நீயே என் இதய தேவதை_60_பாரதி

0
300

அன்பரசனின் வார்த்தைகளில் உள்ள உண்மை கவிக்கு புரிந்தது.எங்குதான் இது போன்ற தொல்லைகள் இல்லை….? இனிமேல் இன்னும்னகொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வோம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தெளிந்தவள்  அடுத்த நாளே வேலைக்கு சென்றாள்.

அன்றும் எச்.ஆர் வீக்கம் முழுமையாக ஆறாத கண்ணங்களோடு பார்க்கும் பொழுதெல்லாம் கண்களால் எரித்துக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் தாமதாக வந்து கவியை  கவனித்த அன்பு மெச்சுதலான ஓர் பார்வை பார்த்து குட். என்றவன் அத்தோடு தன் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.நேற்று அவன் பேசிவிட்டதால் தங்களுக்குள் இனி எந்த மனக்கசப்பும் இல்லை.இனி எப்போதும் போல் தன்னுடன் இயல்பாய் பேசி சிரிப்பான் என்றெல்லாம் நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அன்றிரவே போனில் அழைத்து அதை கேட்கவும் செய்தாள்.

எனக்கு புரியலை என்றவனிடம்

நான்தான் அன்னைக்கு பேசுனதுக்கு சாரி கேட்டுட்டன்ல அப்புறமும் ஏன் என்கிட்ட பேசமாட்டேங்குறீங்க…என்று அவள் மனத்தாங்கலோடு கேட்க

என்ன பேசணும்….?

………

சரி.சொல்லு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா……

இப்போ இதுக்கும் அதுக்கும் என்ன…சம்மந்தம் என்று பேசுபவளை இடை மறித்தவன்

கேட்டதுக்கு மட்டும்  பதில் சொல்லு என கடுமையாக சொன்னவன்  என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா…? என்று மீண்டும் கேட்க

முடியாது என்று உறுதியாக சொன்னாள்.

அப்போ நான் உன்னை அவாய்ட் பண்றதுதான் உனக்கும் நல்லது.எனக்கும் நல்லது.தேவையில்லாம கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாத என்று கத்திவிட்டு போனை அணைத்தான்.

என்னவோ சின்னக்குழந்தை சாக்லேட் தரலைல உன்கிட்ட பேசமாட்டேன் போ என்பது போலத்தான் இருந்தது அவன் பேச்சு.

காத்திருந்து பார்த்தாள் அவனாய் பேசட்டும் என்று. அவன் மாறுதாய் இல்லை.

முன்னர் அவன் திட்டும்போதெல்லாம் முகம் மாறுபவள்  இப்போது  அவன் திட்டாவாவது என்னிடம் பேசட்டுமே என்று சில  மெட்டீரியலை மட்டும் வேண்டுமென்றே  தவறாக அசெம்பிள் செய்து வைத்தாள்.அவளது ட்ரேவை பார்த்தவன் ரிஜக்சன்  மெட்டீரியலை எடுக்க வருவதற்குள் அருகில் நின்றிருந்த வினோத் அதைப் பார்த்துவிட்டான்.அன்பரசன் எடுப்பதற்கு முன்பே அதை எடுத்தவன் ஏன்…மா இவ்ளோ ரிஜக்சன் பண்ணி வச்சிருக்க.மெட்டீரியல் சும்மா கிடைக்குதா….? என்று ஆரம்பித்து காய்ச்சி எடுத்துவிட்டான்.

அன்பு கடையிதழில் தோன்றிய சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

அதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று விட்டுவிட்டாள்.

ஆனால் முன்பு அன்பு பார்த்துக் கொண்டிருந்த வேலையை கவி தீவிரமாக செய்ய ஆரம்பித்தாள்.அதாங்க சைட் அடிக்கிற வேலை தான்.

கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்றா.நம்மள விட அதிகமா சைட் அடிக்கிறாய்ய்யா….என்று உள்ளுக்குள் முனுமுனுப்பவனோ வெளியில் எதையும் கண்டுகொள்ளாது இருந்தான்.

இரக்கமற்ற நாட்களும் அன்புவை போல் எதையும் கண்டுகொள்ளமால் ஓட ஆறு மாதம் கழிந்திருந்தது.

அன்று முகத்தை முடிந்தளவு இயல்பாக வைத்துக்கொள்ள நினைத்திருந்தாள் கவி.ப்ரியாவுக்கு தன் சொந்த ஊரில் திருமணம்  நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.நல்ல விஷயம் தான்.ப்ரியா தனக்கு கல்யாணம் என்பதை வெட்கப்படுக்கொண்டே சொல்வதை பார்க்க கூட மிக அழகாய் இருந்தது தான் என்றாலும்
நிச்சயத்தார்த்தக்கு பிறகு வேலைக்குப் போக வேண்டாம் என்று தடுத்து விட்டார் அவரது சித்தி.ப்ரியா கல்யாணம் வரை போய்ட்டு வரேன் என்று அடம்பிடித்தாலும் அதெல்லாம் ” “ஒன்னும் வேணாம்.ரொம்ப இளைச்சிட்ட பாரு.வீட்டுல பிடிச்சத சாப்பிட்டு ஆரோக்யமா இரு.வெய்யில் சுத்தி கருத்துப் போயிட்டா ….உன் வருஙகால மாமியாருக்கு யார் பதில் சொல்றது” என்று அவர் கொடுத்த  முழுநீள அறிவுரையில் வேறு வழியின்றி அவர் சொன்னதை செய்தாள்.

ப்ரியா  கம்பெனியை விட்டு நின்று ஒரு வாரம் ஆகியிருக்க அவளில்லாது வேலை செய்வதற்கே கஷ்டமாக இருந்தது கவிக்கு.தினமும் போனில் பேசினாலும் நேரில் பார்ப்பது போல்
இல்லை.

கவிககு ப்ரியாவையும் ஷர்மியையும் தவிர யாரிடமும் அத்தனை பழக்கமில்லை.புதிதாக வேலைக்கு சேர்ந்த தன்னை விட   சின்ன பசங்களிடம் அவள் வேலை கற்றுக் கொடுத்து பேசினாலும் அந்தளவு நெருக்கம் தோன்றவில்லை.
மனது கசந்தாலும் அந்த பிரிவை ஏற்றுக் கொள்ள முயன்றாள்.

அதற்கு பிறகு இன்னொரு அதிர்ச்சி அன்பரசன் ஒரு வாரம் கம்பெனி வரவில்லை.எங்கே போய்விட்ப் போகிறான் இன்னும் ஒரு வாரம் நாட்களை நெட்டித் தள்ளினால் அப்போதும் அவன் கம்பெனி வந்து சேரவில்லை.

என்னதான் ஆயிற்று இவனுக்கு.உடல் நிலை சரியில்லை என்றாலும் இந்த கம்பெனியை கட்டிக் கொண்டு தான் அழுவான்.இப்போ இத்தனை நாளாய் எங்கப் போனான் என்று தவித்துப் போனவள் இரவு என்னவானாலும் சரி என்று அவனது நம்பருக்கு அழைத்தாள்.

அன்று அவன் திட்டி அழைப்பை துண்டித்ததற்கு  பிறகு இப்போது தான் அவனை மீண்டும் போனில்  அழைக்கிறாள்.இரண்டு முறை   முழுமையாக ரிங் கேட்டும் அழைப்பு மறுபக்கம் எடுக்கப்படாமல் இருக்க அன்புவை திட்டிக்கொண்டே மீண்டும் முயற்சி செய்தாள்.

மூன்றாவது ரிங்கில் அழைப்பு எடுத்து ஹான்…சொல்லு என்றான் சாதாரணமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here