நீயே என் இதய தேவதை_50_பாரதி

0
359

வாழ்நாள் கூட உன் கூட வாழனும் ஆசைப்பட்டேன்.அது முடியாது னு எனக்கு தெரியும்.அட்லீஸ்ட் ஒரு நாள் உன்னோட வாழனும்.உன்னோட மனைவியா என்ற வார்த்தைகள் தினேஷின் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.அவனைப் பொறுத்த வரையில் சங்கீதா  குடும்ப கட்டமைப்புக்குள் அடங்கிய மிகச் சாதாரண பெண்.அவளா இப்படி கேட்டாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.அவள் எத்தனை கட்டுப்பாடு மிக்கவள் என்பது அவனுக்குத் தெரியும்.ஒருவேளை அதை விடவும் அவள் தன்மீது வைத்துள்ள நேசம் அளப்பரியதா…? என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.

சங்கீதாவின் நிலையிலிருந்து பார்த்தால் அவள் இப்படி ஒரு முடிவெடுத்ததற்கு காரணம்  வெறும் பழி வாங்கும் உணர்வு மட்டுமே.இதில் தினேஷ் என்பவன் வெறும் துருப்பு சீட்டு.நிர்கதியாய் அவளை விட்டுச் சென்றவன் மீது இப்போது அவளுக்கு எந்த காதலும் இல்லை.

இவள் கேட்டதை ஏற்றுக் கொள்ளவோ அதை நிறைவேற்றவோ திணேஷ்க்கு பெரிதாய் எந்த சிரமும் இல்லை.

சங்கீதாவும் எந்த ஒரு சலனமுமின்றி திருமணத்தை ஏற்றுக் கொண்டாள்.திருமணம் முடிந்து ஆசீர்வாதம் செய்த அப்பாவைப் பார்த்து விரக்தியாய் சிரித்து வைத்தாள்.அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தது.

திருமணம் முடிந்ததும் கணவனிடம் நடந்ததை கூறினால் அவன் ஒன்று
தன்னை பிறந்த வீட்டிற்கு துரத்துவான்,அல்லது அடித்து தன்னை அடித்து துன்புறுத்துவான்.இரண்டில் எது நடந்தாலும் தன் தந்தையின் நிம்மதி சர்வ நாசமாகும் என்று நினைத்தான்.நீ தந்த வாழ்வு என்னை என்ன சிறப்பு செய்துவிட்டது என்று கேள்வி கேட்க நினைத்தாள்.

சில சமயங்களில் கண்மண் தெரியாத ஆத்திரம் என்னை அழித்தாவது உன்னை அழிப்பேன் என்று வந்து நிற்கும்.அப்படியான நிலை தான் சங்கீதாவுக்கு.

அவள் போட்ட கணக்கு அவளுக்கும் அவளது தந்தையின் வரையிலும் சரி.ஆனால் இது எதுவும் தெரியாமல் திருமண கனவுகளோடு சுற்றி திரிந்த அன்பரசனை பற்றி அப்போது அவள் நினைத்து பார்க்கவே இல்லை.

திருமணம் முடிந்த இரவிலே அவனிடம் தனக்கும் தினேஷ் க்குமான உறவு பற்றி சொல்ல நினைத்தவளை ஏதோ தடுத்தது.அடுத்து வந்த நாட்களில் அன்பு அவள் மீதான நேசத்தை உணரச் செய்ய அவளுக்கு செய்து வைத்த காரியத்தில் குற்றவுணர்வு பெருகியது.அதற்கும் மேல் தாயை விட ஒருபடி மேல் அக்கறை காட்டும் தனது மாமியாரிடம் இயல்பாக பேசினாலும் அவரது கண்களை ஏரெடுத்தும் பார்க்க முடியவில்லை அவளால்.இப்படிபட்ட குடும்பத்திற்கு தான் நீ நம்பிக்கைத் தூரோகம் செய்திருக்கிறாய் என உள்மனம் கத்திக்கண்டிருப்பதை சகிக்கவே முடியவில்லை. தான் தவறு செய்துவிட்டோம்.தன்னால் ஒரு பாவமும் அறியாத இன்னொருவன் வாழ்விலும் விளையாடிவிட்டோம் என்று காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்டாள்.

என்ன செய்வது என்ற குழப்பமான மனநிலையில் தான் அவள்  சந்தியாவை சந்திக்கும்படியாயிற்று.

செவ்வாய்க்கிழமை சிவகாமியுடன் சங்கீதா கோவில் செல்ல அங்கே சந்தியாவும் அவளது அம்மாவையும் தற்செயலாக பார்க்க நேர்ந்தது.

மன்னிச்சிடுங்க சிவாக்கா.ஊர்ல வேறொரு பங்சன்.அதான் தம்பி  கல்யாணத்துக்கு வர முடியாம போச்சு.இதான் உங்க மருமகளா என்று பேச்சை ஆரம்பிக்கவும் சிவகாமி சந்தியாவின் அம்மாவுடன் பேசிக்கொண்டே மெதுவாக நடக்க

சங்கீதா தன்னுடன் இணைந்து நடந்த சின்ன பெண்ணான சந்தியாவிடம் படிக்கிறியா வேலைக்குப் போறியா பாப்பா ? என்றாள் இயல்பாக.

ப்ப்ச்ச் எதா இருந்தா உனக்கு என்ன ? என்று சந்தியா முகம் திருப்ப பயந்துவிட்டாள்.

ஏன்மா இப்படி பேசுற…நான் உன்ன இப்போதான் பாக்குறேன்.உனக்கு என்மேல அப்படி என்ன கோவம் எனவும்

கோவமா…..வெறி.
மூனு வருசமா அவரையே நினைச்சிட்டிருந்தேன்.நீ மட்டும் குறுக்க வரலைனா.அவருக்கு இப்ப நடந்த கலயாணம் என் கூட இருந்திருக்கும்.

அவள் அன்பரசனை விரும்பினாள் என்பது  புரிந்தது சங்கீதாவுக்கு.அதுக்கு நான் என்னம்மா….பண்றது ? என இயலாமையாக கேட்க

நடிக்காத.நீ இன்னொரு பையன் கூட சுத்திட்டு இருந்தது எனக்கு நல்லாத் தெரியும்.ஏன் அத அன்புக்கிட்டேயும் சொல்லியிருக்கேன்.அது தெரிஞ்சும் கூட அவரு நீதான் வேணும்னு இருக்கார்னா.அப்படி என்ன செஞ்சு மயக்கி வச்சிருக்க….

சின்ன பெண் என்று நினைத்து பேசப் போனால் அவள் தேளாய் வார்த்தைகளை கொட்டுக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாலும் அன்புவுக்கு தான் தினேஷுடன் பழகியது தெரியும் என்பது இவளுக்கு புதிய செய்தி.

தெரிந்தும் அன்பரசன் அதை காட்டிக்கொள்ளவில்லை என்பதுடன் அவன் எப்போதும் போலவே தன்னுடன் அன்பாய் இருக்கிறான் என்பது அவளை மேலும் மேலும் குற்றவுணர்ச்சியில் தள்ளியது.

உன்னை காதலிச்சதுக்காக என்னை வேணாம்னு சொல்லிட்டாரு ல.அவருக்கும் தேவைதான்.அதான் உன்ன மாதிரி ஒரு கேவலமான பொண்ணு மனைவியா அமைஞ்சிருக்கு என்று அவள் தன்னை கேவலமானவள்  சொன்னதில் நியாயமாக சங்கீதாவிற்கு அளவு கடந்த கோபம் வந்திருக்க வேண்டும்.ஆனால் அவளது மனமும் அதே வார்த்தையை சொல்லி கத்திக்கொண்டிருப்பதால் அது பெரிதாக தோன்றவில்லை.

தீர்க்கமான முடிவுடன் சந்தியாவை நோக்கி திரும்பியவள் அவரு என்னை கல்யாணம் பண்ணலனா உன்னதான கல்யாணம் பன்னியிருப்பாரு னு எப்படி சொல்ற.என கேட்க…..

திருதிரு வென விழித்தவள் அதுவந்து சிவகாமி அத்தை சந்தியா க்கா கல்யாணம் முடிஞ்ச போது அம்மாகிட்ட பொண்ணு கேட்கறதா சொல்லியிருக்காங்க என்று தன்னால் முடிந்தளவு ஒரு பொய்யை சொல்லி சமாளித்து விட்டாள்.

திரும்ப திரும்ப நீ வரலைனா அவரு என்னைத்தான் கல்யாணம் பண்ணியிருப்பாரு என்ற வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்க பற்பல சிந்தனைகள் மனதில்.

முன்பு அப்பா இவருடன் தான் திருமணம் என்று கொண்டு வந்த நிறுத்திய போது அன்பரசனின் மீது துளி ஈர்ப்பு கூட இல்லை அவளுக்கு.ஆனால் இப்பொழுதோ….அப்படி இல்லை.அவன் மீதான அன்பு ,மரியாதை, அத்தனையும் காதல் வடிவம் பெற்றிருந்தது.ஆம் இப்போது அவன் மீது காதல் வந்திருந்தது.அதன் விளைவாலே முன்காலத்தில் அவள் செய்த செயல் பூதாகரமாக மிரட்டியது.இந்த குற்றவுணர்ச்சியுடன் அவளால் அவனுடன் வாழ முடியாது.காதலுக்காக காதலை இழக்க முடிவு செய்தாள்.பிரிதலும் காதலின் வண்ணம் என்று நம்பினாள்.

நான் உங்களுக்கு பொருத்தமானவள் இல்லை அன்பு என்று முனுமுனுத்தவள் ஒரு காகித்தில் எதையோ கிறுக்கினாள்.அடுத்த நாளே வீட்டை விட்டு யாரும் அறியா வண்ணம் வெளியேறினாள்.

செய்த தவறை சரிசெய்ய எண்ணி இன்னொரு தவறு செய்தாள்.பின்விளைவுகளை எண்ணி இப்பொழுது அழுகிறாள்.அவள் நினைத்திருந்தால் அவள் தனியாகவே ஒரு விடுதியில் தங்கி வாழ்ந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்தால் தனது குடும்பம் அன்பரசனிடம் மீண்டும் தன்னை இணைத்து வைப்பது எளிது. அப்படி நடந்தால் தான் எடுத்த முடிவில் என்ன பயன்…? இப்போதே அன்பரசனின் கண்களைப் பார்த்து பேச முடியவில்லை. தவறு செய்த குற்றவுணர்வு உறுத்துகிறது. வாழ்வு முழுதும் இதே போல் அவளால் வாழ்ந்துவிட முடியாது. ஆகையால் தான் அவள் தினேஷ் வீட்டுக்குச் சென்றாள்.இன்னொருவனுடன் வாழ்பவளை நிச்சயமாக அன்பு தனது வாழ்ககையில் இணைத்து கொள்ள விரும்ப மாட்டான் என்று நம்பினாள்.

கேட்டுக்கொண்டிருந்த அன்புவுக்கு அப்படியே அவளை அறைந்தால் என்னவென்று தோன்றியது.அவன் நிதர்சன வாழ்வை எப்போதும் இயல்பாக,யதார்த்தமாக எதிர்கொள்பவன்.இப்படி பட்ட  குழப்பவாதிகளும் சிக்கலான மனநிலை கொண்டவர்களும் இருப்பார்கள் என்றே நினைத்துப் பார்த்ததில்லை.

அப்படியே என்னை விட்டு பிரியணும் நெனச்சாலும் உங்கம்மா அப்பா வீட்டுக்குத் தான போயிருக்கணும்.உன்னை வேண்டாம் சொன்னவன் வீட்டுக்கு போய் வம்படியா உக்காந்திருக்க.அதான் அவன் உன்ன இவ்ளோ கேவலமா நடத்துறான்.?

நான் செஞ்ச தப்புக்கான தண்டனைனு நினைச்சிக்குறேன் என்றவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அவனுக்கு முன்பிருந்த ஆத்திரம் கோவம் எல்லாம்  இப்போதும் அவள் மேல் இருக்கிறதுதான்.ஆனால் அதன் நிலைப்பாடு மாறியிருந்தது.

என் வாழ்வைத்தான் மொத்தமாய் குலைத்துவிட்டுச் சென்றாய்.சரி அப்படி சென்ற நீயாவது சந்தோசமாக இருக்கவேண்டாமா? என்பதே அவனது இப்போதைய கோவம்.

நீ யும் நிம்மதியா இல்லை.
நானும் சந்தோசமாக இல்லை.
உன் பெற்றோர்களும்  குற்றவுணர்வில் இருக்கிறார்கள்.இப்படி யாருக்குமே மகிழ்வை தராத முடிவு என்ன முடிவு?என்று தோன்றினாலும் அதை வெளியில் சொல்லவில்லை.அவளை தொடர்ந்து குத்திக் காட்டி மட்டும் என்ன பயன்? நடந்ததை மாற்ற முடியுமா?

இருவரும் கோவிலை விட்டு வெளியேற
ஏய்…..நினைச்சேன்டீ….என்ற குரலில் இருவரும் திரும்ப அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

நேராக வந்து சங்கீதாவை அறைந்தவன்
அவன் கூட  கல்யாணம் முடிச்சிட்டு என்வீட்டுக்கு  வந்த.இப்போ என்கூட வாழ்ந்துட்டே மறுபடியும் அவன் கூட…… என்றவன் முடிக்கவில்லை.அதற்குள் அன்பரசனின் கை அவன் கண்ணத்தில் பதிந்திருந்தது.

நான்கு விரல்களும் கண்ணத்தில் தடம் பதித்திருக்க வலி தெறிக்க டேய்….என்னையே அடிக்கிறியா…. நான் யார் தெரியுமா …. என்று மீண்டும் முடிப்பதற்குள் அடுத்த அறை….

ஏய்…என்னடி * உன் புருசன அடிக்க விட்டு வேடிக்கை…என்று முடிப்பதற்குள் அடுத்த அறையில் கண்ணம் வீங்கியிருக்க அதற்கு மேல் பேச முடியாது சங்கீதாவை முறைத்துக் கொண்டு அப்படியே நின்றான்.

சரியோ? தப்போ? உன்னை நம்பி வந்த ஒரு பொண்ண இப்படித்தான் நடத்துவியா..டா ராஸ்கேல்.அவ மேல நம்பிக்கை இல்லைனா அவ உன் வீட்டுக்கு வந்தப்பவ அவ வீட்டுல ஒப்படைச்சிருக்கனும்.கூடவே வாழ்ந்துட்டு தினம் தினம் அந்த பொண்ண இப்படி டார்ச்சர் பண்ணிட்டு இருப்பியா? வெட்கமா இல்லை…? என்றவன்
கூடிய சீக்கிரமே எங்களுக்கு  விவாகரத்து கிடைச்சிரும்.மேரேஜ ரிஜிஸ்டர் பண்ணிட்டு ஒழுங்கா வாழப் பாரு.இல்லை இனிமேலும் இப்படித்தான் பண்ணுவ னா….என்றவன் மீண்டும் கையை ஓங்க…தினேஷ் சங்கீதாவின் பின் மறைந்தான்.அவனிடம் விடைபெற்றுக்கொண்டு பைக்கில் அமர்ந்து மொபைலை பார்க்க ஷர்மியிடம் இருந்து மிஸ்டுகால் வந்திருந்தது.இன்னைக்கு நான் லீவு.நாளைக்கு கண்டிப்பா ப்ரியாகிட்ட பேசுறன் என்று மெசேஜ்  செய்துவிட்டு பைக்கில் புறப்பட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here