நீயே என் இதய தேவதை_62_பாரதி

0
321

தினசரி வழக்கம் போல் அன்றும் அன்பரசனுக்கு அழைப்பு விடுக்க அவன் அட்டெண்ட் செய்யவேயில்லை மீண்டும் மீண்டும் அவனுக்கு முயற்சி செய்து பார்த்தவள் ஒரு கட்டத்தில் இயலாமையோடு தூங்கிப் போனாள்.

அதற்கடுத்த நாள் உயிர்ப்பே இல்லாமல் இயந்திரம் போல கம்பெனி சென்று வேலையே முடித்து வீட்டுக்கு வந்தாள்.எப்போதும் போல மாயாவின் விளையாடினால் கூட கவனம் அதில் இல்லை.மனம் முழுவதையும் அன்பு  ஒருவனே ஆக்ரமித்திருந்தான்.என்னென்னவோ  மீண்டும் என்னை தவிர்க்க ஆரம்பித்துவிட்டானா…? அந்த அளவு இம்சை செய்கிறேனா என்று நினைத்துக் கொண்டே

வேண்டாம் எனறு மூளை சொன்னாலும் கைகள் தன் போக்கில் அன்புவிற்கு அழைக்கஒரு மாதிரியான  படபடப்புடன் காத்திருந்தாள்.

அவன் அழைப்பை ஏற்று ஹலோ என்று  சொன்னதும்  அவளை பிளுபிளு வென பிடித்துக் கொண்டாள்.நேத்து ஏன் போன் எடுக்கலை…? அப்படியென்ன வேலை…? எதுனாலும் அட்டென்ட் பண்ணி சொல்லக் கூடாதா..? என்பதை
கடுமையாக கேட்டவளிடம்

அன்பு நிதானமாக பேசினான்.கவி நீ ஒன்ன மறந்துட்ட….

நான் எதையும் மறக்கல… நீங்க எல்லாரும் தான் என்னை மறந்துட்டீங்க… என்று நொடித்துக் கொண்டவள் பின் நான் என்ன மறந்தேன் என வாதிட தயாரானாள்.

நமக்குள்ள எப்பவோ ப்ரேக் அப் ஆய்டுச்சு.அத மறந்துட்டு நீ இன்னும் என்னை லவ் டார்ச்சர் பண்ணிட்டு இருக்க என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல

அவன் சொல்லியதை மறுக்க வேண்டிய அவசரத்தில் அவன் பேசியதை முழுதாய் உணராமலே  
நமக்குள்ள எப்போ ப்ரேக்- அப் ஆச்சு.அதுலாம் இல்லை  என்றாள் வாய் தவறி.

இதை எதிர்ப்பார்த்தவன் அப்போ நம்ம இன்னும் நாம லவ் பண்ணிட்டுதான் இருக்கோம்.எங்க ஒருவாட்டி லவ் யூ சொல்லு என்றான் உற்சாகமாய்.

அவன் விளையாட்டை புரிந்துகொண்டவள் பல்லை கடித்து என்கிட்ட இப்படியெல்லாம் விளையாடற வேலை வச்சிக்காதீங்க  என்று படபடக்கும் மனதை கட்டுப்படுத்தி.நல்லவேளை அவன் சற்று முன்பு பேசிய பேச்சில் முகம் செந்தாமரையாய் சிவந்ததை யாரும் பார்க்கவில்லை.

“சரி விளையாடலை.நேராவே கேட்குறன்.சொல்லு நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்…?

அது மட்டும் முடியாது

ஏன்

எனக்கு கல்யாணம் வேணாம்.விருப்பம் இல்லை.

சற்று யோசித்தவன் ம்ம் ஓகே லிவிங் டூ கெதர் னாலும் எனக்கு ஒன்னும் அப்ஜெக்சன் இல்லை என்றான் பெருந்தன்மையாக.

லிவிங் டூ கெதரா அப்படீன்னா…என்றாது புரிறாது கேட்டவளிடம்

கல்யாணம் பண்ணாமலே கணவன் மனைவி போல புரிதலோடு ஒரு வீட்ல வாழ்றது என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் அழுத்தம் கொடுக்க

ச்ச்சீசீய்…என்று வெட்கப்பட்டவள் எப்போல இருந்து இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சீங்க.நீங்க ரொம்ப மாறீட்டிங்க என்று திக்க

இப்போது அவளது முகம்  எப்படியிருக்கும் என்று கற்பனையில் நினைத்துப் பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

கடுப்பான கவி…..வேணாம் சிரிக்காதீங்க.அடி வாங்கப் போறீங்க…என

ஐம் வெயிட்டிங் டார்லிங் என்றவன் மீண்டும் சிரித்து முடித்து பின் 
ஏன் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலை.. கவி?  உன்ன எந்த நிலையிலும் கைவிட மாட்டேன்றதுல உனக்கு நம்பிக்கை இல்லையா…? இல்லையே என்னையே பிடிக்கலையா…? என்று சீரியசாக கேட்க என்ன சொல்வாள் அவள்.

அங்கிருந்து இலகுவான சூழல் தீர்ந்து மனம் கணத்தது.அவனைப்  பிடிக்கவில்லை என்று சொன்னால் தன் மனமே தன்னைப் பார்த்து கேலியாய் நகைக்கும் என்று அறிவாள்.பிடிக்காத ஒருவனுக்கா தினம் தினம் அழைப்பு விடுத்து  குரல் கேட்டிட தவிக்கிறாள். ஆனாலும் எதுவோ ஒன்று வேண்டாம் என்று சொல்ல வைத்தது. திருமணம் என்ற அமைப்பில் சூடு கண்ட பூனை அவள்.அவனும் அப்படித்தான்.ஆனால் அவனுக்காவது வாழ்வில் காதல் என்று ஒன்று இருந்தது.வாழ்வில் ஒரு முறை கூட நேசம் என்ற ஒன்றை உணராத மனது அவளது.புதிதாய் தனக்குள்ளே தோன்றிய காதலை தன்னாலே நம்ப முடியவில்லை.

அவள் எதையோ யோசித்துக் கொண்டு அமைதியாய் இருக்க அவனே தொடர்ந்தான்.உனக்கு என்னை பிடிக்கும்னு தெரியும்.ஆனா ஏன் கல்யாணம் வேணான்ற…நீ உன் முதல் திருமண வாழ்க்கைல நடந்ததையெல்லாம் ஒரு ஆக்சிடெண்ட்டா நினைச்சு மறந்திடு.உனக்கு ஒரு கஷ்டமும் நடக்க விட மாட்டேன் என்னை நம்பு என்றவனிடம்

எனக்கு வாழ்க்கை கொடுக்கனும் நினைக்கிறீங்களா? என்னைப் பாத்தா உங்களுக்கு பாவமா இருக்கா…என்று கேட்டவளிடம்

இல்லை.நீ எனக்கு வாழ்க்கை கொடுனு கெஞ்சுறேன் என்றான்.என்னைப் பாத்தா உனக்கு பாவமா இல்லையா என்றவனது குரலில் இருந்த உணர்வு மனதை பாதிக்க எதுவும் சொல்லாமால் போனை அணைத்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here