நீயே என் இதய தேவதை_58_ பாரதி

0
406

கிடைத்த தருணத்தில் ஜாலியாக ஊர் சுற்றி ஆடிப்பாடி திரிந்த பணியாளர்கள் ஞாபகத்தில் ஷிப்ட்,வேலை அதெல்லாம் ஞாபக்த்திலே இல்லை.கவியும் ப்ரியாவும் வீடு போய் சேரவே 5 மணி ஆகிவிட்டதால் 2 nd ஷிப்ட் பணி சுத்தமாய் நின்று போனது.

கொதிப்பில் இருந்த மேனேஜர் நேற்று விடுமுறையான அத்தனை பேரின் லிஸ்டை தயார் செய்து அவர்களை  செக்யூரிட்டி ரூமிற்கு எதிரிலேயே நிறுத்தி வைக்கும்படி சொல்லியிருந்தார்.அந்தப் பொறுப்பை நீலாவிடம் ஒப்படைத்திருந்தார்.அன்பரசன் முந்தைய நாளே மேனேஜரிடம் மீண்டும் ஒரு முறை தலையை ஸ்கேன் எடுக்க சொல்லியிருக்கிறார்கள்.அங்கே தாமதமானால் நாளைக்கு வரமாட்டேன் என்று சொல்லியிருந்தான்.அதனால் அவன் மீது சந்தேகம் எழவில்லை.

அன்றைய நாளில் தற்செயலாக விடுமுறை எடுத்திருந்த பெண்கள் இருவருடன் கவியையும் ப்ரியாவையும் பீச் சென்ற அத்தனை ஆண்களையும் நிறுத்தி வைத்துவிட்டாள்.

கவிக்கு முதன்முறை நீலா தனியாக கூட்டி வந்தபோது இருந்த பயம் இப்போது இல்லை.அவள் ப்ரியாவிடம் சாதாரணமாக எதையோ பேசியபடி நின்றிருந்தாள். கொஞ்சமாவது இது யார் முகத்திலாச்சும்  பனிஷ் பண்ணியிருக்காங்னு பயம் இருக்குதா பாரு.எல்லாம் மெடல் கொடுக்கப் போறா மாதிரி பெருமையா நின்னுட்டிருக்குங்க.

மேனேஜர் அன்புவும் இவர்களை நோக்கி வந்ததும்  எல்லோரும் கைகட்டி தலை குனிந்தபடி அமைதியாய் இருக்க, மேனேஜர் ஏதோ சொல்ல வாயெடுக்க அதற்கு முன்னரே
அன்பு ஏண்டா ஒரு நாள்ள இத்தனை பேரு லீவூ போட்ருக்கிங்க.ஒழுங்கா உண்மையை சொல்லுங்க. என 

எல்லா பையன்களும் உடம்பு சரியில்லை ண்ணா, தலைவலி, கால் வலி , வேன் மிஸ் பண்ணிட்டேன் என்று சப்பை காரணங்களை சொல்ல

ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லுங்கடா….என்று கடுமையாக சொன்னவன்  அவர்கள் அமைதியாக இருக்கவும் நானே சொல்லவா..நேத்து முழுநாளும் மொத்தமாக கட் அடிச்சிட்டு ஊர் சுத்தியிருக்கிங்க.கரெக்டா.மேனேஜர் அன்பரசனை ஆச்சர்யமாக பார்க்க எனக்கு எப்படித் தெரியும் பாக்குறீங்களா…? உங்க கூட்டதிலே ஒரு ஸ்பை வச்சிருக்கேன் என்றதும் மேனேஜர் அன்பரசனை பெருமை பொங்க பார்த்தார்.

(அந்த ஸ்பையே அன்பு தான் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும்  என்பதில்லை)

கொழுப்பு ஏறிப் போச்சுல எல்லாருக்கும்.கொஞ்சம் பாவம் பாத்தா தலைக்கு மேல ஏறி உக்கார்ந்திக்கிறது.
ஒரு நாள் வேலை நடக்கலைனா கம்பெனிக்கு எவ்ளோ லாஸ் னு தெரியுமா…? அவன் அவன் ஊர்ல வேலை கிடைக்கலைனு தானே இங்க வந்தீங்க.வேலை கிடைச்சதுக்கு அப்புறம் நீங்க உங்க வேலையக் காட்டுறீங்க….இல்ல
என்றவன் இன்னும் கொஞ்சம் நேரம் திட்டுவிட்டு அவர்களின் முகம் பார்க்க

எல்லோரும் அமைதியாய் இருக்க ஒருவன் மட்டும் இதழ்க்கடையில் நெளிந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.அடப்பாவிங்களா இவனுங்க நம்பி நான் பெர்பாமன்ஸ் பண்ணிட்டு இருந்தா சிரிச்சே காட்டிக் கொடுத்துடுவானுங்க போலிருக்கே என்று எண்ணிக் கொண்டவன் யாருமறியாது அந்த பையனை மட்டும் “சும்மா இரேன்டா….” என்று கண்களால் எச்சரித்து விட்டு மேனேஜரிடம் சொல்லுங்க சார் இவனுங்கள என்ன பண்ணலாம்…? என

அவரோ அன்பு தான் இத்தனை கடுமையாக திட்டிவிட்டானே.இனிமேல் வேறென்ன..என்று நினைத்தவர்இனிமே இப்படி செய்ய மாட்டேன் லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு எல்லாரையும் போய் வேலைப் பார்க்க சொல்லு என்றார் பெருந்தன்மையாய்.

நீங்க இப்படி விட்டு விட்டு தான் இப்படி
துள்ளுறானுங்க.மொத்த பேரையும் வேலையை விட்டு தூக்குங்க சார்.அப்பதான் இவனுங்களுக்கு புத்தி வரும் என்று சொல்ல

ப்ளீஸ் ண்ணா ப்ளீஸ் ண்ணா அப்படியெல்லாம் செய்யாதீங்க.நாங்க இனிமே இப்படி பண்ணமாட்டோம் என கதற
அன்பரசன் ‘ப்பா இவனுங்க என்னைவிட நல்லா நடிக்கிறானுங்களே’ என்று நினைத்துக் கொண்டான்.

மேனேஜர் அன்புவை அருகில் அழைத்து அடிக்குரலில் சீறானார்.டேய் அறிவு கெட்டவனே.அவனுங்க எல்லாரையும் வீட்டுக்கு   அனுப்பிட்டா இருக்க வேலை எல்லாத்தையும் நீயும் நானும் நின்னு பாக்க முடியுமா…?அவங்கள லெட்டர் எழுதி கொடுத்துட்டு உள்ள போகச் சொல்லு என்றதும்

ஓஓஓஓ…அப்படிங்களா சார்.சரிங்க சார் சரிங்க சார்.நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடுறேன் என்றான் கட்டளைக்கு பணிந்தவனாய்

அவனது தோளை அணைத்து விடுத்தவர் அதான் திட்டிட்ட ல்ல.சின்ன பசங்க னா கொஞ்சம் விளையாட்டாத் தான் இருப்பாங்க.கோவத்தை கட்டுபடுத்திக்க டா அன்பு என அறிவுரையை வாரி வழங்க இப்போது அவனுக்கே சிரிப்பை அடக்குவது பெரும் சிரமமாயிருந்தது.

பசங்களை நோக்கி திரும்பியவன் டேய்…உங்க நல்ல நேரம்.சார் உங்களை மன்னிச்சிட்டாரு.இனிமே இதே தப்ப பண்ணீங்க சார் என்ன பண்ணுவாருனு அவருக்கே தெரியாது.லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு போய் வேலையப் பாருங்க என்று முடிந்ததும் அந்த நடந்தில் நடந்து கொண்டிருந்த சிறிய நாடகம் முடிவுற்றது.

பின் மேனேஜர் இவங்கள  ஏன் இங்க நிக்க வெச்சிருக்கீங்க.என்று கவியையும் ப்ரியாவையும் மற்ற இரு பெண்களையும் பார்த்து நீலாவைக் கேட்க

இவங்களும் நேத்து ஆப்சென்ட் என்று நீலா சொல்ல

அட கட் அடிச்சிட்டு மொத்தமா ஊர் சுத்துனவன தான் திட்ட முடியும்.பொண்ணுங்களுக்கு லீவு போட ஆயிரம் ரீசன் இருக்கும்.நீயே சும்மா வார்ன் பண்ணி அனுப்பாம வெயில் ல நிக்க வெச்சிட்டு என்று அவளை காய்ந்தவர் உள்ளே போய் வேலையைப் பாருங்கம்மா… என்று எல்லாரையும் அனுப்பி விட்டார்.

தங்கள் தளத்தை அடைந்ததும் கவி ப்ரியாவிடம் இன்னும் வியப்பு குறையாதவளாய் என்னடி நடக்குது  இங்க…? என

அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காத என்று சிரித்தாள் ப்ரியா.

ஒருவேளை மாட்டியிருந்தாங்க ன்னா.

அப்படியெல்லாம் நடக்காதுனு ஒரு  நம்பிக்கை.நம்பிக்கை அதானே எல்லாம் என்று அவள் சொன்ன விதத்தில் கவியும் இணைந்து நகைத்தாள்.

என்ன வந்ததும் வேலை பாக்காம அரட்டை வேண்டிக் கிடக்கு உங்களுக்கு என்றபடி அவர்கள் எதிரில் வந்த சுதா கவியை அழைத்து ஒரு மெட்டீரியலின் பெயரையும் அதன் நம்பரையும் சொல்லி ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்துவரச் சொன்னாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here