நீயே என் இதய தேவதை_57_பாரதி

0
463

அடங்க மாட்டீயா…நீ .? இன்னைக்கே என் காசு மொத்தமும் காலி பண்ணிட்ட. இதுக்கு மேல என்கிட்ட பத்து பைசா கிடையாது.நான் எங்கேயும் வர மாட்டேன்.போடீ… என

ப்ரியா…நான் இதுவரை பீச் பாத்ததே இல்லை.நாளைக்கு போலாமா… கேட்டது கவி.

நீயுமா ….. டீ என்று சலித்துக் கொண்டாலும் சரி போலாம்.ஆனா சம்பளம் வாங்குன குட்டிப் பிசாசையும் கொஞ்சம் பணம் எடுத்துவர சொல்லு.நாளைக்கு காலைல ஒன்பது  மணிக்குலாம் வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போறேன் ரெடியா இரு என்றதும் ஷர்மி  நாளைக்கு பீச் போகப் போறேமே என்று கத்தியது.

சரி சரி சீக்கிரம் தூங்குவோம்.மணி பதினொன்னு ஆச்சு.குட் நைட் என்றுவிட்டு போனை அணைத்தாள்.

மறுநாள் காலையில் கவியின் மேன்சன் அறையில் மூவரும் சுகுணாவுடன் வாதிட்டு கொண்டிருந்தனர்.

பாப்பாவ நான் பாத்துக்கிறேன் சித்தி.நீங்க பயப்படாதீங்க.நானும் பாப்பாவும் ப்ரென்ட் டு என ஷர்மி சொல்லி மாயாவை நோக்கி கை நீட்ட மாயா பயந்து ஓடி சுகுணாவிடம் ஒட்டிக் கொண்டது.

அவளுங்க கூட பராவாயில்லை.உன்னை பாத்தா தான் எனக்கு பயமா இருக்கு என்று சுகுணா சொல்ல ப்ரியா சிரித்து விட்டாள்.

பீச் லாம் ரொம்ப கூட்டமா இருக்கும்.உங்கள மாதிரி சின்ன பசங்கள நம்பி பாப்பாவ அனுப்ப முடியாது  என உறுதியாக மறுத்துவிட்டார்.பாப்பாவ நான் பாத்துக்கிறேன் நீங்க வேணா பத்திரமா போய்ட்டு வாங்க .

வேறுவழியின்றி சரி என்றுவிட்டு கிளம்ப சுகுணா கவியின் கைகளில் இருநூறு ரூபாயை திணித்தார்.

போய்ட்டு போண் பண்ணுங்க டீ… சீக்கிரம் வரணும். என்று ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு அனுப்பி வைத்தார்.

இரண்டு பஸ்.கிட்டதட்ட அரைமணி நேர பயணத்திற்கு பிறகு பரந்து விரிந்திருந்த மெரீனா அவர்களை வரவேற்றது.நீலக்கடலை முதல் முதலில் பார்த்த கவி உற்சாகத்தில் விழி விரிக்க  கண்கள் வைரம் போல மின்னின.இதுதான் பீச்சா…..என்று ப்ரியாவிடம் வெகுளியாய் கேட்டவள் ஷர்மி இழுத்தவுடன் அவளுடன் சென்று சிறுபிள்ளையாய் மாறி விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

ப்ரியாவோ சும்மா போய் கால் நனைத்துவிட்டு வந்து கரையில் அமர்ந்து சிரித்தபடியே அவர்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த கவியும் ஷர்மியும் இப்போதைக்கு கரைக்கு வரப் போவதில்லை என்று அறிந்து கொண்டாள்.

ஏய் ….நீ எங்க இங்க? என்ற பழகிய குரலில் திரும்பிப் பார்த்தாள் ப்ரியா.முதலில் ஆச்சர்யமடைந்தவள் கவியையும் ஷர்மியையும் நோக்கி கைகாட்ட புரிந்து கொண்டான்.

நீங்க எப்படிண்ணா இங்க? என்றதும் அவன் தனக்கு பின்னால் பலூன் சூட்டிங் விளையாடிக் கொண்டிருந்த பையன்களை காட்ட அடப்பாவீங்களா என்று  வியந்தவள் இன்னைக்கு மொத்த  வேலையும் ஊஊஊஊஊ தானா….  கேட்க

ஆம் பணியாளர்களில் பாதி பேர் இங்கே இருந்தால் பணி எப்படி நடக்கும்…..?

புது எம்.டி ஆபிஸ் ஜாய்ன் பண்றதுகுள்ளே  ஒரு வாட்டி கடைசியா ஒரு முறைனு கூப்பிட்டானுங்க. அதான் என்று அசடு வழிந்தவன்

அந்நேரம் கவியை கவனித்தான்.லைட் பின்ங்க் நிற சுடிதாரில் கடற்கரையின் இளவெயில் முகத்தில் விழுந்து தங்கம் போல ஜொலிக்க  உதட்டில் அழகான புன்னகையுடன் கரையேறி வருபவளை பார்த்து கண்கள் அதன் போக்கில் இமை தட்டாது  பார்க்க
அந்நேரம் அவள் பேசிய வார்த்தைகள் மீண்டும்  நினைவுக்கு வர நான் வரேன் என்று  அவ்விடம் விட்டு அகன்றான்.

ப்ரியாவிடம் வந்தவள் யார்கிட்ட பேசிக்கிட்டிருந்த என்றதும் அவள் அன்பண்ணா வந்திருக்காங்க இங்க என்றதும்

எங்கே எங்கே….. என்று அவசரமாக விழிகளை சுழற்றி தேடியவள் ப்ரியா கை காட்டிய திசையில் அவனைப் பார்த்துவிட்டதும் இதுதான் வாய்ப்பு   போய் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று எண்ணி அவனை நோக்கி செல்ல நினைத்து பின் வேண்டாமென்று விட்டுவிட்டாள்.பார்வையை மட்டும் அங்கிருந்து எடுக்கவேயில்லை.

இதை கவனித்த ப்ரியா இவளுக்கு எப்போதான் அவளோட மனசே  புரியப் போகுதா என்று எண்ணி பெருமூச்சுவிட்டுக் கொண்டவள் அவளை தொந்தரவு செய்யாது ஷர்மியை கரைக்கு இழுத்து வரச் சென்றாள்.

பசங்களிடம் பேசிக்கொண்டே தற்செயலாக இந்த பக்கம் திரும்பிய அன்பு ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கவியைப் பார்க்க வினாடி நேரத்தில் கண்கள் நான்கும் சந்தித்துக் கொள்ள ஒரு சுகமான உணர்வு இதயத்தை தாக்கியது போலிருந்தது.

அடுத்த வினாடியே தலையைக் கோதி தன்னை சமன் செய்து மீண்டவன்  என்னை மட்டும் அவ்ளோ கேவலப் படுத்திட்டு இவ மட்டும் எப்படி சைட் அடிக்குறா…. பாரேன் என்று முனுமுனுத்தவன் வேண்டான் டா அன்பு.தனக்குத்தானே சொல்லிக்கொண்டு பிறகு அந்த பக்கம் பார்க்கவேயில்லை.

அடுத்தநாள் நேற்று விடுமுறையான எல்லோரும் மேனேஜரின் முன்பு பவ்யமாக  கைகட்டி நிற்க மாஸ் கட் பண்ற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா…? கொஞ்சம் ப்ரீயா விட்டா ஓவரா ஆட ஆரம்பிச்சிட்டீங்க ல்ல…என்று திட்டிக்கொண்டிருந்தவன் சாட்சாத் நம் அன்பு  தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here