நீயே என் இதய தேவதை_52_பாரதி

0
231

கவியிடமும் ஷர்மியிடம்  வந்தவள் அவள சும்மாவிட மாட்டேன்.என்ன பண்றேன் பாரு. என

நீ திருந்தவே மாட்டியா ப்ரியா….போ போய் அவளை அடி.அவ மட்டும் இல்லை இந்த கம்பெனியில எங்களத் தவிர எல்லாருமே உன்ன தப்பா தான் பேசிட்டு இருக்காங்க.எல்லாரையும் எண்ண பண்ணப் போற…? எல்லார்கிட்டயும் இப்படித்தான் சண்டை போட்டுட்டே இருக்கப் போறியா…? என்று கேட்க அவளிடம் எந்த பதிலுமில்லை.

ப்ரியா கொஞ்சம் யோசிக்கவும் அவளுக்கு அமைதி கொடுத்து கவியும் ஷர்மியும் தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தவன் வியப்பில்  அமைதியாய் இருக்க சார்…சார்  லைன்ல இருக்கிங்களா என கேட்க

ஹான்…இருக்கேன்.அவ ஏன் இப்படியெல்லாம் பண்றா…. ப்ப்ச்ச் என்று அதிருப்தியை காட்டினான்.

நீலாக்கா எச்.ஆர் கிட்ட பேசுனத பாத்தேன்.ப்ரியா வ வேலை விட்டு அனுப்பிடுவாங்களா சார்.. என

அப்படியெல்லாம் எதும் பண்ண மாட்டாங்க. நீ பயப்படாத….என  சொல்லி  அவளுக்கு தைரியமூட்டியவன் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வா என்ன செய்றதுனு யோசிக்கிறேன். என்றவன் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை வைத்தான்.

அடுத்தநாள் பணிக்கு இடையிடையே  ப்ரியாவை கவனித்தான்.நேற்று நடந்த பிரச்சனையில் விளைவோ என்னவோ அரவிந்தே வந்து பேசினாலும் அவள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அப்போதுதான் அன்பரசனுக்கு ஒரு யோசனை தோன்றியது.ப்ரியாவிடம் பேசுவதற்கு பதிலாய் அரவிந்தனிடம் பேசிப் பார்த்தால் என்னவென்று?

தான் யோசித்ததையே கேண்ட்டீன் செல்லும்போது கவிதாவும் சொல்ல “பார்ரா” என வியந்து கொண்டவன் நானும் இதைத்தான் நினைச்சேன்.ஆனால் அவரோட பர்சனல் லைப் ல தலையிடற மாதிரி ஆகிடுமோ பாக்குறன்.

எது சார்  . பர்சனல்  ? ஒரு சின்னப் பொண்ணு எதிர்காலத்தோட விளையாடிட்டு இருக்காரு..? இது பர்சனல் விஷயமா என்று அவள் சீற….

ப்ப்ச்ச்…..டென்சன் ஆகாத…டா.நம்ம ப்ரியா ஒன்னும் விரல சூப்புற குழந்தை இல்லை.அவளுக்கு தான் செய்யுறது தப்புனு தெரியாம இருக்க.அத்தோட அரவிந்த் அண்ணன மட்டும் குறை சொல்ல முடியாது.இங்க நிறைய பேரு வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் தான் நல்லவங்க.உனக்கு இதெல்லாம் புரியாது விடு.

அப்போ அரவிந்தன் சார்கிட்ட பேச மாட்டீங்களா என குழப்பமாய் கேட்க

டீசன்ட்டா சொல்லி பாக்குறேன்.கேட்கலைனா வேற எதாவது யோசிப்போம்.நீயும்  ஷர்மியும ப்ரியா கிட்ட எப்போதும் போல பேசு. நீங்க அவளை ஒதுக்கி வைச்சா அவ இன்னமும் அவர் கிட்ட தான் நெருங்கி போவா….என அறிவுறுத்த

சரிங்க சார்..யென்று விட்டு நகர்ந்தாள்.

உணவு இடைவேளைக்கு பிறகு கவியும் ப்ரியாவும் அவரவர் இசத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்க எச் ஆர் அவ்விடம் வந்தார்.

ஓய்….என்ன ரவுடி … கம்பெனி முழுக்க உன்ன பத்தின பேச்சுதான்.என்று அவர் ப்ரியாவிடம் பேச கவி பயந்து போனாள்.

ப்ரியாவோ அவங்க என்ன பேசுனாங்க கேளுங்க சார் என சாதாரணமாக சொல்ல

அதுக்கு அடிக்க போய்டுவியா….கம்பெனியில இப்படியெல்லாம் பண்ணலாமா….

ப்ரியா அமைதியா இருக்க…

யாராச்சும் உன்ன எதாச்சும் சொன்னா என்கிட்ட வந்து சொல்லு எதுக்கு இப்படி வீணா தகராறு பண்ணிட்டிருக்க….என்று அவர் அவள் அவளது தோளை தட்டிவிட்டு செல்ல அசௌகரியத்தால் நெளிந்தவள் அவர் கண்பார்வையை தாண்டியவுடன் பொம்பளை பொறுக்கி…. என்று முனுமுனுத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

கவியோ எச்.ஆர் பேசிய விதம், அவரது முக பாவனைகளை கவனித்தவளுக்கு இதுக்கு அரவிந்த் சாரே பரவாயில்லை  என்று  முகம் சுளித்துக் கொண்டவள் அன்பு சொன்ன இங்க வாய்ப்பு கிடைக்காதவரை தான் எல்லாரும் நல்லவங்க என்பது உண்மை தான் என்பதை உறுதிசெய்து கொண்டாள்.

பணிகள் அதன் போக்கில் நடந்தபடி இருக்க எப்போதும் கேட்டபடி இருக்கும் இயந்திரத்தின் இரைச்சலை மீறி ஒரு அலறல் சத்தம் அந்த தளத்தை நிறைத்தது.எல்லாரும் ஒரு கணம் வேலையை நிறுத்திவிட்டு சத்தம் வந்த திசையைப் பார்க்க  மெஷினில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததில் மணி என்ற  பையன் உடல் முழுவதும் இரத்ததோடு கீழே விழுந்திருந்தான்.எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தாலும் முதலில் அவன் புறம் ஓடியது அன்புவும் அரவிந்தனும் தான்.

மணி  செய்த பிழையின் காரணமாக மெஷினில் அவனது கரங்கள் எக்குதப்பாக மாட்டியிருக்க பதட்டபட்ட அவன் மெஷினை ஆப் செய்யாது  தனது கரங்களை விடுவிக்க போராடி அதை எடுப்பதற்குள்  இடது கை மட்டும்  துண்டிக்கப்பட்டு விட்டது.அன்பு அவசர அவசரமாக பையனை தூக்க அரவிந்தன் துண்டிக்கப்பட்ட பாகத்தை மெஷினை ஆப் செய்து பத்திரமாக எடுத்தான்.

யாரிடமும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்க வெல்லாம் நேரமில்லை என்பதை இருவரும் உணர்ந்திருக்க அன்பரசன் பைக்கை ஓட்ட அரவிந்தன் மணியைப் பிடித்துக் கொண்டு பின்னால் அமர்ந்து கொண்டான்.மயங்கிய நிலையில் இருந்தவனது கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சித்துப் பார்த்தான்.சிறுவன் அப்போதும் கண்விழிக்கவில்லை.

பக்கத்திலிருக்கும் ஹாஸ்பிட்டலை அடைந்ததும் அன்பரசன் பையனை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடி எமெர்ஜென்சி என்று டாக்டரை அழைக்க  அரவிந்தன் தான் அட்மிஷன், விவரங்கள் என
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிலைமை உணர்ந்த மருத்துவர்கள் விரைவாக அறுவை சிகிச்சை செய்ததாலும் அதிர்ஷடவசமாக   துண்டிக்கப்பட்ட கைகளில்  இருந்த செல்கள் அதுவரை  இறக்காமல் இருந்ததால் மணியின் இடது கை உடலுடன் இணைந்தது.

மருத்துவர் வந்து அவன்  நன்றாக இருக்கிறான் என்று சொன்னதும் தான் அன்புவுக்கும் அரவிந்தனுக்கும்  பதட்டம் ஓரளவு குறைந்தது.மேனேஜரிடமும் இதர சூப்பர்வைசர்களிடம் இருந்து கால் வந்தபடியே இருக்க எடுத்து தகவல் சொன்ன அரவிந்தன் அன்புவிடம் உன் சட்டையெல்லாம் ஒரே இரத்தமா இருக்கு அன்பு. வீட்டுக்கு போறதுனா போய்ட்டு வா.இங்க நான் பாத்துக்கிறேன் என்றான்.

அன்பரசனுக்கு சற்று வியப்பாய் இருந்தது.மணி அரவிந்தனின் லைன் இல்லை.தன்னை போல மணிக்கு நெருக்கமானவனும் இல்லை.ஆனாலும் கண்முன்னே ஒருவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க  எந்த எதிர்பார்ப்பும் இல்லாது உதவ முன்வந்திக்கிறான்.ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்க்கும் வரை தனக்கு இருந்த அதே பதட்டமும் தவிப்பும் தான்  அரவிந்தனின்  முகத்தில்.ஏதோ ஒரு விதத்தில் கேடுகெட்டவன் அயோக்கியன் என்று ஒதுக்கி வைப்பவருக்கு இன்னொரு முகமும் உண்டு என்று அறிந்து கொண்டவன் வீட்டுக்குச் சென்று உடைமாற்றிக் கம்பெனி வந்தடைந்தான்.

மேனேஜரும், சூப்பரவைசர்களும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னவன்  மணியின் கான்ட்ராக்ட் ஓனரை பிடித்து அவன் வீட்டுக்கு தகவல் சொன்னான்.
நிதாமான அவர்கள் சட்டென்று அதிர்ச்சியடையவோ  பதட்டமுறவோ தேவையில்லாதவாறு தகவலை பகிர்ந்தான்.

அடுத்த ஒரு வாரம் சாதாரணமாக கழிய,அதற்கடுத்து வந்த நாட்களில் ஆச்சர்யமாக ப்ரியாவிடம் அரவிந்தன் பேசவேயில்லை.நெருக்கம் என்ன இதுவரை ப்ரியா என்ற ஒருத்தியை முன்பு பார்த்தேயிராதது போல் நடந்து கொண்டார்.ஆனால் ப்ரியாவோ அவரை விடாது ஏதேனும் பேச்சுக் கொடுக்க விலகியே இருந்து ஓரிரு வாரத்தைகள் பேசி வந்தவர் தானாகவே வேறு ஷிப்ட் கேட்டு வாங்கி கொண்டார்.ப்ரியாவை முழுவதும் தவிர்த்தார்.

எப்படி ஒரே வாரத்தில் இத்தனை மாற்றம் என வியந்த கவி அன்பரசனிடம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் அன்புவுக்கு  ஆக்சிடெண்ட் என்று செய்தி  வந்து சேர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here