தான்.என்னை இப்படியே விட்டுடேன். ப்ளீஸ் என்றவளை கண்டு பரிதாபமாக தான் இருந்தது.

அப்படியும்  ஷர்மியும் கவியும் ப்ரியாவிடம் வாக்குவாதம் செய்ய அது முற்றிப் போய் ஒருநாள் ஷர்மி உனக்கு எங்களை விட அவர் தான் முக்கியம்னா எங்க கிட்ட பேசாத.  எங்க கூட சேராத என்று சொல்ல

என்ன ப்ளாக்மெயிலா…?

அப்படியே வச்சுக்க.ஆனா உன்னை மெரட்ட லாம் சொல்லலை.இனி அவர்கிட்ட பழக்கம் வச்சிக்கிட்டா நெஜமாவே நாங்க உன் கூட பழக மாட்டோம், பேச மாட்டோம் என

அலட்சியமாக “உங்க இஷ்டம்” என்றுவிட்டு போய்விட்டாள் ப்ரியா.

ப்ரியா ஏன் இந்த விஷயத்தில் இத்தனை பிடிவாதமாக இருக்கிறாள்.தெரிந்தே தவறு செய்கிறேன் என்று தைரியமாக சொல்பவளை என்ன செய்ய….? என்று யோசித்து கொண்டே வீட்டை அடைந்தாள்.

ப்ரியாவிடம் இதனை பற்றி எப்படி பேசுவது அன்பரசன்  என்று யோசித்துக் கொண்டிருக்க மொபைலில் ப்ரியா 2 காலிங் என்றழைத்தது.

ஆன் செய்து ஹலோ சொல்லு என்று  என்றவன் ஹலோ சார் என்று எதிர்பக்கத்தில் கேட்ட பெண் குரலில் இன்பமாய் அதிர்ந்தவன் மொபைலில் இருந்த கான்டாக்ட் பெயரை மறுபடி ஆராய்ந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here