நீயே என் இதய தேவதை_49_பாரதி

0
435

அழுகை அடங்கி விசும்பிக் கொண்டிருந்தவள் “என்னை மன்னிச்சிடுங்க அன்பு நான் இப்படியெல்லாம் நடக்கும்னு நெனச்சு பண்ணல” என்றவளிடம்

கோபத்தை காட்ட முடியவில்லை.நடந்தத இனி மாத்த முடியாது.விடு என்றவன் ஆனாலும் உங்கப்பாவே உன்ன கம்பெல் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும் கல்யாணத்துக்கு அட்லீஸ்ட்  கல்யாணத்துக்கு அப்புறமாவது என்னை பிடிக்கலைனு என்கிட்ட நேராவே சொல்லியிருக்கலாம். . யாருக்கும் பெரிய அளவுல  இழப்பு இல்லாதபடி சிச்சுவேசனை ஹேண்டில் பண்ணியிருப்பேன்.

……..

உனக்கு பிரிவு தான் வேணும்னா கண்டிப்பா அதை கொடுத்திருப்பேன்.

தெரியும். என்றவளை அவன் ஆச்சர்யமாக பார்க்க

நான் உங்களை பிடிக்காததுனால விட்டு போகலை. நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்லை.என்னைப் போல ஒருத்தி உங்களுக்கு வேணாம்.னு தான் விட்து போனேன் என்றவளைக் கண்டு அவன் குழம்பிப் போனான்

வீட்டின் செல்லப்பிள்ளையான சங்கீதாவுக்கு கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கும் கொண்டிருக்கும் போதே அவளது சீனியரான  திணேஷுடன் காதல் மலர்ந்தது.காதல் ஜோடிகள் பார்க் பீச் என்று சுத்தி காதலை வளர்க்க இருவீட்டிலும் விஷயம் அரசல் புரசலாக தெரிந்தது.திணேஷ் வீட்டில் மகனை விட்டுப் பிடிப்போம் என்று கொஞ்சம் கவனம் காட்டாதிருந்தினர். சங்கீதாவின் வீட்டிலோ அவள் அப்பா கொதித்து போனார். மகளது மனதை மாற்ற என்னென்ன மூளைச்சலவை  செய்ய முடியுமோ செய்துவிட்டார்.எதற்குமே பலனில்லை.எத்தனை கெஞ்சல்கள்,எத்தனை கொஞ்சல்,  மிரட்டல்,  அத்தனைக்கும்  தான் பெற்றெடுத்த மகள் சிறிதும்  மசிவதாய் இல்லையே.

இறுதியில் வேறு வழி வழியின்றி  மகளது விருப்பத்திற் கிணங்க தினேஷ் பற்றி அவளிடம் விசாரித்தார்..திருமணம் செய்து வைக்கத் தான்.சாதி, மதம்  எதிலும் தடை சொல்லும் படி இல்லை.பொருளாதாரம் பற்றி மகள் சிந்தித்து கொள்ளட்டும் நமக்கென்ன ?என்று தினேஷ் வீட்டிலிருந்து வந்து பெண் கேட்கட்டும் யோசிக்கிறேன். என்று மகளிடம் சொல்லி வைக்க சங்கீதா காதல் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையில் அகமகிழ்ந்து போனாள்.

ஆனால் அவரோ தினேஷின் நடவடிக்கைகளை கண்கானித்து அவன் மிகப்பெரும் ஊதாரி என்று அறிந்து கொண்டவர் மீண்டும் முருங்கை மரம்  ஏறிய வேதாளமாய்
சங்கீதாவின் காதலை தீவிரமாக  எதிர்த்தார்.அதோடின்றி தன் மகளை அன்புவுக்கு கட்டித் தர பேசினார்.

நிச்சயத்துக்குப் பிறகு தினேஷை சந்தித்த சங்கீதாவோ

எனக்கு  வீட்ல கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணியிருக்காங்க தினேஷ்.உன்ன விட்டு வேற யார்க் கூடவும் என்னால வாழ முடியாது  நம்ம எங்காவது ஓடிப் போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.
எனக் கெஞ்சியவளை என்ன செய்து சமாதானம் செய்வது என புரியவில்லை தினேஷ்க்கு.

அவனுக்கு காதலிக்கும் போது இருந்த தைரியம் கல்யாணம் என்று வரும் போது இல்லை.21 வயது பையன்.கல்யாணம் என்ற வார்த்தையும் அதன் பின் தனக்கு வரப் போகும் பொறுப்புகளும் பிரச்சனையும் அவனை பயமுறுத்தவே பின் வாங்கினான்.அவன் முடியாது என்றுவிட மிகவும் நொந்து போனாள் சங்கீதா.

தினேஷை தனக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துவிட்டு அழுகையோடு வீடு திரும்பியவள் தந்தையிடம் தனக்கு தினேஷ் வேண்டாம்.ஆனால் அதே சமயம் திருமணமும்  வேண்டாம்.எனக்கு கொஞ்ச டைம் வேணும். என்று கோரிக்கை வைக்க அவளது தந்தைக்கு இப்போது அவள் மேல் சுத்தமாக நம்பிக்கை இல்லை.

நிச்சயத்துக்கு பிறகும் அவனைப் போய் பாத்து பேசிட்டு வந்திருக்க.இனிமேலும் நான் எப்படி உன்னை நம்புவேன்.உன்னை விட்டா இன்னும் என்னென்ன செய்வியோ? உனக்கு பிடிக்குதோ இல்லையா இந்த கல்யாணம் நடந்தே தீரும்.என கட்டளையாக சொல்ல

தந்தை சொல்வதை கேட்டு மனதை மாற்றிக் கொள்ளவும் முடியாது, தினேஷை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது இரு கொள்ளி எறும்பாய் தவித்து போனாள்.

திருமண நாள் நெருங்கி வர வர மனதினுள் இயலாமை வந்திருந்தது.தனது இயலாமை அத்தனையும் அவள் அப்பா  மேல் தான் கோபமாய் வடிந்தது.இந்த திருமணத்தை இனிமேல் அவளால் நிறுத்த முடியாது என்று அவள் அறிந்து கொண்டாள்.ஆனால் அதன் முழு சந்தோசத்தையும், நிம்மதியும் அவளது அப்பா அனுபவிக்க கூடாது என்று நினைத்தாள்.

ஒரு கோழை போல் அவளை விட்டுச் சென்ற தினேஷ் மீண்டும் மொபைலில் அழைத்துப் பேசினான்.உன்னை இழந்துவிட்டு நான் மட்டும் சுகமாய் வாழ்ந்து விடவில்லை.உயிருள்ள பிணமாய் நடமாடிக் கொண்டிக்கிறேன் என்றெல்லாம் சொன்னான்.இன்னும் டையலாக் பேசியவனை இடைமறித்து

சரி அதெல்லாம் விடு.என்று அவள் சொன்ன ஒற்றை கோரிக்கையில் தினேஷ் அதிர்ந்து போனான்.அவன் கனவிலும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான்.சங்கீதா வா இப்படியென்று.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை என்கிற நினைப்பில் அவளுக்கு சரியென்றான்.சந்தியா போனை அணைத்து வைத்தாள்.

இனிமேலும் உன்னை நம்புனா என்னென்ன செய்வியோ…? என்ற  தந்தையின் குரல்  நினைவில்  எழ நீங்கள் மட்டும் என்னை நம்பியிருந்தால் இதை ஒருபோதும் செய்திருக்க மாட்டேன் ப்பா ….  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் அதன் பிறகு திருமணத்திற்காக செய்யப்படும் வேலை எதிலும் மறுப்பு சொல்லவோ யாரிடமும் சண்டை போடவோ இல்லை.அவள் மனம் மாறிவிட்டாள் என்று நம்பிய பெற்றோர்கள்  வீட்டுச் சிறையை தளர்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here