நீயே என் இதய தேவதை_61_ பாரதி

0
348

ஆறு மாதங்கள் கழித்து தன்னிடம் பேசிய அந்த குரலை உள்வாங்கியவளின்  விழிகளிலிருந்து  அனிச்சையாக துளி கண்ணீரை வெளிவந்தது.

அழைத்துவிட்டு அவள் அமைதியாக இருக்க

சட்டென்று அலட்சியத்தை கைவிட்டு குரலில் மென்மையை  கொண்டு வந்து மீண்டும் சொல்லு….. மா என்றான்.

நீங்க ஏன் இன்னைக்கு வரலை என்று நேரடிறாக விஷயத்திற்கு வந்தாள்.

எது…? என்ன கேக்குற? எனக்கு புரியலை என அவன் நடிக்க

ஆமா.உங்களுக்கு புரியாது தான்.எனக்கே என்னை புரியாதபோது உங்களுக்கு எப்படி புரியும்.என்று புலம்பவளை மனதில் இரசித்துக் கொண்டே மறுபடியும் ஏதும் புரியாதது போல்

கவீ…..வாட் ஹேப்பண்ட்…?  எதுக்கு இப்படி பேசுற….? என கேட்டான்.

மறுபடியும் மறுபடியும் பாருங்க.எதுவும் தெரியாத மாதிரியே பேசுறீங்க என அவள் முடுக்கிக் கொள்ள

நீ சொன்னாத்தான தெரியும் என்றான் அழுத்தம் திருத்தமாய்.

இரண்டு வாரமா ஏன் நீங்க கம்பெனிக்கு வரலை? என்னால தான.என்னைப் பாக்கவே உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா இருக்கா …?அவளுங்க இரண்டு பேரும் சொல்லிட்டு போனாளுங்க.நீங்க சொல்லாமலே என்னை விட்டு போய்ட்டீங்க.யாருக்கும் நான் முக்கியம் இல்லை ல  என அழுதவளை கண்டு உள்ளம் இரங்கினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

தற்சமயம் இந்த பிரிவு தான் அவள் மனதை அவளுக்கு புரிய வைக்கும்.  அழுகையும் தவிப்பும்தான்  அவளது நேசத்தை அவளுக்கே உணர்த்தும் என்றெண்ணியவன் 

உனக்கு தெரியாதா …?

என்ன னு

நம்ம எம்.டி அவரோட கம்பெனி நிர்வாகத்தையெல்லாம் அவர் பையன்கிட்ட ஒப்படைச்சிட்டாரு.புது எம்.டி வந்ததிலர்ந்து கம்பெனியில நிறைய  மாற்றம் இருக்குல ? அதுல ஒன்னுதான் என்னை வேற ப்ரான்ச்சுக்கு ட்ரான்ஸ்பர்  பண்ணியிருக்காங்க என சாதாரணமாக சொன்னான்.

ட்ரான்ஸ்பர் பன்ற அளவுக்கு என்ன தப்பு பண்ணீங்க என்று அவள் வியப்பாய் கேட்க

ஹா…ஹா என்று நகைத்தவன் இது அப்படி இல்லை மா.இது ஒரு ப்ரோமசன் மாதிரி.இங்க நான் அசிஸ்டென்ட் டா தான இருந்தன்.அங்க முதன்மையா இருக்கப் போறன்.கூடுதல் பொறுப்பு கொடுத்திருங்காங்க னு வச்சிக்கயேன். சம்பள உயர்வும் கொடுத்திருக்காங்க என்று அவன் பெருமையாக சொல்ல

ஏதோ ஒன்னு.ஆனாலும் நீங்க ஏன் போனீங்க.நான் இஙக தான் இருப்பேன் னு சொல்ல வேண்டியதுதானே என அடம்பிடித்தவளைக் கண்டு

பெரிதாய் நகைத்தவன், சொல்லியிருக்கலாம் தான்.ஆனா எம்.டி ஒன்னும் என் மாமனோ மச்சானோ சித்தப்பனோ பெரியப்பனோ இல்லையே.என்ன செய்ய என்று கேலி செய்து மீண்டும் நகைக்க கடுப்பானவள்

சிரிங்க. நீங்க நல்லா  சிரிங்க.நான் போனை வைக்கிறன்.தனியா சிரிங்க என்று அழுகையும் கோபமும்  பொங்கி வர போனை அணைத்து வைத்தாள்.

அழைப்பு துண்டித்தது அறிந்ததும் மீண்டும் போன் செய்து அவளை சமாதானப்படுத்தும் எண்ணத்தை கட்டுப்படுத்திக் கொண்டு போனை அணைத்தான்.

மறுபுறம் கவியோ அவனை ட்ரான்ஸ்பர் கொடுத்து அனுப்பிய எம்.டி  யை நன்றாக சபித்துக் கொண்டிருந்தாள்.

அவர் வந்ததிலிருந்து நிறைய நன்மையான மாற்றங்கள் வந்தது உண்மைதான்.கம்பெனி பணியாளர்கள் மட்டுமில்லாது கான்ட்ராக்ட் பணியாளர்களுக்கு சம்பளம் ஏறியது.கேண்ட்டீன் சாப்பாடு ஓரளவு தரம் உயர்ந்தது.தேநீர் இடைவெளி நேரம் மேலும் ஐநது நிமிடங்கள் கூடியது. இப்படி பல நன்மைகள்.

மேலும் அவர் கம்பெனியில்  உழைக்கும் அன்பு போன்ற இளைஞர்களை மேலும் ஊக்குவித்தார்.எச்.ஆர் பொறுப்பில் இருந்து செய்து வைத்த அயோக்கியத்தனங்களை கண்டுகொண்டாரோ இல்லையோ கம்பெனியை பொறுத்தவரை நிறைய பொறுப்புகளை அவர் எடுத்துக் கொண்டு எச்.ஆர் ஐ டம்மிபீசாய் ஆக்கியிருந்தார்.எல்லாம் நன்றாகத் தான் இருந்தது கவிக்கு .அன்புவை இடம் மாற்றியது தவிர.

அடுத்தநாளும் அதே நேரத்தில் அன்புவை போனில் அழைத்தாள் கவி.

சொல்லு….என்றவனிடம்

எப்படி இருக்கு புது ஆபிஸ்  வேலை? நாங்கலாம்  இல்லாம ரொம்ப ஜாலியா இருக்கிங்க போல ..என்று நக்கலாக கேட்டவளிடம்

ஆமா கவி.அதுமட்டும் இல்லை. அழகழகா இங்க நிறைய பொண்ணுங்க இருக்காங்க.அப்படியே அவங்க கூட  ஜாலியா பேசிட்டே வேலைப் பாக்கும்போது வேலையோட அசதியே தெரியலைனா  பாரேன் என்று துள்ளலாக அவன் சொல்ல

எது? ஜாலியா இருக்கியா…? இருப்ப டா நீ ஜாலியாத்தான் இருப்ப என்னை இங்கே தவிக்க விட்டுட்டு…… என்று பல்லைக் கடித்து  மனதிற்குள் பேசிக்கொண்டவள்
ஏன் சார்…இங்கேயும் நீங்க அப்படித்தான இருந்தீங்க என

இங்கயா… பேச ஆரம்பிச்சாலே எல்லாம் அண்ணனு தான் சொல்லுங்க.ச்சைக். அங்கயே இருந்து என் இத்தனை வருசத்த வேஸ்ட் பண்ணிட்டேன்.கடவுள் இப்போதான் கண்ணை திறந்து இருக்கார் என்று உற்சாகமாக  பேசி அவளை மேலும் கடுப்பேற்ற

“மண்ணாங்கட்டி..”என்று முனுமுனுத்தவள் அவன் என்ன என்னவென்று புரியாது கேட்கவும் ஒன்னுமில்லை சார். நீங்க உங்க வேலையப் பாருங்க சார்.நாளைக்கு போய் மறுபடி ஜாலியா பேசனும்ல என்று சொல்ல

அதுவும் சரிதான்.குட்நைட் என்று அழைப்பை துண்டித்து  போனை அணைத்துவைத்தான்.

கவிக்கோ ஏன் எதற்கு என்பது தெரியாமலே அத்தனை கோபம் வந்தது அன்பரசன் மேல். என்கிட்ட ஆறு மாசமா ஒத்தை வார்த்தை கூட பேசாம அலைய விட்டுவானாம்.அங்க சேர்ந்த இரெண்டே வாரத்திலே எல்லாப் பொண்ணுங்க கிட்டேயும் ஜாலியா பேசுவானாம் என்று அங்கலாய்க்க

அவனை தான் நீ வேணாம் னு சொல்லிட்டு இல்ல.இனி அவன் யார்கூட பேசுனா உனக்கு என்ன….? மனம் கேள்வியெழுப்ப நீ கூட அவனுக்கு சாதாகமாக யோசிக்க ஆரம்பிச்சிட்டியா என்று அதனையும் திட்டித் தீர்த்துவிட்டு உறங்கினாள்.

என்னதான் அவனிடம் பேசிய பிறகு அவன் கோவத்தை ஏற்றிவிட்டாலும் அவனின் குரல் கேட்காமல் இருக்க முடியவில்லை கவியால்.தினம் தினம் அழைப்பு விடுத்து பேசுவது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here