நீயே என் இதய தேவதை_54_பாரதி

0
429

ஹலோ…சார்  நான் அன்பு பேசுறேன்.

அன்பு என்றவுடன் என்னப்பா உடம்பு பராவாயில்லையா… என வினவ

முன்னைக்கு இப்போ நல்லாயிருக்கேன் சார்.கால்ல தான் கொஞ்சம் வலி இருக்கு.

நீ இல்லாம எந்த வேலையும் ஓடலை ப்பா.நிறைய பெண்டிங் வொர்க்ஸ் அப்படியே நிக்குது.இந்த சித்ரா ஒரு வேலையும் ஒழுங்கா முடிக்க மாட்டேங்குது.முடிஞ்ச அளவு சீக்கிரமா கம்பெனிக்கு வந்திடு என

சுண்ணாம்பு தலையன் ஒருவாரம் சேர்ந்த மாதிரி லீவு போட்டா கம்பெனியே என் ஒருத்தனால மட்டும் தான் நடந்துட்டிருக்கிற மாதிரி ஐஸ் வைச்சே உருக வைப்பான் என்று நினைத்துக் கொண்டு தானும் இந்த கம்பெனி இல்லையென்றால் அன்பரசனே இல்லை என்ற அளவுக்கு பதில் கொடுத்துவிட்டு நாளையே நிச்சயமாக கம்பெனிக்கு வந்துவிடுவதாக சத்தியம் செய்ய நிம்மதியுடன் போனை அணைத்திருந்தார் மேனேஜர்.

மறுபடியும் செல்போன் ஒளிர எடுத்துப் பார்த்தவன் “அட….நம்மாளு” என்றுவிட்டு கவியிடம் பேச சொல்லு…மா  என

சார்….இன்னும் உடம்பு முடியலையா என்க

இல்லை.. அதெல்லாம் ஒன்னுமில்லை.நாளைக்கு வந்திடுவேன். நான் இல்லாம கம்பெனி எப்படி போகுது….?

நம்மள திட்டிகிட்டே இருந்தவனும் தொலைஞ்சிட்டான் னு சந்தோசமா இருந்திருப்பீங்களே ….. என நகைக்க

அட நீங்க வேற சார்….வினோத் அண்ணா நீங்க இருந்தா வேலை ஒழுங்கா நடக்கும்னு எங்களை கவனிக்க மாட்டாரு.இப்போ அவரே இரண்டு லைனுக்கு சூப்பர்வைசிங் பாக்குறதுலால கொஞ்சம் சத்தம் வரக் கூடாதுங்குறார்.திரும்பி பாத்து மொறைக்கிறாரு.எம்.டி வரும்போது சாக்லேட் சாப்பிட்டு ஷர்மி மாட்டிக்கிட்டா.செம்ம திட்டு வாங்குனா…

அவள் சிறுபிள்ளை போல் குறைகளை அடுக்க அவள் சொல்லிய விதத்தில் சிரித்து விட்டவன் விடு விடு உங்க கூட்டணிககு இதுலாம் புதுசா என கேட்க

சா….ர் என்று முறுக்கிக் கொண்டவள் அத விடுங்க சார்  ப்ரியா பிரச்சனை எப்படி சரி ஆச்சு…? எங்களுககே தெரியாம எப்படி அவகிட்ட பேசுனீ்ங்க…? என கேட்க

எங்க சுத்தினாலும் கடைசியாக இங்க தான் வந்து நிக்குற…..என்றவன் கண்டிப்பா தெரிஞ்சே ஆகனுமா… என பீடிகையுடன் ஆரம்பித்தான்.

சொல்லுங்க சார்…தெரிஞ்சிக்கலைனா என் தலையே வெடிச்சிரும் என கேட்டவள் ப்ரியா கிட்ட இது பத்தி எப்போ பேசுனீங்க என்று கேட்க

உன் ப்ரென்ட் ரொம்ப அழுத்தக்காரி.அவ ஒரு முடிவெடுத்துட்டா அதுல இருந்து சீக்கிரம் மாற மாட்டா.அதுனால அவகிட்ட பேசுறதுல எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

அது எனக்கும் நல்லாத் தெரியும்.அப்புறம் எப்படி… எனக்குழம்ப

அன்பு விவரித்தான்.அன்று மணியின் விபத்து நடந்த நாளிலிருந்து அன்பு அரவிந்தனிடம் நட்பாக பழக ஆரம்பித்தான்.அப்படியே  அரவிந்தனது  குடும்பம் பற்றி பேச்சுக் கொடுக்க அவனுக்கு புரிந்தது இதுதான்.

அரவிந்தன் காதல் மணம் செய்தவன்.10 வயதில் ஒரு மகன்.6 வயதில் ஒரு மகள்.அம்மா,அப்பா, ஒரே தங்கை. தொடக்கத்தில்  அவனுக்கும் அவனின் மனைவிக்கும்  திருமண வாழ்வில் எந்த அன்னோன்ய குறைவும் இல்லை.ஆனால் சமீப காலமாக குழந்தைகள் வளர வளர செலவுகள் அதிகரிக்க குடும்பத்தை நிர்வாகிக்கும் அவனது மனைவிக்கு பொருளாதார வகையில் நிறைய குறைகள்.ஒரு கட்டத்தில் அதைச் சொல்லி சொல்லி அரவிந்தனை நச்சரிக்க ஆரம்பிக்க முதலில் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து வந்தவன் பிறகு குடும்பத்திற்காக  தனது சின்னஞ்சிறு தேவைகளை கூட முடிந்தளவு குறைத்து கொண்டான்.அந்த இயலாமையில்  ஒரு கட்டத்தில் குடும்ப வாழ்வு சலிப்பு தட்டியது.வீட்டுக்குள் நுழையும் போது இன்னைக்கு என்ன செலவோ என்னும்படியான மனநிலை.
முன்பு காதல் கொண்டு கரம் பிடித்த மனைவி, அன்பை பொழியும் அந்த முகத்தில் இப்போதெல்லாம் தன் மீது வெறுப்பு மட்டுமே இருக்க அப்படியான விரக்தியில் இருந்தபோது தன்னையே சுற்றி சுற்றி வரும் அந்த சிறு பெண்ணான ப்ரியா மீது மனம் சலனம் கொண்டது.
அவள் காட்டும் அக்கறையில் மனதில் தன்னாலே ஒரு பிடிப்பு.

இவையெல்லாம் தான் அரவிந்தனிடம் நெருங்கி பழகி அன்பு யூகித்துக் கொண்டவை.

ஆனந்த்திடம் சொல்லி நித்யாவிடம் சொல்லி  அரவிந்தனின்  தங்கைக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தரச் சொன்னான்.

பிறகு மெதுவாக ப்ரியாவைப் பற்றி பேச்சை எடுத்தவன் நிதானமாக சொல்லி புரிய வைக்க முயற்சி செய்ய அரவிந்தனோ நானா போய் அவளை கைய பிடிச்சு இழுக்கலையே என தெனாவட்டாக சொல்ல

கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டவன் இப்படியான தெனாவட்டுலாம் வேணாம் அண்ணா…உங்களுக்கும் தங்கச்சி இருக்கு.ஒரு பெண் குழந்தையும் இருக்கு.காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். என்றவனைப் பார்க்க பயமாய் இருந்தது அரவிந்தனுக்கு.

குடும்பம் என்ற அமைப்பில் தற்போது அவனுக்கு நிறைய மனக்கசப்புகள் இருந்தாலும் அவன் தங்கை மீதும் மகளின் மீதும் உயிரையே வைத்திருக்கின்றான்.

ப்ரியாவுக்கும் நீலாவுக்கும் உண்டான சண்டையிலும் தனக்கே உள்ள குற்றவுணர்வோடும் ஏற்கனவே யோசிக்கத் தொடங்கியிருந்தவன் அன்பரசன் பேசவும் ரொம்பவும் குழம்பி போய் முதலில் பேச்சை தவிர்க்க எண்ணினான்.

அன்புவை பார்த்ததும் விலக ஆரம்பித்தான்.அப்படியும் விடாது அவனை விரட்டி பிடித்தவன் கல்லை கரைப்பது போல அவன் மனதையும் கரைக்க தான் செய்து கொண்டிருப்பது தவறென்றால் சட்டென அதை விட்டு விலக மனம் வரவில்லை.அந்த நேரத்தில் அரவிந்தனின் மனைவியிடம்  சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி வைக்க இத்தனை காலம் அவனோடு சண்டைப் போட்டுக்கொண்டிருந்தவள் தன் கணவன் வேறொருத்தி மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறான் என்றதும் அவனை அணைத்துக் கொண்டு “என்னை ஏமாத்திட்டீங்களே”என்று  அழுது கரைந்தாள்.

எதுவானாலும் தைரியமாக சமாளிக்கும் மனைவி, நேருக்கு நேராய் சண்டையிட்டே பழகியவளின் கண்ணீரை கண்டதும் அவள் மேல் இருந்த நேசம் வெளிப்பட  மற்றது எல்லாமே மாயமாய் மறைந்தது அரவிந்தனுக்கு.அதன் பிறகு ப்ரியாவை எந்த விதத்திலும் நெருங்கவில்லை அவன்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த கவி பெருமூச்செறிந்தாள்.ஒரே வாரத்தில் இத்தனையும் செய்திருக்கிறானே என்று எண்ணி.

இருந்தாலும் ஒன்னு இடிக்குதே சார்.நீங்க அவரை இவ்வளோ பேசியிருக்கீங்க அவர் உங்கள எதும் கேக்கலையா…?

கேட்டாரே….

என்னன்னு….

நீ மட்டும் என்ன ஒழுங்கா டா…எப்பவும் அந்த  கவிதா பொண்ண ஆளயே விழுங்குற மாதிரி பாத்து சைட் அடிக்கிற.அந்த பைண்ணும் உன்னையே சுத்தி சுத்தி வந்து பேசிட்டிருக்கு …. னு கேட்டாரு. என்று அவன் சொல்ல

அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க….என தயக்கமாக கேட்க

அவ நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுனு சொன்னேன்.

சார்….என்ன விளையாட்டு இது.சும்மா தான சொல்றீங்க….என அவள் திணற

சத்தியமா இது உண்மை என குரலில் உறுதியோடு சொன்னவன் ஆமா கவி நான் உன்னை கல்யாணம் செய்துக்க விரும்புறேன் என்றதும் மறுபுறம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here