நீயே என் இதய தேவதை_56_பாரதி

0
284

ப்ரியா அன்றிரவே அன்புவுக்கு கால் செய்ய அவனை மறைக்க ஏதுமீன்றி கவிதாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சொன்னான்.இதைக் கேட்ட ப்ரியாவும் மகிழ்ச்சியாகத் தான் உணர்ந்தாள்.

ஹே…ஹே….சூப்பர்ண்ணா என்று துள்ளல் குரலில் பேசியவளிடம்

கொஞ்சம் பொறு என்றுவிட்டு…கவியிடம் தான் பேசியதையும் அதன் பிறகு நடந்ததையும் சொல்ல

இந்த கவி என்ன லூசா…என்றுதான் தோன்றியது.அவகிட்ட நான் பேசுறேன் ண்ணா என்றவளை

நிச்சயமாக மறுத்தான்.இந்த விஷயம் உனக்குத் தெரியும் னு கூட அவளுக்கு தெரியக் கூடாது.இருந்தாலும் அவளை கொஞ்சம் பத்திரமா பாத்துக்க.உன் அளவுக்கு அவளுக்கு தைரியம் கிடையாது என

அவன் எதை வைத்து சொல்கிறான் என புரிந்து சரியென்று விட்டாள்.

கவியின் அறையில் மாயா இன்னும் தூங்காமல் சேட்டைகள் செய்தபடியிருக்க அவளை தூங்க வைக்க போராடி தோற்றவள் தூங்கட்டும் என்றுவிட்டு அமர்ந்து அவளை கவனிக்கலானாள்.

என்ன நினைத்தும் மறக்க முடியாமல் அன்பரசனை திட்டியது உறுத்திக் கொண்டேயிருந்தது.தன்னைத் தானே வைதபடி அமர்ந்திருந்தாள்.கோவம் வந்தால் இப்படித்தான் பேசுவாயா…? கண்ணியமாக திருமணம் செய்து கொள்ள சம்மதம்  கேட்டவனைப் போய்
எப்படியெல்லாம் பேசிவிட்டாய்…? என்று மனம் கேள்விக்கணைகளை தொடுக்க

தவறுதான்.மன்னிப்பு கேட்டுவிடலாம் என்றெண்ணி அன்பரசனின் மொபைலுக்கு அழைத்துப் பார்த்தாள்.அழைப்பு எடுக்கப்படவில்லை.சரி திங்கள் கிழமை கம்பெனியில் பேசி விடலாம் என்று நினைத்து போனை அணைத்து வைத்தாள்.

திங்கள் கிழமை காலையிலிருந்து கம்பெனியே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.அன்றுதான் எம்.டி தன் பதவியிலிருந்து கூடிய சீக்கிரம்  விலகப் போவதாகவும், அதன் பிறகு தனது மகன் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்றும் அறிவித்தார்.

அன்றைய நாளில் ஷர்மி போலவே 18 வயதாகமலே வேலைப் பார்த்த ஒரு சிறுமி தெரியாமல் பி.எப்க்கு அப்ளை செய்திருக்க சர்ட்டிபிகேட் ஜெராக்ஸில் செய்த பிராடுதனம் வெளியே வந்தது.அதிர்ச்சியடைந்த நிர்வாகம் புதிய எம்.டி கம்பெனிக்கு வருவதற்கு முன்னாடியே இதை சரிசெய்திட வேண்டும் என்று வேகமாக செயல்பட்டது.
அதனால் கம்பெனி நிர்வாகம் அந்தந்த தளத்தின் மேனேஜர்கள் மூலம் பணிபுரியும் எல்லோரது தகவல்களையும் மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தது.சந்தேகம் இருக்கும்படி இருந்தால் அசலான பள்ளிச் சான்றிதழை அல்லது ஆதார் கார்டை  கொண்டு வந்து ஒப்படைக்க  சொல்ல
ஷர்மியோ கேட்கவே வேண்டாம்.அவளது முகத்தை பார்த்தாலே சிறுபெண் போலத்தான் இருக்கும்.மேனேஜர் நாளைக்கு ஒரிஜினல் சர்ட்டிபிகேட் எடுத்து வா என்று விட்டு செல்ல அன்று முழுவதும் புலம்பிக் கொண்டே இருந்தாள்.ப்ரியா க்கும் கவிக்கும் அன்று முழுக்க அவளை சமாளிப்பதே பெரிதாக இருந்தது.ஆகையால் அன்பரசனை மறந்துபோனாள் கவி.

அடுத்தநாள் மேனேஜர் எச்.ஆர். வினோத் அன்பரசன் நான்கு பேரும் எதிரில் இருக்க ஷர்மியுடன் சேர்ந்து இன்னும் பத்து  சிறுவர்கள் சிறுமியர்கள் தலை குனிந்தபடி .

ஒரிஜினல் சர்ட்டிபிகேட் கேட்டதில் பாதிபேர் எடுத்து வந்து காண்பித்திருக்க மீதம் அத்தனை பேரும் வேறுவழியின்றி தங்களது உண்மையான வயதை சொல்ல வேண்டியதாயிற்று.

சுமார் 1 மணிநேரமாக அறிவுரை என்ற பெயரில் தாளித்துக் கொண்டிருந்தார் மேனேஜர்.இடையே ஜிங்சாங்க் போடுவது போல இந்த வயசுலயே இத்தனை ப்ராடுத்தனம் பண்றீங்க? வளர்ந்தா என்னென்ன பண்ணுவீங்க. என்று திட்டினாள்.மேனேஜர் முடிந்ததும்  எச்.ஆர் தொடர்ந்தார்.போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறோம் என பயமுறுத்தி.உங்கள யார் இப்படி செய்ய சொன்னது. சொல்லுங்க என்று திரும்ப திரும்ப கேட்டாலும் அனைவரும் சொல்லிவைத்தாற் போன்று நாங்களே தான் யோசிச்சி சர்ட்டிபிகேட் ஜெராக்ஸிலில டேட் ஆப் பர்த் மட்டும் மாத்தி ப்ரிண்ட் எடுத்தோம் என்று சொ்லினர்.

நேற்றே அவர்களின் கான்ட்ராக்ட் சூப்பரவைசர் அனைவரும் இதற்கு பயிற்சி கொடுத்திருந்தால் அவர்கள் வாயிலிருந்து எதையும் வாங்க முடியவில்லை.போனது போட்டும் என்ற முடிவுக்கு வந்த எச்.ஆர் இன்னைக்கு ஒருநாள் மட்டும் தான் உங்களுக்கு வேலை.நாளைக்கே எழுதிக் கொடுத்து சம்பளத்தை வாங்கிட்டு போங்க.அப்புறம் இனி இந்த கம்பெனி பக்கம் எட்டி கூடப் பாக்க கூடாது ஓடுங்க.என்றுவிட்டு கூட்டத்தை கலைத்தார்.

ஷர்மி அன்று முழுதும் அழுது அழுது ஓய்ந்துவிட்டாள்.இனி  கவியையும் ப்ரியாவையும்  தினமும் பார்க்க முடியாது என்பதே வருத்தமளித்தது.நாளைக்கு 1 மணிக்கு வந்திடு கவி.நான் சம்பளம் வாங்கிட்டு போகப்போறன்.கடைல சமோசா சாப்பிட்டு நான் வீட்டுக்கு போறன் நீங்க  வேலைககுப் போங்க. எனவும் 1 மணிக்கா என்று கவி யோசிக்க நானே நாளையோட கம்பெனி வரமாட்டேன் எனக்காக இது கூட பண்ணமாட்டியா என்று மூக்கை சிந்த சரி சரி நீ அழாதே…நான் கண்டிப்பா வரேன்.

ப்ரியாவிடம் நீ காசு எடுத்துட்டு வந்துரு என நீதான் சம்பளம் வாஙகப் போற…ல்ல என நானே நாளையோட கம்பெனி வரமாட்டேன்.எனக்காக இது கூட பண்ண மாட்டியா  என்று அவளிடம் அழ சரிடி அழாத எடுத்திட்டு வரேன் என்று சமாதானப்படுத்தினாள்.

அந்தநாளும் கவி அன்பரசனுக்கு போனில் அழைத்து பார்க்க அழைப்பு எடுக்கப்படவில்லை.ப்ரியாவிடமும் , ஷர்மியிடமும் எப்போதும் போல் இயல்பாக இருப்பவன் தன்னிடம் ஒற்றை வார்த்தை கூட பேசாதது ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது.கோபத்தில் பேசிய வார்த்தையின் வீரியத்தை அதன் பிறகு தான் உணர்ந்தாள்.

இப்போதும் கூட அவள் அவனிடம் பேசிய விதம் தவறாக தோன்றியதே தவிர அவனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் தோன்றவேயில்லை.

அடுத்தநாள் 1 மணிக்கெல்லாம்  கம்பெனிக்கு அருகில்   சிற்றுண்டி கடையில் கூடியிருந்தது கவி,ப்ரியா ஷர்மி நண்பர் குழு.அவளும் கவியும் ஒரு சமோசா ஒரு போண்டாவில் தங்களது பசியை முடித்துக் கொண்டு விட
ஷர்மி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ப்ரியா.இம்சை நான் சேத்து வைச்ச காசையெல்லாம் காலி பண்ணாம போகாது போல என்று முனுமுனுத்துக் கொண்டே.

சாப்பாடுக்கு பிறகு தனது செல்போனில் மூன்று பேரும் மாற்றி மாற்றி சுயமி எடுத்துக்கொண்டு கம்பெனி வர ஷிப்ட் ஆரம்பிக்க இன்னும் நேரமிருப்பதால் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அந்நேரம் அன்புவும் பைக்கில் அங்கு வர ஷர்மி அவனிடம் சென்றாள்.

அண்ணா என்ன இப்போ வர…ரெகுலர் ஷிப்ட் இல்லையா உனக்கு…? என

வினோத் ஷிப்ட் மாத்திக்க சொன்னாரு இன்னைக்கு மட்டும்.அதான் என்றவன் அதுசரி நீ இன்னும் போல என்று விட்டு சிரித்தான்.கவனமாக கவியை பார்ப்பதை தவிர்த்தான்.

சிரிக்காத ண்ணா.அம்மாகிட்ட லோன் போட சொல்லி ஸ்கூட்டி வாங்கலாம்னு ப்ளான் பண்ணேன்.எல்லாம் போச்சு.என்றவுடன்

இன்னும் பெரிதாக நகைத்தவன் ஸ்கூட்டியா… முதல்ல டையர் ஓட்டி பழகு ப்பே ப்பே என்று அவளை கேலி செய்தான்.

நானே கம்பெனி விட்டு போறேன் னு கஷ்டத்தில இருக்கேன்.நீயும் கிண்டல் பண்ற என்று அவனிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்

சரி சரி அழாத… விடு.டென்த் பாஸ் பண்ற வழியைப் பாரு.அப்புறம் எதாவது கோர்ஸ் எடுத்து படி என

வராத படிப்ப வா வா ன்னா எப்படி வரும் என்று மைன்ட் வாய்ஸ் சொன்னாலும் அதெல்லாம் விடு.எனக்கு பசிக்கிது எதுனா வாங்கித்தா என சற்று தள்ளி நின்று இதை கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா எர்ம மாடு.இப்பத்தானே டீ அந்த தீனி தின்ன.அதுக்குள்ள மறுபடியும் பசிக்கதா எனவும்

பாத்தியா நானே நாளையோட கம்பெனி வரமாட்டேன்…..என்று ஆரம்பிக்க அய்யோ ……நீ வா என்று அவளை அழைத்து கொண்டு போய் அவள் கேட்பதை வாங்கி கொடுத்து போய் வாம்மா தாயே என்று அனுப்பி வைத்தான்.

அன்றைக்கு கவி, ப்ரியா,ஷர்மி மூன்று பேரும் கான்ப்ரென்ஸ் காலில் பேச ஷர்மியோ என்னால தான் இனி டெய்லி கம்பெனி வர முடியாதுல்ல.நாளைக்கு நம்ம பீச் போவாமா என்று பாவமாக கேட்க கொலைவெறியானாள் ப்ரியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here