நீயே என் இதய தேவதை_53_பாரதி

0
359

அரவிந்தனின் மனமாற்றத்திற்கு அன்பரசன் தான் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பான் என யூகித்த கவியோ விவரம் கேட்க அன்பரசனை போனில் அழைக்க மறுபக்கம் பதிலில்லை.சரி காலையில் நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட்டு பேசிக்கொள்வோம் என்று நினைத்தாள்.

ஆனால் அடுத்தநாள் காலை அவனைக் காணாது தேடினாள்.அவள் மட்டுமல்ல அந்த பிரிவின் மேனேஜரும் தான். காலையிலிருந்து அழைப்பு விடுத்துப் பார்த்துவிட்டார்.அவரது வேலை இரண்டு மடங்கானதால் அதீதமாய் டென்சன் ஆகி கிட்டத்தட்ட அவனை சபித்துக் கொண்டிருந்தார்.வயதான காலத்தில் அவனைப் போல ஓடியாடி ரவுண்ட்ஸ் சென்றும் பின்  நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று தரம் பார்க்கவும்  அவரால் முடியுமா…என்ன…?

தீடீரென தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வர எரிச்சலுடன் ஹலோ…..யாரப்பா

………..

ம்ம் அவன் எங்க..?

…….

எது ஆக்சிடென்டா…….

பெரிசா அடி எதும் படலை ….ல

அச்சச்சோ…..சரி நான் மேலிடத்தில சொல்லிக்கிறேன் நீங்க பாத்துக்கோங்க…. என்றுவிட்டு போனை அணைத்தவரை வினோத் என்னாவாயிற்று என்று குழப்பமாக  பார்த்துக்கொண்டிருந்தான்.

அன்புக்கு நேத்து பைக்  ஆக்சிடென்டாம் டா.தலையில அடிபட்டு மயங்கி இருக்கானாம்.அச்சச்சோ….என்ன ஆச்சோ.பைக் பாத்து ஓட்டுங்க னு சொன்னா எங்க கேக்குறானுங்க என்ற  வினோத்  உச்சுகொட்டிவிட்டு தன் வேலையைப் பார்த்து நகர

இதையெல்லாம் யாருமறியாமல் கவனித்துக் கொண்டிருந்த கவிக்கு ஒரு கணம்  தூக்கிவாரிப் போட்டது.ப்ரியா வை பார்க்க அவளும் சற்றே பதட்டமாக  கவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதன்பிறகு இரண்டு நாளாய் இவர்கள் அன்பு நம்பருக்கு தொடர்பு கொண்டு பார்க்க அந்தப் பக்கத்திலே பதில் இல்லை. அந்த தளத்தில் வேலை செய்யும் நிறைய பேருக்கு அவனுக்கு என்னாயிற்றோ என்று பயம் இருந்தாலும்  கவிக்கு பயத்தையும் தாண்டி உள்ளூர ஒரு தவிப்பு நிறைந்திருந்தது.அது என்ன உணர்வென்று அவளால் அறிய முடியவில்லை.அன்பரசனின் நண்பன் ஒருவன் அழைத்து மேனேஜருக்கு விவரம் சொல்லியிருக்கிறான் என்பது வரை புரிந்தது.ஆனால் எந்த மருத்துவனையில் இருக்கிறான் என்று அவரிடம் கேட்க தயக்கமாய் இருந்தது

அடுத்த நாளும் அவனுக்கு என்னவானதோ என்ற நினைவிலே வேலைப் பார்த்துக் கொண்டிருக்க வீட்டுக்கு கூட்டு போய்ட்டியா.ஒன்னும் பெரிசா ஆபத்தில்லையே.அவனுக்கு கொஞ்சம் சரியானதும் போன் பண்ண சொல்லு என்ற மேனேஜரின் பேச்சில் அவர் அன்பரசனை பற்றித்தான் பேசுகிறார் என்று புரிந்து கொண்டவள் ப்ரியாவிடமும், ஷர்மியிடமும் அன்பு சார் வீட்டுக்கு போய் பாத்துட்டு வரலாமா…? என்று கேட்க ஷர்மி உடனே சரியென்றாள்.

ப்ரியா மட்டும் யோசிக்க

என்னடி ….என்று கவி வினவினாள்.

அவங்க அம்மா இருக்கும் போது இரண்டு மூனு முறை போய் இருக்கேன்.ஆனா இப்போ அங்க போறது…. சரியா இருக்குமா னு யோசிக்கிறேன்.யாராச்சும் எதாவது சொல்லப் போறாங்க  என

இவ வேற…என்னோட பயம் புரியாம என்று நினைத்துக் கொண்டவள் அதெல்லாம் ஒன்னும் இல்லை.நாங்க கண்டிப்பா போறோம்.நீ வந்தா வா… என்று சொல்ல

ஏன்…டீ உனக்கு இவ்ளோ கோவம் வருது.சரி போலாம் என்றதும் வேலை நேரம் யுகமாய் கழிய அவனை எப்போது பார்க்கலாம் என்று காத்திருந்தாள்.

வேலை முடிந்ததும் யூனிபார்மோடு பஸ்ஸில் செல்ல நேர்ந்தது.நல்லவேளையாக ப்ரியாவிடம் கவியிடமும் இன்று கையில் கொஞ்சம் காசு இருக்க அதற்கு ஏற்றவாறு பழங்கள் வாங்கிக் கொண்டு அவனது ப்ளாட் நம்பர் தேடி கதவை தட்டினர்.கதவை திறந்த ஆனந்த் ஒன்றும் புரியாது முழித்தான்.யூனிபார்மோடு வந்து நிற்கவும் பள்ளி மாணவர்கள் என்று நினைத்து “என்ன வேண்டும்” எனக் கேட்க

ஷர்மியோ துடுக்காய் நீங்க யாரு …? தள்ளுங்க என்றுவிட்டு ஒரு பக்கமாய் வழி மறித்து நின்றவனின் கை இடைவெளியில் நுழைந்து அன்பண்ணா….என்று கூவிக் கொண்டே சென்றுவிட்டாள்.

தலையை சொறிந்து கொண்டவன் மீதம் இருந்த இரண்டு பேரையும் குழப்பமாய் பார்க்க அன்பு சாருக்கு அடிப்பட்டிருச்சுனு சொன்னாங்க.அதான் பாத்துட்டு போக வந்தோம் என கவிதா சொல்ல

ஓகோ….அப்படியா…. ம்ம் உள்ள வாங்க.நான் அன்பு ப்ரெண்ட தான் என்றழைக்க

உள்ளே வந்ததும் மெதுவாய் கண்களை சுழற்றி அன்புவைத் தேடியவர்கள் ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தவனை நெருங்க அதற்குள் ஷர்மி அழுது தீர்த்திருப்பாள் போல.

ஹே…லூசு…இப்ப ஏன் ஒப்பாரி வைக்கிற நான் என்ன மேலயா போய்ட்டன்.பைக் ஸ்லிப் ஆகி சின்னதா கால்லயும் நெத்தியிலயும் அடி பட்டிருச்சு.சரி இதையே சாக்கா வச்சு இரண்டு நாள் லீவூ போடலாம் நினைச்சு என்று அவன் முடிக்ககூட இல்லை.

அறவிருக்கா…..உங்களுக்கு என்ற கவியின் குரலில் அவசரமாக திரும்பிப் பாரத்தவன் இன்பமாய் அதிர்ந்தான்.கவியோ கொதித்து போயிருந்தாள் பிரியா “அமைதியாக இரு” என்று சொல்வதை கேளாது அன்பரசனை வறுத்தெடுக்கத் தொடங்கினாள்.

எது எதுல விளையாடுறதுனு ஒரு விவஸ்தையே இல்லையா….?  ஆளு மட்டும் தான் எரும மாடு மாதிரி வளர்ந்திருக்கிங்க ஆனா அறிவு…ன்றது சுத்தமா இல்லை.நான்…என்று ஆரம்பித்து பின் திருத்தி நாங்க எவ்ளோ பயந்து போயிட்டோம் தெரியுமா…? என்று அதீத கோவத்தில் வாரத்தைகள் திக்க கண்களில் விழி கசிய நின்றிருந்தாள்.ஷர்மி இவருக்கு தேவைதான் என்று அமைதி காக்க ப்ரியாவுக்குத் தான் கொஞ்சம் சங்கடமாய் போனது.வந்த இடத்தில் இவள் என்ன இப்படி நடந்து கொள்கிறாள். பதிலுக்கு அவனும் கோபப்பட்டால் பிரச்சனை ஆகுமே என்று பயந்தாள்.

ஆனால் நினைத்ததற்கு நேர்எதிராய் கவி திட்டுவதையெல்லாம் கேட்டவன் ஏதோ காமெடியை இரசிப்பவன் போல சிரித்துவிட்டு சரி சரி டென்சன் ஆகாத வா உட்காரு….ப்ரியா நீயும் என பக்கத்திலிருந்த சோபாவை கைகாட்ட

கவியோ பொங்கி எழும் கோபத்தில் முறுக்கிக் கொண்டு திரும்பி நடக்க அன்பரசனோ  உட்கார்ந்த நிலையிலிருந்தே அவள் கைகளை பிடித்து தடுத்து ஹே… சாரி சாரி…டா ப்ளீஸ் ப்ளீஸ்  என  கெஞ்ச அவன் கைகாட்டிய இடத்தில் போய் அமர்ந்தாள்.

வினாடியில் நடந்த  இந்நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்த  ஆனந்தோ நீ நடத்துடா பங்காளி …எனப் பார்க்க ப்ரியா வுக்கும் லேசாய் பொறி தட்டியது.அவள் கவியின் முகத்தை ஆராய  அவள் இயல்பாக இருந்தாள்.

அன்பு நன்றாகத் தான் இருக்கிறேன் என்று சொன்னாலும் மீண்டும் தலை முதல் கால் வரை தவிப்புடன் பார்வையில் ஆராய்ந்தாள்.காலில் பெரிதாக கட்டுப் போடப்பட்டிருந்ததை தவிர வேறெதும் இல்லை.ஷார்ட்ஸ் அன்ட் டீ சர்ட்டில் கொஞ்சம் சின்ன பையன் போலிருந்தவனை கண்டு முகம் சிவந்து திரும்ப

அன்புவோ ‘இவ வேற ப்ரியா இருக்கும்போது எதுக்கு இப்படி பாத்து வைக்குறா.மூஞ்சியை எப்படி வைச்சுக்கிறதுனே தெரியலையே’.என்று நினைத்தவன் ப்ரியாவிடம் திரும்பினான்.

என்னாச்சு ண்ணா….ஏன் போன் கால் எதும் எடுக்கலை. என கேட்க

பைக்ல போகும்போது ஸ்லிப் ஆகிட்டேன்.வேற ஒன்னும் இல்லை.நானே தான் ஆஸ்பிட்டல் போய் அட்மிட் ஆனேன்.அதுக்கப்புறம் தான் இவனையே போன் பண்ணிக் கூப்ட்டேன்.மயக்கம்னு சொன்னதெல்லாம் சும்மா.

“சாதாரணமா கால்ல மட்டும் அடி பட்டிருக்கு ….னு நானே சொன்னா ஒருநாள் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைக்கு வந்திரு னு சொல்வானுங்க.அதான் இவனை கொஞ்சம் சீரியஸா இருக்க மாதிரி பேச சொன்னேன்”

சரி ஏன் நாங்க போன் பண்ணும்போது எடுக்கலை…

பசங்க ள்ள சிலருக்கு தெரியும்.உங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சா…அது கம்பெனிக்கே தெரிஞ்ச மாதிரி …இத பத்தி கேட்கத்தான் போன் பண்ணுவிங்க தெரியும்.அதான் எடுக்கலை என்று சொல்ல

அதும் சரிதான் என்றாள் ப்ரியா.

சரி அத விடுங்க…முதல்முதலா வீட்டுக்கு வந்திருக்கீங்க என்ன சாப்பிடுறீங்க….என்று அவன் உபசரணையில் இறங்க…

கவி அதெல்லாம் வேணாம் சார்….என்று மறுப்பதற்கு முன்னமே ஷர்மியோ டீ, காபி, பூஸ்ட் போர்ன்விட்டா எதுனாலும் எனக்கு ஓகே என 
எல்லாம் இருக்கு , ஆனா போட்டுத் தர தான் ஆள் இல்லை.அதனால நீங்களே போட்டு குடிச்சிட்டு கெளம்புங்க.. எனக்கு டையர்டா இருக்கு என்றுவிட்டு அமர்ந்திருந்த சோபாவில் கண்மூடி சாயந்தான்.

ப்ரியா நான் காபி போடுறேன்னு எழ ஷர்மி அய்யய்யோ எனக்கு வேண்டாம் நான் சும்மா கேட்டேன் என்ற அலறினாள் ஷர்மி.ப்ரியா ஷர்மியை கண்களால் எரிக்க அன்பு சத்தமாக சிரிக்க ஆனந்த் சிரிப்பை அடக்க சிரமப்பட்டான்.பின் கவி நான் காபி போடுறேன்.கிட்சன் எங்க? என்று கேட்டுவிட்டு ஷர்மியுடன் சென்று கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் காபியுடன் வந்தாள்.

பின்பு சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற கவியோ வீட்டுசாவியை மறந்துவிட்டதாய் சொல்லி திரும்ப அன்புவிடம் சென்றவள் சார் என்ன பண்ணீங்க… அரவிந்த் சார் இப்பல்லாம் ப்ரியா பக்கமே வரதில்லை என்று கேட்டு இப்போ  டைம் இல்லை.. நீங்க நாளைக்கு சொல்லுங்க என்று மறுபடியும் ஷர்மியுடன் சென்று இணைந்தாள்.

மனது நிறைந்த புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here