நீயே என் இதய தேவதை_48_பாரதி

0
411

அன்பு மறந்தே போயிருந்தான்.ப்ரியாவின் இன்னொரு சிம்மைத் தான் கவி பயன்படுத்துகிறாள் என்பதை.

கவி தன்னை போனில் அழைத்தாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் அவனை சார் என்று அழைப்பது அவள் மட்டும் தானே. செல்போனில் பேசினாலும் அவள் குரல் அடையாளம் கொள்ளும் படிதான் இருந்தது.ஒருமுறை தன்னைத் தானே கிள்ளிப் பார்த்து கொண்டான்.

பெயருக்கு கூட வலிக்குமோ என்றவாறு கவிதா….வா என்று நிதானமாக என்று கேட்டவன் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது.

ப்ரியா கிட்ட பேசுனீங்களா சார் என்ற ஒற்றை அவை அத்தனையும் கொன்று போட்டாள் கவி.

மனம் சுணங்கிப் போனவன் அமைதியாய் இருக்க

சார் சார் நான் பேசுறது கேக்குதா….

சொல்லு….என்றான் அசுவாரஸ்யமாக.

அது வந்து  சார் நான் இப்போதான் படிச்சேன்.ஒருசில பொண்ணுங்களுக்கு தன்னோட அப்பா போல வயசுல இருக்க ஆண்கள் மேல ஒரு அன்பு, பாசம்,ஈர்ப்பு இதெல்லாம்  இருக்குமாம்.இதைத்தான் அவ காதல் ன்னு நினைச்சிட்டு அவர் பின்னாடி சுத்திட்டிருக்கா.

ஒரு ரிசர்சே பண்ணியிருப்ப போல ……
வேற எதாச்சும் இருந்தா சொல்லு.இன்ட்ரெஸ்டிங் என்றவனை

சார் .எனக்கு இந்த ப்ரியா பொண்ணு பண்றதையெல்லாம் நினைச்சா  தூக்கமே வரமாட்டேங்குது.

அந்தப் பொண்ணு இருக்கட்டும்.நம்ம பொண்ணு என்ன பண்ணுது …..என்று ஏதோ நினைவில்  கேட்டுவிட உள்மனம் “அச்சச்சோ” என்றது..

ஹான் என்ன சார்

ஹப்படா நல்லவேளை கேக்கலை என்று நினைத்துக் கொண்டு உன் பொண்ணு என்ன பண்ணுதுனு கேட்டேன் என்றவனுக்கு

ஓஓஓ…அவளா அவ இப்போதான் சாப்டு தூங்கிட்டா.அதிருக்கட்டும் சார்.நீங்க ப்ரியா கிட்ட பேசுனீங்களா என்ன சொன்னா….? என்றாள் கவி விடாது.

கவீ…. என்று மென்மையாக அழைத்தவன் இன்னைக்கு  எனக்கு வொர்க் ரொம்ப அதிகம்.பொங்கலுக்கு அப்றம் பர்ஸ்ட் ப்ராஜெக்ட் டெலிவரி  போயாகணும் ன்ற டென்சன்.அதுனால தலைவலி.சித்ராக்கா வும் தேர்ட் ப்ளோருக்கு போய்ட்டாங்க.நிறைய நேரம்  ஒரே இடத்துல நின்னு வேலை பாத்ததுல கால் வலிக்குது.கழுத்தும் வலிக்குது.எனக்கு ரொம்ப முடியலை
என்று சொல்லிக் கொண்டு போனான்.

அவள் ஒன்றும் டாக்டர் இல்லை என்றும் தனக்காக எதையும் செய்யப் போவதில்லை என்றும் அவனுக்கும் தெரியும். ஆனாலும் பிரியாமானவர்களிடத்தில் தானே பாரத்தை பகி்ர்ந்து கொள்ளவும் பலவீனத்தை வெளிக்காட்டவும்  முடியும்.

உடல் நலம் சரியில்லாத போது  தாயிடம்
இன்னும்  அக்கறை தேடும் குழந்தை போல அவனது இந்த மென்மையான குரல் மனதை ஏதோ செய்தது.அவள் அமைதியாக அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.இது எல்லாம் மாயமோ என்று அவளுக்கே தோன்றும்படி

அதனால நான் நாளைக்கு ப்ரியாகிட்ட பேசட்டுமா என்று அவன் கேட்கும் போது அவன் குரலில் முன்பிருந்த தெளிவு வந்திருந்தது.சற்று குழம்பி போனவள் சரிங்க சார் என்றவள்

சம்பிரதாயமாக நீங்க  சாப்டீங்களா…என்று கேட்டாள்.

சாப்பிடணும் என்று சலித்துக் கொண்டவன் ரவை உப்புமானு ஒன்னு ட்ரை பண்ணேன்.போஸ்ட்டர் ஒட்டுற பசை வந்திருக்கு. பாக்கவே கொஞ்சம் பயமாருக்கு. இருந்தாலும் இதை தான் சாப்பிட்டாகணும். என்று அவன் இயல்பாக பேச

கவி நகைத்தாலும் உள்ளூர அவன் மீது கொஞ்சம் கருணை தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நீ சாப்ட்டியா…

ம்ம்

நாளைக்கு உனக்கு பர்ஸ்ட் ஷிப்ட் ல.எதையும் யோசிக்காம போய் தூங்கு.எல்லாம் நாளைக்கு சரியாய்டும் னு நெனச்சிக்கோ.

நெஜமாவா

ஹா…ஹா…என்று நான் ரொம்ப நாளா இப்படித்தான் நினைச்சு தூங்குறேன் குட் நைட்.என்றுவிட்டு போனை அணைத்து வைத்தான்.இன்றைக்கு ஏதோ புதிதாய் ஒரு  வசந்தம் தழுவியது போல நிம்மதியாய்  உறங்கிப் போனான்.

கவிக்கு அன்புவுடனான உரையாடலில்  இறுதியில் எல்லாம் சரியாகிடுவிடும் என்ற நிம்மதி பிறக்க உறக்கத்தை தழுவினாள்.

முருகன் கோவில் மண்டபத்தில் யாருக்காகவோ தனியா காத்திருந்தான் அன்பரசன்.நிமிடத்திற்கு இருமுறை தனது கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டவனுக்கு சலிப்பு தோன்றியது.

முன்னர் ஆனந்தை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றவன் விவாகரத்து பற்றித் தான் பேசினான்.

உனக்கு இஷ்டமோ இல்லையோ விவாகரத்திற்கு உண்மையான காரணத்தை தான் குறிப்பிடுவேன்.இரண்டாவது உன் அம்மா வீட்டில் போட்ட நகை சீர் எல்லாம் ஏற்கனவே அவர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டதால் நமக்குள் பணம் தொடர்பாக எந்த சம்மந்தமும் இல்லை.அதை எதிர்பார்க்காதே என்று தன்னால் முடிந்த அளவு பொறுமையாக பேசிவிட்டு வந்தான்.

அதற்கு பின்னரும் ஏன்  தன்னை தொடர்பு நேரில் பேச வேண்டும் என்றாள் என்பது புரியவில்லை.நேரமாகியும் அவள் வரவில்லை என்பதை சரி கிளம்பலாம் என்று எழுந்த நேரம்  அவள் வருவதைப் பார்த்தான்.

சற்று தூரத்தில் அவனை நோக்கி வருபளது தோற்றத்தை பார்க்க இத்தனை நாள் கோபம், ஆத்திரம்,ஏன் கொலை செய்துவிடும் அளவு இருந்த வெறியெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.உடல் பாதியாய் இளைத்து கருத்து போயிருந்தாள்.அவள் முன்பிருந்த தோற்றத்தை நினைத்து பார்த்தவனுக்கு தன்னாலே அவள் கருணை தோன்ற அதை மறைத்துக் கொண்டு இவள் உன் வாழ்க்கையை மொத்தமாய் அழித்தவள் என்று தனக்குள்ளே சொல்லி கோபத்தை வரவழைத்துக் கொண்டான்.

இல்லை.இப்போதான் வந்தேன்.நான்தான் முன்னாடியே பேச வேண்டியதெல்லாம் பேசிட்டன்ல.அப்புறம் எதுக்கு என்னை வர சொன்ன.நான் பேசுனதுல்ல எந்த மாற்றமும் இல்லை.

……..

அவளது அமைதியை சகிக்க முடியாதவனாய்
எதுன்னாலும் சீக்கிரம் சொல்லு.எனக்கு வேலை இருக்கு. என நழுவப் பார்த்தான்.ஆம் அவளது தோற்றத்தின் கண்டபின் அவள் வாழ்வு அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்றது புரிந்தது.அதை புரிந்தபின் அவன் கோபத்தை பிடித்து வைத்திருக்க முடியவில்லை.ஆகையால் அங்கிருந்து சீக்கிரம் நழுவி விடப் பார்த்தான்.

நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க நினைச்சேன்.என்றவளது குரல் உடைந்தது.

ப்ப்ச்ச்….நான் கிளம்பட்டுமா..கவனமாக அவளது முகம் பார்ப்பதை தவிர்த்தான்.

நான் ஏன் இப்படி செஞ்சேன் னு கேட்க மாட்டீங்களா…?

தப்பு செய்தவங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்.அது அவங்களுக்கு நியாயமா கூட இருக்கும்.அதை இப்போ தெரிஞ்சிக்கிறதுல எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லைனு நினைக்கிறேன்.

……. அவள் அமைதியாய் இருக்க

விரக்தியாய் சிரித்துக் கொண்டவன் நீ கொல்ற ரீசன் னால என் அம்மா எனக்கு திரும்ப கிடைக்க போறாங்களா.இல்லை நான் பட்ட அவமானம் லாம் இல்லைனு ஆகிடப் போகுதா……

அவன்  அம்மா என்றததுமே அவளுக்கு அழுகை வந்துவிட இடம் பொருள் பார்க்காமல் அங்கேயே கதறி அழதுவிட்டாள்.

அன்பரசனோ பதறிப் போய்  ஏய்…எதுக்கு இப்போ அழுற….என கண்களை சுற்றப்புறத்தை நோக்கி சுழல விட்டவன் எல்லோரும் தன்னை ஒரு மாதிரியாக பார்ப்பதை கண்டு நிறுத்து கீதா…எல்லாம் நம்மளத் தான் பாக்குறாங்க …  என்ற அதட்டலும் வேலை செய்யாதிருக்க அழுகையை நிறுத்தப் போறியா இல்லையா என சத்தம் போட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here