நீயே என் இதய தேவதை_63_பாரதி

0
282

கவிக்கு தன் மனது புரியாமல் எல்லாம் இல்லை.இப்போதும் அன்பரசன் மட்டுமே அவளுக்கு   பிடித்தமான ஆண்மகன்.அவனை பிரிந்ததில் இத்தனை கொண்ட தவிப்பு அவளுக்கு உணர்த்தியிருந்தது.தன் மனம் அவன் பால் கொண்ட நேசத்தையும் அன்பையும்.ஆயினும் ஏதோ ஒன்று அவளுக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது.உறங்கிக் கொண்டிருந்த மாயாவை கைவிரல்கள் தானாகவே வருடினார்கள்.

ஒருவேளை எதிர்காலத்தில் மாயா வளர்ந்த பிறகு அவளுக்கு தன் முதல் திருமணம் பற்றி தெரிய வந்தால்…? மாயா தன்னை என்ன நினைப்பாள் என்பது ஒரு கவலை என்றால்

நான் ஒருவனை காதலிக்கிறேன்.அவனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று எப்படி சித்தியிடம் சொன்னால் அவர்கள் என்னை நினைப்பார்கள் என்பது இப்போதைய கவலை.அவர்கள் இனத்தில் பெண்கள்  மறுமணம் என்பது அவளுக்கு தெரிந்த வரையில் இல்லை.

ஒருநாள் காமாட்சி அம்மா கடைக்கு சுகுணாவுடன் சென்றிருந்தாள்.

இவளை கடையில் பொருட்கள் வாங்க சுகுணா இதோ வரேன் டி என்று மாயாவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

நடந்தது நடந்து போச்சு. பொண்ணுக்கு சின்ன வயசு தானே இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க எதாச்சும் யோசிச்சிருக்கியா…? என்று அவர் கேட்டது கவியின் காதில் விழுந்தது.அவள் மேலும் கூர்மையாக சுகுணா என்ன சொல்லப் போகிறார் என்று கவனிக்கலானாள்.

பாக்கணும் ம்மா கொஞ்சநாள் போகட்டும்னு இருக்கேன்.எங்க இனத்துல இன்னும் பொண்ணுங்க மறுமணம் லாம்  நடந்ததேயில்லை.ஆனா கவியையும்  இப்படியே விட்டுர முடியாது.குழப்பமா இருக்கு. என்று சொல்ல

எந்த காலத்துல இருக்க நீ என்று அவளிடம் கோபப்பட்டவர் மேலும்  உன் மாமியார் எதாச்சும் சொல்லுவானு பயப்படுறியாக்கும்….? என

நீங்க வேற ஏன்மா அத ஞாபகப்படுத்துறீங்க.என் பயமே அதுமட்டும் தான்.கவிக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் சொன்னா அவங்க என்னென்ன பேசுவாங்க னே நெனச்சு பாத்தாளே பயமா இருக்சு.மாமியார் என்ற வார்த்தையிலே பயந்து போனவளைக் கண்டு ம்ம்க்கும் அதுசரி என்று முகம் திருப்பியவர் உன்னால முடியலைனா சொல்லிடு, நானே அவளுக்கு எங்க நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்குறேன்.ஏன்னா கவியும் எனக்கு பொண்ணு மாதிரி தான் என்று அவர் முடிக்க

வெளியில் இருந்து கேட்காதது போல கேட்டுக்கொண்டிருந்த கவியின் விழிகள் கலங்கினர்.எந்த எதிர்ப்பாப்பும் இல்லாது சிலர் நம்மீது பொழியும் அன்புக்கு என்ன கைமாறு செய்வது …?

குழப்பங்களுனூடே நாட்கள் பறந்தன.அதன் பிறகு அன்பரசனை போனில் அழைக்க தைரியமில்லை.அவன் ஒவ்வொரு முறையும் அவளிடம் நேசத்தை உரைக்கும்போது அவளால் மறுக்கவும் முடியவில்லை.ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.மதில் மேல் பூனை நிலையில் இருந்தாள்.

அன்று வேலை முடிந்து சுகுணா வீட்டிலிருந்து மாயாவை கூட்டி வர மாயா ரொம்பவும் சோர்வாக இருந்தாள்.லேசான காய்ச்சல் இருந்தது.எந்த நேரமும் ஓரிடத்தில் நில்லாமல்  சேட்டைகள் செய்தபடி ஓடிக் கொண்டிருக்கும் குழந்தை சோர்ந்து சுருண்டு படுத்திருக்க கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. நேரம் ஆக ஆக மாயா உணவு எதையும் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட ரொம்பவும் பயந்து போனாள் கவி. காமாட்சி அம்மாள் வேறு  ஊரில் இல்லை.உறவினர் திருமணத்திற்காக வெளியே சென்றிருந்தார்.

என்ன செய்வது எனத் தெரியாது விழித்தவள் பின்
பக்கத்து அறையில் குடியிருக்கும் அக்காவிடம் பக்கத்தில் எதாவது க்ளினிக் இருக்கா என்று கேட்டு வழி  அறிந்து கொண்டு மாயாவை தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.தேவைப்படும் என்று ஆயிரம் ரூபாய் தனியே எடுத்துவைத்திருந்த எத்தனை நல்லதாய் போயிற்று என்று நினைத்து கொண்டவள் சுகுணாவிடம் சொல்லிவிட்டு சென்றாள்.

சுகுணாவுக்கு கவியுடன் செல்லத் தோன்றினாலும் அவளது மாமியார் ஏதோ வேலை கொடுத்திருக்க கவியிடம் வழி சொல்லி பத்திரமா போய்ட்டு வா என்று சொல்லி  அனுப்பி வைத்தாள்.

மாலை 6 மணிக்கு க்ளினிக் இருக்குமா …? இருக்கணுமே என்று நினைத்தபடியே குழந்தையை தோளில் சுமந்து கொண்டே மெயின் ரோடு செல்லும் வழியில் நடந்தாள்.

அத்தனை துயரிலும் அன்று அதே தெருவில் அன்புவுடன் இணைந்து நடந்தது நினைவில் வரவும் லேசாய் தனக்குள்ளே புன்னகைத்தபடி எதீர் நோக்க அங்கு பைக்கில் அமர்ந்திருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது சாட்சாத் அன்பரசனே தான்.

வெகுநாளைக்கு பிறகு அவனை பார்த்ததினால் கண்கள் ஜொலிக்க வானில் பறக்க தொடங்கிய மனதை கட்டுப்படுத்தியவள் இத்தனை நாள் தன்னை பார்க்காமல் தவிர்த்தான் என்று தானே வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவனை கண்டுகொள்ளாது நடக்க தொடங்கினாள்.

அவன் அருகில் வந்ததும் அன்பரசன் நீ என்னை எப்பவோ பார்த்துட்ட ன்னு தெரியும்.உனக்கு நடிக்க வரலை.நம்ம பிரச்சனையை அப்புறம் வச்சிப்போம் என்று சொல்லி என்னாச்சு பாப்பாக்கு என

அவனுக்கு எப்படி தெரியும் என்று நினைத்தால் குழந்தை சோர்வாக இருப்பதால் கண்டு கொண்டிருப்பானௌ என்று அவளே முடிவு செய்தவள் லேசா காய்ச்சல் இருக்கு மதியானத்துல இருந்து எதும் சாப்பிடலை…அதான் டாக்டரை பாக்க கூட்டிட்டு  போறேன் என

சரி …உட்காரு போலாம் என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்.கவி தயக்கமாக பார்த்து ஏதோ சொல்ல வர  அவளை முறைத்தவன் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.வண்டியில ஏறு என்று கட்டளையாய் சொல்ல ஏறி அமர்ந்தாள்.
க்ளினிக் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு வா என்று அவளை கூட்டிப் போக அங்கே இவர்களுககு முன்பு நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர்.  வரவேற்பு அறையில் உள்ள நாற்காலி ஒன்றில் அவளை அமரச் சொன்னவன் குழந்தையை கூட்டிச் சென்று அட்மிசன் வாஙகிக் கொண்டு வந்தான்.

வரவேற்பறையில் இருந்த ரிசப்ஷனிஸ்ட் கவி என்று பெயர் சொல்லி உள்ளே போக சொல்ல அவள் அன்புவிடம் தலையசைத்துவிட்டு உள்ளே  சென்றாள்.

மருத்துவர் மாயாவை சோதித்துவிட்டு
இப்போதைக்கு மருந்து எழுதி தரேன்.சரியாகலைனா ஊசி போட்டுக்கலாம் என்று எழுதிக் கொடுத்தார்.அதுவரை தூங்கிக் கொண்டிருந்த மாயா டாக்டர்  தெர்மா மீட்டர் வைத்து சோதிக்கும் போதே எழுந்துவிட்டவள் சிணுங்கி கொண்டே இருந்தாள்.

அவளை சமாளித்தபடி
வரவேற்பறைக்கு மீண்டும் வந்தால் அன்பு அங்கேதான் அமர்ந்திருந்தான்.மனம் சந்தோசப் பட்டது.இவள் அங்கு செல்ல அவள்  கையிலிருந்த சீட்டை வாங்கி எங்க பில் பே பண்ணனும் மெடிக்கல் எங்க? என்று கேட்டுக் கொண்டு திரும்ப கவியிடம் வந்தான்.

நீ இங்கே வெயிட் பண்ணு என்றவன் சிணுங்கிக் கொண்டிருந்த மாயாவை கேட்டு கை நீட்ட,மாயா அவனிடம் தாவியது.மாயாவுடன் பேச்சு கொடுத்து சமாதானப்படுத்திக் கொண்டே நடந்து செல்பவனை பார்க்க மனம் நிறைந்து போனது கவிக்கு.பில் கட்ட தான் செல்கிறான் என்று தெரியும்.எதுவும் தடுக்கவில்லை.

சிறிது நேரத்தில்  ரிசப்ஷனிஸ்ட்  “மேடம் உங்க ஹஸ்பண்ட் மொபைலை மறந்து என் டேபிள் லயே வச்சிட்டாரு” என்று கொடுத்தாள். தேங்க்ஸ் சொல்லி  அதை வாங்கி வைத்தாள்.அன்பு வர தாமதாகவே கண்களில் திருட்டுத்தனத்துடன் கையில் வைத்திருந்த அவன் கைபேசியை ஆன் செய்தாள்.

மொபைல் வால்பேப்பரில் மாயாவை தூககி வைத்தபடி புன்னகையுடன் நின்றிருந்தான் அன்பு.மாயாவின் பிறந்தநாள் அன்று ப்ரியா எடுத்த புகைப்படம்.இதைக் கண்டவளுக்குள் ஏதோ சொல்ல முடியாத உணர்வு நெஞ்சை அழுத்தியது.

லாக் எதுவும் செய்யவில்லை என்பதை உணர்ந்து தனது நம்பரை டயல் செய்து பார்த்தாள்.அதில் மை ஏஞ்சல் என்று அவள் பெயர் பதியப்பட்டிருக்க புன்னகையுடன் போனை அணைத்தாள்.

சிறிது நேரத்தில் மாயாவை தூக்கிக் கொண்டு அன்பு வந்து சேர்ந்தான்.எந்தெந்த மருந்து எந்த வேளைக்கு எந்த அளவு கொடுக்க வேண்டும் என்று அவன் விளக்க தெளிவாக கேட்டுகொண்டு மருந்துகளை வாங்கி தனது ஹேண்ட் பேகில் திணித்தவள் போலாம் என்று எழுந்திருக்க

உட்காரு கவி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான்

கவியோ நெஞ்சம் படபடக்க என்ன சொல்லாப் போகிறானோ என்று மீண்டும் அமர அவள் அருகில் அமர்ந்தான்.சில நொடி அமைதிக்குப் பிறகு நாறாகாலியின் ஓரத்தில் வைத்திருந்த அவளது மெல்லிய கரத்தின் மீது   தன் கரத்தினை வைத்தவன்

உன்கிட்ட நான் நிறைய பேசுனேன் கவி.ஆனா முக்கியமான ஒன்ன சொல்ல மறந்துட்டேன் ல. என்றதும்

திடிரென அவன் கரம் தொட்ட அதிர்ச்சியில் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் வட்டமிட  இதயம் படபடக்க அமரந்திருந்தவள் அவன் பேசிய வார்த்தைகளில் தலையும் புரியாது வாலும் புரியாது பார்க்க அவன் தொடர்ந்தான்.

.உன்னை கல்யாணம் பண்ண நினைச்சதுல  இருந்து மாயா என்னோட குழந்தைன்னு  நீயும் மாயாவும் தான் என் குடும்பம் மைன்ட் ல பிக்ஸ் பண்ணிட்டேன்.மாயாவோட எதிர்காலத்தை நினச்சு  தான் நீ கல்யாணம் வேணாம் சொல்றதா இருந்தா ஐ பிராமிஸ் யூ. நான் மாயாவுக்கு  100% நல்ல அப்பாவா இருப்பேன்.

அவன் கண்களில் இருந்த உறுதியை கண்டவள் அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தாள்.

அவன் தனது கைகளை எடுத்துக்கொண்டதும் ஏதோ இத்தனை நேரம் இருந்த சுகமான உணர்வு காணாமல் போனதில் சிறு ஏக்கம் உண்டாக தலை குனிந்தாள்.

நீ இன்னொரு தடவை நல்லா யோசிச்சு சொல்லு. என்று அவன் எழப் போக

எனக்கு சம்மதம் என்றாள்.

அதிர்ச்சியில் மீண்டும் அமர்ந்தவன் என்ன…? என்ன  சொன்ன …? எனக்கு புரியலை. திரும்பவும் சொல்லு என தான் கேட்டதையே நம்பமுடியாமல் அவளை திரும்ப திரும்ப கேட்க

லேசான வெட்கத்தில் முகம் சிவந்தவள்  யோசிக்கலாம் எதுவும் இல்லை.உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம் என்று அழுத்தமாக சொல்லிவிட்டு எழுந்து முன்னே நடந்தாள்.

அதிர்ச்சியில் இருந்தவனுக்கு அவள் சொன்ன வார்த்தைகள் சற்று தாமதமாகவே உரைக்க  தன்னையே ஒரு முறை கிள்ளிப் பார்த்துவிட்டு  மருத்துவமனை என்றும் பாராமல் உற்சாகத்தில் ஹே….. என்று கத்த

அங்கிருந்தோர் எல்லோரும் அவனை ஒரு மாதிரியா பார்த்து வைக்க அகடு வழிந்தவன் சாரி என்று பொதுவாய் சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here