நீயே என் இதய தேவதை_59_பாரதி

0
310

சுதா சொன்னபடி மெட்டீரியலை எடுக்க  ஸ்டோர் ரூமூக்குள் நுழைந்தாள் கவி.அது மிகவும் சிறிய பொருள் மற்றும்  அதிலும் அளவு வாரியாக பிரித்து வைத்திருப்பதால் மெட்டீரீயல் நம்பரை கையில் எழுதி வைத்துக் கொண்டு  வந்தவள் அங்கிருந்த ட்ரேக்களின் மீது என்ன நம்பர் ஒட்டப்ட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்தாள்.

கவனம் முழுக்க தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க மறந்தாள்.திடீரென ஒரு கரம் பின்னாலிருந்து அணைப்பது போல் சுற்றி வளைக்க, பதறிப்போனவள்  திமிறி போராடி அவன் பிடியிலிருந்து வெளிவந்து எதிரில் நின்று பார்த்தாள்.

அது அந்த கம்பெனியின் எச்.ஆர். நெருப்பை தொட்டது போல் அதிரந்தவள்  உடல் வியர்த்து  நடுங்க,  அருவருப்பில் முகம் சுளிக்க நின்றிருந்தாள்.

இவள் பார்த்துவிட்டாள் என்ற அதிர்ச்சி இருந்தாலும் இவளால் என்ன செய்துவிட முடியும் என்னை? என்ற திமிரோடு எச் .ஆர் அதே இடத்தில் நிற்க.

ரொம்பவும் பயந்து போனவள் …. சார் வழியை விடுங்க.நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை . இப்போ நீங்க நகர்ந்து போகலேன்னா நான் கத்திடுவேன் என வார்த்தைகள் வராத நிலையில் ஒரு மாதிரி திக்கி திண்றி கூறினாள்.

வெளியே செல்லப் போனவளை தடுத்து மீண்டும் உள்ளே தள்ளியவன்
திரும்ப போகும்  வழியை மறித்து நின்று கத்து.யார் வேண்டாம்னு சொன்னது…? காஸ்ட்லி மெட்டீரியல் திருடி தினம்  வீட்டுக்கு எடுத்துப்  போறா..? இன்னைக்கு கையும் களவுமா பிடிச்சவுடனே என் மேல தப்பா  நடகக பாத்தாருனு பழி போடுறா னு சொல்வேன்.வேலை போய் திருட்டு பட்டமும் வாங்கிப்பா.அதனால அதையெல்லாம் விட்டுட்டு நான் சொல்றதை கேட்டன்னா…என்று ஆரம்பித்து அவன் பேசியதை கேட்க முடியாமல் அருவருப்பில் முகம்  சுளித்தவளது  உடல் பயத்தில் தூக்கி வாரிப் போட்டது.இதயம் துடிப்பு ஏகத்துக்கும்  கூடியது.

  அவன் தன்னை நெருங்கி வர வர  வேணாம்….வேணாம் என்று  செய்வதென்றே புரியாமல் கவி பின்வாங்கிக் கொண்டிருந்த நேரம் சட்டென்று கதவு திறக்கபட அன்பு உள்ளே நுழைந்தாள்.

அன்பரசனை பார்த்ததும் எச்.ஆர் அதிர்ச்சியில் உறைய கவியோ .தாயிடம் அண்டிய கன்றைபோல அவனிடம் ஓடி ஒட்டிக்கொண்டு அழுது கரைந்தாள்.தைரியாமாக இரு ஒன்றுமில்லை என்பதாய் ஒரு முறை  அணைத்து விலக்கியவன் போ  முகத்தை கழுவிட்டு உன் இடத்திற்கு போ. யார்க்கிட்டேயும் எதும் சொல்லிக்க வேண்டாம் என்று அனுப்பிவிட்டவன் எச்.ஆர் ரிடம் திரும்பினான். பிறகு அந்த அறையில் என்ன நடந்ததோ  ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வீங்கிய கன்னங்களோடு வெளிவந்தார் எச்.ஆர்.

அவருக்கு பிற்கு வந்தவனைப் பார்த்து இதற்கு நீ பதில் சொல்லியே ஆகணும் அன்பு என்று வார்த்தைகளை கடித்து துப்பியவரைக் கண்டு

போடா டேய்…போடா என்று  அலட்சியமாய் பதில் சொல்லிவிட்டு நடந்தான்.

தன் இடத்திற்கு வந்தவன்  கவியின் அழுது சிவந்த முகத்தைக் கண்டு இன்னும் ஆத்திரம் தீராமல் தனது மேஜையை குத்தினான்.

ஸ்டோர் ரூமூக்குள் எச்.ஆர் நுழைவதை பார்த்துவிட்டு இவனுக்கு இங்க என்ன வேலை என்று குழப்பாமனவன் என்னவோ இருந்துட்டு போகட்டும் என்று நினைத்து கொண்டு தன்னிடத்துக்கு செல்ல சுதா ப்ரியாவிடம் எங்க இந்த கவி பிள்ளை..? ஸ்டோர் ரும்ல இருக்க மெட்டீரியல் தானே  எடுத்துட்டு வர சொன்னேன்.இவ என்ன இவ்ளோ நேரம் ஆக்குறா… என அங்கலாய்க்க

அசம்பாவிதம் உணர்ந்தவன் அவசர அவசரமாக ஸ்டோர் ரூம் பக்கம் ஓடினான்.நல்லவேளையாக ஸ்டோர் ரூம் கதவுக்கு உள் பக்கம் தாழ்ப்பாள் இல்லை.

ஸ்டோர் ரூமில் Cctv கேமரா பழுதாகி இருந்தது எச்.ஆர் க்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.ஆகையால் தான் அதை தனக்கு சாதகாமாக பயன்படுத்திக்கொண்டு கவியிடம் வாலாட்ட நினைத்தான் என்பது அன்பரசனுக்கு புரிந்தது.

1 மணிநேரத்தில் உடல்நிலை சரியில்லை.அரைநாள் விடுப்பு வேண்டும் என்று லீவு லெட்டருடன் நின்றாள் அவளது நிலையைப் புரிந்து கொண்டவன் அதில் தான் கையொப்பமிட்டுவிட்டு மேனேஜரிடம் நீட்ட லீவெல்லாம் தர முடியாது என்று சொல்ல வந்தவர் அவளது முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ சரி பாத்து போ என்று கையொப்பமிட்டு கொடுத்தார்.

நடந்து வீட்டை அடையும் வரை அழுகையை அடக்கிக் கொண்டவள் தனது அறைக்கு வந்ததும் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். இப்படி ஒரு அத்துமீறலை அவள் முதல் முறையாக எதிர்கொண்டிருக்கிறாள்.அன்பரசனைத் தவிர கம்பெனியில் வேலைப் பார்க்கும் பிற ஆண்களிடம் தேவையில்லாமல் பேசியது கூட கிடையாது.மற்ற ஆண்கள் யாரும் இவளை தவறாக பார்த்தது கிடையாது.ஏன் பணியாளர்களிடம் ஜொள்ளு பார்ட்டி என்று பேரெடுத்த அரவிந்தன் கூட அவளிடம் கண்ணியமாகத் தான் நடந்து கொள்வார்.ஆகவே தான் சரியாக இருக்கும்வரை எல்லாம் சரியாக இருக்கும் நினைத்துக் கொண்டிருந்தாள்.அது எப்படி….? மான் சைவம் என்பதற்காக இதர மிருகங்கள் அதை வேட்டையாடமல் இருந்துவிடுமா . என்ன .? என்று சூழல் கேட்ட கேள்விக்கு பதிலில்லை அவளிடம்.

இதுவரையில்லாத இல்லாத அளவுக்சத இப்போது  தான் தனது ஆதரவற்ற நிலை அவளைப் பெரிதும் பயமுறித்தியது. கொண்டிருந்த நம்பிக்கையெல்லாம் மொத்தமாய் தொலைந்து அச்சம் மட்டும் பெரிதாகக் கொண்டே இருந்தது.

வேண்டாம்…வேண்டாம் என்று நினைத்த அன்பரசன் மனது கேளாமல் கவியை  போனில் அழைத்தான்.

எதிர்ப்க்கம் வெளிப்பட்ட கேவலில் கவி அழுறியா….? என

அவளோ வெடித்து அழ ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்

ப்ப்ச்ச் போதும்.நிறுத்து.

என்னை மன்னிச்சிடுங்க சார்.நீங்க அப்போவே சொன்னீங்க.நான் தான் கேட்கமா உங்களையே திட்டி…..
என்று ஆரம்பித்தவளை

அதெல்லாம் வேண்டாம் விடு. என்று நிறுத்தியவன் இனி அவன் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டான்.பயப்படாத என ஆறுதலாய் சொல்ல

நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்.சார் .இனிமே அங்க என்னால  வேலைப் பார்க்க முடியாது.பயமா இருக்கு. என்று அழுபவள் மீது பரிதாபம் தோன்றினாலும் இப்போதை அதை வெளிப்படுத்தினாள் இவள் மேலும் குறுகிப் போய்விடுவாள் என்று எண்ணி

சரி.வேலைய விட்டு வேற என்ன பண்ணப் போற…என்று கண்டிப்பாக கேட்டான்.

“வேற வேலை தேடிக்குவன்”

அங்கேயும் இது மாதிரி ஒருத்தன் இருந்தா….

அவள் யோசனையில் அமைதியாக இருக்க

திரும்பவும் வேலை விட்டு வேற இடம் பாப்பியா…எவ்ளோ நாள் இப்படி பிரச்சனையை பேஸ் பண்ண தைரியம் இல்லாம அதைப் பார்த்து ஓடிக்கிட்டே இருக்கப் போற….

……

அவன் உன்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணப்ப அந்த நேரத்துல பயந்து பின்வாங்கினியே தவிர இந்த சுச்சுவேசனை எப்படி ஹேண்டில் பண்றதுனு நீ யோசிக்கவேயில்லை.உன்னோட அந்த பயம் தான் அவனுக்கு ப்ளஸ்.நீ மட்டும் யோசிச்சு பக்கதுல்ல இருந்த அந்த சுத்தியல்ல எடுத்து சும்மா மெரட்டியிருந்தா கூட அவன் ஓடிப் போயிருப்பான்.

அந்த நேரத்துல எனக்கு எதுவுமே தோணலை சார்.

தோணனும்.நீ வேலை பார்க்கிற
அதே இடத்திலே தானே அத்தனை பொண்ணுங்களும் வேலைப் பாக்குறாங்க.அவங்களும் இது போல பிரச்சனைங்கள அனுபவிச்சவங்க தான்.ஆனா அதை கடந்து வரலையா…?

சித்ராக்கா தெரியுமா…? கம்பெனி சேர்ந்த புதுசுல உன்னை விட பயந்த சுபாவம்.ரொம்ப அமைதியானவங்க.
இரண்டு வருசம் முன்னாடி அவங்க ஹஸ்பண்ட் இறந்திட்டாரு. அவங்க கணவர் இறந்ததுக்கு அப்புறம் அவங்களுக்கும் இது மாதிரி நிறைய தொல்லை இருந்தது.

அவங்க அப்போவே கம்பெனி விட்டு நின்னிருந்தா  சூப்பர்வைசர்ல இருந்து க்வாலிட்டி கன்ட்ரோல் ல ஹெட் டா வந்திருக்க முடியுமா…?

தைரியத்தை வளர்த்துக்க கவி.நம்மள மீறி யார் என்ன செய்ய முடியும் ? என்று மென்மையாக எடுத்து சொன்னான்.

நாளை விடுமுறை எடுத்துக்கொண்டு மறுநாள் வருவதாக சொன்னாள்.அவனுடன் பேசியது மனதிற்கு நிம்மதியாய் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here