நீயே என் இதய தேவதை_55_பாரதி

0
392

அன்பு பேசிய வார்த்தைகளில் கோபமடைந்து அழைப்பை துண்டித்த கவி தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தாள்.நள்ளிரவு தாண்டியும் தூக்கம் வரவில்லை. திரும்ப திரும்ப அவன் பேசிய வார்த்தைகள் தாக்கம் அவளுக்குள் சத்தமிட்டுக் கொண்டேயிருந்தது.

இவனா இப்படி கேட்டான்…? என்று இன்னமும் நம்பவே முடியவில்லை.முதலில் அவன் கெட்டவன் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து வந்தாலும் அவனோடு பழகப் பழக தன்னுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டான்.தனது சித்தப்பாவிற்கு ( மதுரவாணியின் கணவர்)பிறகு அவள் இயல்பாய் பேசிப் பழகிய  ஒரே ஆண் அன்பரசன் தான்.அவன் மீது நல்லெண்ணமும் மரியாதையும் இப்போதும் உண்டு.ஆனால் இன்னொரு திருமணம் என்பதையெல்லாம் அவளால் சிந்திக்கவே முடியவில்லை.மாயா மட்டுமே தன் வாழ்வு என்பதில் உறுதியாய் இருந்தாள்.

தவிர ஒரு திருமணம் செய்து அனுபவித்ததே ஜென்ம ஜென்மாந்திரத்திற்கும் போதும் என்ற எண்ணம்.

ஆனால் அன்பு கேட்டதில் தவறில்லை.
என்னால் ஒருபோதும் இன்னொரு வாழ்வை நினைத்துக் கூப் பார்க்க முடியாது.என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று அன்பரசனிடம் தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு பின் அதை எப்படி செய்வது என்ற யோசனையில் அவள் தூக்கம் வராமல் தவிக்க

அவளை இவ்வாறு குழம்ப விட்டவனோ நிம்மதியோடு சுகமாக  தூங்கிக்கொண்டிருந்தான்.ஏனெனில்அவன் தன் விருப்பத்தை சொன்னதும் கவி உடனே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று
ஏற்கனவே யூகித்து வைத்திருந்தான்.
அதனால் பெரிதும் சுணங்கி போகவில்லை.கவியிடம் எப்போது எப்படி இந்த விஷயத்தை தெரிவிக்க வேண்டும் என்று நிறையவே யோசித்து வைத்திருந்தான்.ஆனால் போனீல் உரையாடிக்கொண்டிருககும் போதே மிகச் சாதரணமாக இப்படி போட்டுடைப்போம் என்று அவனுமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்.அதனால் என்ன..?இத்தனை நாளாய் தூக்கி வைத்திருந்த பாரம் குறைந்தது போலிருக்கவே மகிழ்ச்சியாய் தூங்கிப் போனான்.

அடுத்தநாள் காலை 9.30 மணி கம்பெனிக்கு 9  மணிக்கே போய் சேர்ந்தவனை நீலா ஆச்சர்யமாக பார்த்தாள்.ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு பாடல் ஒன்றை சீட்டியடித்துக் கொண்டே மாடிப்படியேறினான்.கால் சரியாய்டுச்சா ண்ணா….உடம்பு பரவாயில்லையா அன்பு என்று நலம் விசாரித்தவர்களுககெல்லாம் நடந்தபடியே பதில் சொல்லிவிட்டு உற்சாகமாக தனது பணிகளைப் பார்த்தான்.

தனது இடத்தில் வேலை பார்த்துக்கொண்டே இதை கவனித்த கவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள்.அவள் அசெம்பிள் செய்த வைத்ததை பார்க்க இங்கே வந்தாகணுமே.’வரட்டும்’ என்று காத்திருந்தாள்.அவனும் சிறிது நேரத்தில் கவியிடம் வந்தான்.

எதுவும் நேராதது போல இயல்பாக அவன் மெட்டீரியலை சோதிக்க
“உங்களுக்கே இது நல்லயிருக்கா …… சார்…” என்றாள் கோபமான குரலில்.

கோவப்படும் போது கூட அழகா இருக்க அம்மு… என்று தொண்டை வரை வந்து விட்ட வார்த்தைகளை அப்படியே முழுங்கியவன் ஹான்…அசெம்பிள் லாம் நல்லாத்தான் இருக்கு… நோ ப்ராப்ளம். குட் என

என்ன நக்கலா ….. இப்போ நான் எதைப் பத்தி கேட்கிறேன் னு உங்களுக்கு புரியலை.இத நான் நம்பணும்

அவள் கேட்ட தோரணையில் சிரிப்பு வந்தாலும் எதை பத்தி கேட்குற ன்னு எனக்கு நல்லாவே தெரியாது…டா. ஆனா ஒன்னும் அவசரம் இல்லை.பொறுமையாக யோசித்து பதில் சொல்லு என்று அவன் நிதானமாக கூற

சூழல் உணர்ந்து பல்லைக் கடித்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவள் இனி என்னை டா…னுலாம் சொல்லி கொஞ்சாதீங்க.

விளையாட்டாக ம்ம்  ம்ம் சரி…டா சரி டா என்றவளை கண்களால் எரித்தவள்

அப்புறம்.எனக்கு இதுல யோசிக்கலாம் ஒன்னுமே இல்லை.எனக்கு என் குழந்தை தான் உலகம்.இன்னொரு கல்யாணம் லாம் எனக்கு வேணாம்.என் முடிவு எப்பவும் மாறாது .வீணா உங்க நேரத்தை வீணாக்காதீங்க என்று உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு பேசுபவளைப் பார்த்து சிரித்து வைத்து பிரியாவிடம் நகர்ந்தான்.

கவி அன்பரசனிடம் ஏதோ கோவமாக பேசுவதை கவனித்த ப்ரியா குழப்பத்துடன் எண்ணாச்சு ண்ணா என கேட்க….

ஒன்னும் இல்லை என்று சற்று சத்தமாக சொன்னவன் கவி அறியாது அப்புறம் சொல்கிறேன் என்று சைகையில் சொன்னான்.

அதன்பிறகு அன்பு கவியை கண்டுகொள்ளவேயில்லை.அது அவளுக்கு நிம்மதியா இருந்ததா என்றால் அதுவும் இல்லை.கோபித்துக் கொண்டானோ என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டவள் அவனுக்கு கோவம் வந்தால் உனக்கென்ன ? உன் வேலையப் பாரு.என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பணியை செய்தாள்.

அன்று அவளது பணிநேரம் முடிந்தாலும் ரெஸ்ட் ரூம் சென்றிருந்த ப்ரியாவுக்காகவும் ஷர்மிக்காவும் காத்திருந்தாள். வினோத் ஒரு பைலை கொடுத்து போகும்போது ஹெச்.ஆர் ரூமில் கொடுத்துவிட்டு போ என, சரி என்று  முதலில் ஹெச்.ஆர் ரூம் சென்றாள்.சார்…என்று அழைக்க கம் இன் என்ற குரலிற்கு பிறகு உள்ளே சென்று பைலை கொடுத்தாள்.வினோத் அண்ணா கொடுத்தாங்க சார் என்றுவிட்டு நிற்க

அங்கே ஹெச்.ஆர் ருடன் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அன்பரசன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

அதை கவனிக்காதவள் சார்….நான் கிளம்பட்டுமா என்றவள் ஹெச் .ஆர் அனுமதியாக தலையாட்டியவுடன் வெளியே வந்தாள்.அவள் சென்ற சிறிது நேரத்தில் வெளியே வந்து கவியை முறைத்தவன் அறிவிருக்கா…? உனக்கு..?
உன்னை யார் இங்கெல்லாம் வர சொன்னது..? என

அவன் கேட்பது புரியாமல் வினோத் அண்ணா பைலை கொடுத்துட்டு வர சொன்னாங்க என திரும்ப சொன்னாள்.

வினோத் அண்ணா தனியா போகச் சொன்னானா..? நல்லவேளை நான் அங்க இருந்தேன்.தேவையெல்லாம் இந்தாளு ரூம்க்குலாம் போகாதே.அப்படியே சூழல் அமைஞ்சாலும் தனியா போகக்கூடாது.என்று அறிவுரைகளை அடுக்க

கவிக்கும் கோவம் வந்தது.  முகம் சிவக்க என்னவோ நான் என் சொந்த விஷயமா போய் அவர்கிட்ட சிரிச்சு பேசிட்டிருந்தது மாதிரி பண்றீங்க…சரி அப்படியே பேசியிருந்தாலும் உங்களுக்கென்ன…
என் மேல அதிகாரம் செலுத்தவோ அக்கறைப் படவோ நீங்க யாரு.நீங்க என்ன விரும்புறேன் சொன்னதால உங்க இஷ்டத்துக்கு ஆட்டுவிக்க முடியாது.என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும்.

ஐய்யோ….உனக்கு புரியலை கவி.அந்தாளு ரொம்ப மோசமானவன்.அவன்  உன்னை பாக்குற பார்வையே சரியில்லை. என்று  பொறுமையாக சொல்ல

அந்தாளு இருக்கட்டும்.நீங்க எப்படி பாத்தீங்களாம்…? உங்க மேல எவ்ளோ மரியாதை வச்சிருந்தேன்.ஒரே நாளில நீங்களும் ஒரு சராசரி ஆண் தான்னு நிருபிச்சிட்டீங்களே….என்று அவள் சொல்ல அவன் மனம் அந்த வார்த்தையில் அடிப்பட்டு போனது.கேவலம் ஒரு பொம்பளை பொறுக்கியோடு தன்னை ஒப்பிட்டு பேசுகிறாளே….இவள்.அந்தளவு இவளை நான் என்ன செய்து விட்டேன் என்று.

அவளிடம் வாதிட நிறைய இருந்தும் மனம் கலங்கிப் போய் ஏதும் சொல்லாமல் நான் உன்னை எந்த வகையிலும் தொந்தரவு பண்ண மாட்டேன்.நீ ஜாக்கிரதையா இரு  என்று விட்டு அகன்றான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here