நீயே என் இதய தேவதை_51_பாரதி

0
261

அன்பரசன் நடந்ததையெல்லாம்
ஆனந்திடம் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க
இப்படியெல்லாம் கூட நடக்குதா நாட்டுல என்றபடி அவனையே வாயைப் பிளந்தபடி பார்த்திருந்தான்.

டேய்…இப்படி வாயைப் பிளக்கவா உன்கிட்ட இதையெல்லாம் சொல்றேன்.

நம்பவே முடியல பங்காளி.அந்த பொண்ணு எதுனாலும் முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கலாம்.அது இவ்ளோ பெரிய தத்தியா இருக்கும் னு நெனச்சி கூட பாக்கல.
மிடில் க்ளாஸ் சா இருந்தாலும் வீட்ல செல்லமா வளர்ந்த பொண்ணு.இதெல்லாம் தேவையா…?

சரி.நடந்ததையே பேசி என்ன செய்ய.எனக்கு சீக்கிரம் டைவர்ஸ் வேணும். என் ப்ரெண்ட்  ஒரு லாயர் னு சொல்லிக்க பிரயோஜனமா இதையாச்சும் பண்ணிக் கொடு என.

அப்போ அந்த பொண்ண அப்படியே விட்டுடலாம் சொல்றியா…?

அப்படி இல்லைடா.இது அவளா எடுத்த முடிவு.அதோட நல்லதும் கெட்டதும் அவ சமாளிச்சு தான் ஆகணும்.அந்த பையனும் அவ்வளோ கெட்டவனா தோணலை.எப்பவேணா அவனை விட்டு போய்டுவானோ ங்கிற இன்செக்யூர்ல தான் இப்படி நடந்துக்கிறானோனு தோணுது.இல்லைனா சங்கீதா அவன் வீட்டுக்கு போகும்போதே துரத்தீ விட்டிருக்க மாட்டானா…?
நம்மால வேற வகைல ஏதாவது உதவி செய்ய முடியுமா னு யோசிக்கலாம்.ஆனா அவள திரும்பவும் என் வாழ்க்கையில இணைச்சிக்கிறதுலாம் முடியாது.

ம்ம்… நீ இப்படிதான் சொல்லுவன்னு எனக்குத் தெரியும்.நேத்து வரை அவள குத்துவன் கொல்லுவன் னு இருந்தவன்  இன்னைக்கு அவ மேல சாப்ட் கார்னர் வருதுனா, அவ கஷ்டப் படுறானு வருத்தப்படறது லாம் பார்த்து பழைய காதல் மறுபடியும் துளிர்விட்டிருச்சோ லைட்டா ஒரு டவுட்.வேற ஒன்னுமில்லை என்று இளித்தவனை பார்த்து முறைத்தவன்

டைவர்ஸ் எப்போ வாங்கி தர.அத மட்டும் சொல்லு.

கேட்டவுடனே கிடைக்க அது ஒன்னும் மளிகை கடைல வாங்குற பொருள் இல்லை பங்காளி.அதுக்கான ஒரு ப்ரொசீஜர் இருக்கு.ஆனா ஏற்கனவே நீங்க பிரிஞ்சி தான இருக்கீங்க.அதுனால ரொம்ப நாள் லேட் ஆகாதுனு நினைக்கிறேன்.என்னால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சு தாரேன் என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அன்பரசனின் மொபைலில் மை ஏஞ்சல் என்று ஒளிர

அன்பரசன் மொபைலை எடுக்கும் முன் விரைந்து அதை எடுத்த ஆனந்தோ அவன் சேவ் செய்து வைத்திருந்ததை பார்த்து சிரித்துவிட்டு ஏஞ்சலாம்….ல்ல லவ் பண்ண ஆரம்பிக்கும்போது அப்படித்தான் டா இருக்காளுங்க.அப்புறம் தான் சாத்தானா மாறிடுறாங்க என கிண்டல் செய்ய “என் ஆளு ஒன்னும் அப்படிலாம் கிடையாது.அவ எப்பவுமே எனக்கு தேவதைதான் என  பெருமையாக சொல்லி ஆனந்திடம் மொபைலை பிடுங்க வர, அவனது தவிப்பை ரசித்தவன்  வேணுமா வேணுமா…எங்க பிடி  பாக்கலாம் என அவன் கைகளுக்கு செல்போனை தராமல் விளையாட்டு காட்ட அதற்குள் முழு ரிங்கும் முடிந்தது.

ஆனந்தை துரத்தி பிடித்து மொபைலை பறித்தவன் சற்றே வெட்கத்துடன் அவன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்.ஆனந்தின் சிரிப்பு சப்தம் அறைக்குள்ளும் கேட்க “இவன் வேற ஏதோ நாங்க டூயட் பாட போறா மாதிரி கிண்டல் பண்ணிட்டு இருக்கான். அவளே போனை போட்டு ப்ரியா கிட்ட பேசலையானு  கேட்கப் போறா”
என்று சலித்துக் கொண்டு போனை பார்க்க கவியே மீண்டும் அழைத்தாள்.

முதல் ரிங்கிலேயே எடுத்தவன் தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பவன் போல சாரி…ம்மா.இன்னைக்கு நான் லீவு.நாளைக்கு ப்ரியாகிட்ட கண்டிப்பா பேசுறேன் என ….

என்ன சார் உடம்புக்கு முடியலையா ….என்றவளது கருணைக் குரலில் உள்ளூர ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.நேற்று அவன் சோர்வாக இருக்கிறேன் என்று சொன்னதை வைத்து இப்படி கேட்டாள்.

இல்லை.அப்படியெல்லாம் இல்லை.கொஞ்சம் பர்சனல் வொர்க்.

இன்னைக்கு கம்பெனியில பெரிய பிரச்சனை நடந்திருச்சு சார்.

ஏன்…? என்னாச்சு என அவன் கேட்க

நம்ம பிரியா…நீலாக்கா வ அடிக்க போய்ட்டா…?

எது… ? நெஜமாவா சொல்ற ? என்ன நடந்தது கொஞ்சம் தெளிவா சொல்லு?

அன்று காலை கம்பெனியினுள் நுழைந்ததிலிருந்து கவியும் ஷர்மியும் ப்ரியாவிடம் பேசவேயில்லை.
ப்ரியாவும் அவர்களை பேச வைக்க சற்று முயற்சி செய்து பார்த்தாள்.அது முடியாமல் போக “சர்தான் போங்கடி”என்றுவிட்டு அவள் வேலையை அவள் பார்க்க

அப்போது அரவிந்தன் அந்த பக்கம் வந்தவன் ப்ரியாவிடம் எப்போதும் போல் வழிந்துவிட்டு செல்லும்போது அவளை உரசிவிட்டு சென்றான். அதற்கு ப்ரியா ஏதும் சொல்லாமல் வெட்கப்படுவதை   அப்போது ரவுண்ட்ஸ் வந்த லேடி செக்யூரிட்டி நீலாவின் கழுகுக் கண்கள் கண்டு கொண்டன.

ப்ரியா கடக்கும் போது மட்டும் பொம்பளை பொறுக்கிங்க ளே பராவாயில்லை போல ஆம்பளை பொறுக்கிங்க அராஜ௧ம் தாங்கலை.என அவளுக்கு கேட்கும் விதமாக  சத்தமாக முனுமுனுக்க

என்னடி சொன்ன….? என வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போய்விட்டாள்.

உன்னத்தான் சொன்னேன். வேலை செய்யற இடம் னு டிசிப்ளின்  வேண்டாம்.அசிங்கம் பண்ண இந்த இடம் தான் கிடைச்சுதா என அவள் திமிராக பேச

ஆத்திரத்தின் உச்சத்தை அடைந்தவள் அவளை அடிக்க நெருங்கி சென்றுவிடட்டாள். அடிக்க வருவாள் என்று எதிர்பாக்காத நீலா பயந்தே போனாள். நிலைமை உணர்ந்த கவி வேணாம் ப்ரியா வேணாம் என்று தடுக்க அப்படியும்  நீலாவை அடித்துவிடும் வெறியில் திமிறிக் கொண்டிருந்தாள்.

கண்ணாடி வழியே இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷர்மியும் கவியுடன் சேர்ந்து ப்ரியா வை தடுத்து பிடிக்க ஏ…விடுங்க டீ இவளை என்ன பண்றேன் பாரு….என சத்தமிட்டவள்  அவர்களது தடுப்பில் இருந்து வெளிவர முடியாததால் “நீ என்ன ஒழுங்கா  என்று  ஆரம்பித்து பின் அவள் பச்சைத்தமிழில் பேசியது எல்லாமே  சென்சார் செய்யப்ட வேண்டிய வார்த்தைகள்.

அந்த தளத்தில் இருந்த மொத்த  ஆட்களும் இங்கு நடந்த கலவரத்தை  பார்த்துக்கொண்டிருக்க நீலாவுக்கு மிகுந்த அவமானம்.வினோத் முதலில் வந்து பெரியவங்க வயசுக்கு கூட மரியாதை குடுக்க மாட்டியா இப்படித்தான் வளர்த்தாங்களா உங்க வீட்ல என்று திட்டினாலும் அவனுக்கும் உள்ளூர ஒரு பயம்.எங்கே தன்னை ஏதேனும் சொல்லிவிடுவாளோ என்று.அரவிந்தனோ  ஏதும் தெரியாதது போல வந்தவன்  எதுக்கு இவ்ளோ பெரிய சண்டை எல்லாரும் போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க என்று கூட்டத்தை கலைத்துவிட்டான்.

ஆனால் அவமானப்பட்ட நீலா இதை பெரிதுபடுத்தாமல் விடுவதாய் இல்லை.சண்டை நடந்த நேரம் ஹெட் ஆபிஸ் சென்றிருந்த மேனேஜர் திரும்ப வந்தவுடன் நடந்ததை பலவாறு திரித்துக் கூற , அவரோ இருக்கும் பிரச்சனைகளில் இது வேறா என்று எண்ணிக் கொண்டவர்  அந்த பொண்ண வார்ன் பண்ணி வைக்கிறேன்.ஆனா நீயும் அடுத்தவங்க விஷயத்துல தலையிடறத இத்தோட நிறுத்திககோ.யார் எப்படி போனா உனக்கென்ன …? என்று விட்டு போனவர் ப்ரியாவிடம் அவங்க கம்பெனி ஸ்டாப் ன்றத விட உனக்கு அக்கா மாதிரி. இனி தப்பா பேசக் கூடாது என்று ஒரு பெயருக்கு கண்டித்து வைத்தார்.தலையாட்டி விட்டு வந்தவளுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here