நீயே என் இதய தேவதை_64_பாரதி

0
393

வெளியில் வந்தவுடன் கையில் தூக்கி வைத்திருந்த மாயாவை முத்தமிட்டவன் ” உன் மம்மி ஓகே சொல்லிட்டா….பாப்பூ” என கூச்சலிட

தலையிலடித்துக் கொண்ட கவியோ ஹய்யோ… யாராச்சும் பாக்க போறாங்க…. கத்தாதீங்க என சொல்ல

எல்லாம் உன்னால தான்டி …. என்று சொல்லி  செல்லமாய் கோபித்தவன்
நான் தான் யோசிச்சு சொல்லுனு சொன்னேன் ல.பட்டுன்னு இப்படி போட்டு உடைச்சிட்டா…அதிர்ச்சியில ஹார்ட் அட்டாக் எதுனா வந்துச்சுனா என்ன பண்ணுவேன்…? ஹாஸ்பிட்டலாச்சேனு பா்குறேன் இல்லைனா…….என்று அவன் பல்லை கடிக்க கவி வெட்கி சிவந்தாள்.

சரி சொல்லு….என்றதும்

அதான் சொல்லிட்டேனே என்றவளிடம்

அட  அதில்லை…ஐ லவ் யூ சொல்லு…
எனவும்

ச்சீய்….மீண்டும் முகம் சிவந்தவள் ம்ம்கூம் அதெல்லாம் சொல்ல முடியாது என்று மறுத்தாள்.

என்ன லவ்யூ சொல்லவே இவ்ளோ வெட்கப்படுறா…..இவள கட்டிக்கிட்டு உன் பாடு திண்டாட்டம் தான் டா அன்பு  என்று சத்தமாக மைன்ட் வாய்ஸில் பேசியபடி பைக் அருகில் சென்றவனை செல்லமாக முதுகில் ஒரு அடி வைத்தாள் கவி.

மீண்டும் பைக்கில் பயணிக்க மேன்சன் வரை வருவதாக சொன்னவனை இப்போது வேண்டாம் என்று மறுத்தாள்.

அரைமனதாக அவளை அதே தெருவில் அவளை இறக்கிவிட்டவன் ” போன் பண்ணு ” என்றபடி  மாயாவுக்கு டாட்டா என்று கையசைக்க குழந்தையும்  தனது பிஞ்சு விரல்களை அசைத்து பை
என்றது.

மருந்தின் தாக்கத்தில் மாயா இரவு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க  கவி அன்புவுக்கு போன் செய்தாள். முதல் ரிங்கிலேயே அழைப்பு ஏற்க்ப்பட்டது.மாயா உடல்நிலை பற்றிய விசாரிப்புகளுக்கு பதில் சொல்லியவள் பிறகு மௌனமாகயிருக்க

என்ன போன் பண்ணிட்டு அமைதியா இருக்க…எதாச்சும் பேசு என்று அன்பு சொல்ல

என்ன பேச….என்று சத்தமாக யோசித்தவளிடம்

ஓய்….டெய்லி பேசி பேசியே டார்ச்சர் பண்ணுவ… இப்ப என்ன அமைதியா இருக்க..? இதுலாம் உனக்கு செட் ஆவலையே என்று சிரித்தவனிடம்

அப்ப நான் உங்களுக்கு டார்ச்சர் ரா

ஆமா…டீ  நீ ஒரு இம்சை

அப்போ யாரோ என் பேர ஏஞ்சல் னு போன்ல சேவ் பண்ணியிருந்தாங்களே…. என்று சத்தமாக யோசிக்க

அதிர்ந்தவன் ஹே…..பார்த்திட்டியா…ப்ராடு டீ நீயி என்று வாய் விட்டு சிரித்தவன் சரி சொல்லு எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்  எனக் கேட்க

என்னங்க நீங்க…என்று அவள் சலித்துக் கொள்ள

அதில் மிரண்டவன்  அடியேய்….என்ன நீயி  எல்லாக் கோட்டையும் அழினு  மறுபடியும் முதல்ல இருந்து  ஆரம்பிக்கிற….என்று சீறியவன் இதுக்கு மேல எல்லாம் என்னால போராட முடியாது என்று சரணடைய

அட அதில்லைங்க.நான் சுகுணா சித்திகிட்டேயும்  வாணி சித்திகிட்டேயும் பேசி சம்மதம் வாங்கணும்.ஏன்னா…எனக்கு சொல்லிக்க சொந்தம் னு இருக்குறது அவங்க மட்டும்தான் என்று  நிதானமாக உரைக்க

அதெல்லாம் வேணாம். பெரிய ப்ராசஸ். உனக்கு ஓகே ன்னா நாளைக்கே முருகன் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிப்போம். அப்புறம் என்று அவன் உற்சாகமாக பேசிக்கொண்டே போக

விளையாடாதீங்க.என்று அவன் பேச்சிற்கு தடை போட்டவள் சித்திங்க  சம்மதிச்ச பிறகுதான் என் கல்யாணம்.
பெத்த அப்பாவும் கூடப் பொறந்தோ அண்ணனுமே என்னை பாரமா நினைச்சு ஒதுக்கி வச்சபோது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம எனக்கு நிழல் தந்தவங்க.என்றுனஉணர்ச்சி பொங்கிய குரலில் சொன்னவள் பின் அவங்க சம்மதிச்சா தான் நம்ம கல்யாணம் நடக்கும் என்றுவிட

ஒருவேளை அவங்க சம்மதிக்கலைனா என்னை மறந்திடுவியா….? என்று அவன் கேட்டுவிட்டு அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாக காத்திருந்தான்.

நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க…?.அவங்க கண்டிப்பா சம்மதிப்பாங்க.அப்படியே சம்மதிக்கலைனாலும் என்னால உங்கள மறக்க முடியாது.

வேற என்ன செய்வ

உங்ககிட்ட சம்மதம் சொன்ன நொடியிலிருந்தே உங்கள மனசுல புருசனா பிக்ஸ் பண்ணியாச்சு.ஒருவேள கல்யாணம் நடககலைனாலும் அதே நெனப்போடு வாழ்ந்துடுவேன் என்று கண்கள் கலங்க கூறியவள் கண்முன் நின்றிருந்தால் அப்படியே அணைத்துக் கொண்டிருப்பான்.

பின்பு சாதாரணமாக எதேதோ பேசிவிட்டு குட்நைட்.நீ சீக்கிரம் தூங்கு.நாளைக்கு பர்ஸ்ட் ஷிப்ட் ல  என்று போனை அணைக்க போக வச்சிராதீங்க…என்றவள்

என்ன…டா என்றவன் மென்மையாக கேட்க

எனக்கு உங்கள பாக்கணும். என்றாள்

இன்னைக்குத்தான பாத்தோம்….என்றவனிடம்

ப்ப்ச்ச்…. நாளைக்கும் பாத்தே ஆகணும் ப்ளீஸ்  என்று கெஞ்ச

அப்போனா  லவ் யூ சொல்லு என்று உற்சாகமானவனிடம்

அதெல்லாம் முடியாது என்று மறுக்க

அப்போ என்னாலயும்  நாளைக்கு உன்ன பாக்க வர  முடியாது என்று அவன் அதே முடிவில் நிற்க

வர வேண்டாம் போங்க.போய் உங்க புது கம்பெனி பொண்ணுங்க கிட்டயே ஜாலியா சிரித்து பேசிட்டு இருங்க என்றவள் தனக்காக  கோபப்படுவதையும் எண்ணி மகிழ்ந்தவன் வாய் விட்டுசிரிக்க

பல்லைக் கடித்துக் கொண்டு அவளே போனை கட் செய்தாள்.

அதிகாலை எழுந்த கவி மீண்டும் அன்பரசனுக்கு  அழைத்து  அவனை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க

அவனோ தூக்க கலக்கத்தில் இருந்தவன் அப்போதும் லவ் யூ சொல்லு வரேன் என்க.

கோபமாக போனை வைத்தவள் அவனை அர்சித்தபடியே தன்போக்கில் குளித்து உடைமாற்றி  கம்பெனிக்கு தயாரானாள்

இரவு சீக்கிரம் உறங்கிப் போனதாலே அதிகாலை எழுந்த மாயா அறையை அளந்தபடி விளையாடிக் கொண்டிருந்தது.அந்நேரம் தெரியாமல் அவளின்  அவள் குடிக்க வைத்திருந்த டம்ளரில் குடிக்க வைத்திருந்த பாலை தட்டிவிட்டு பாவாமாய் பார்த்துக் கொண்டிருக்க  ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இது வேறவா… இடத்தை மீண்டும் சுத்தம் செய்தவளுக்கு எரிச்சலாகியது.

வர வர ஓவர் சேட்டை பண்ற நீ.சித்தியும், காமாட்கி அம்மாவும் செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க.இனிமே இப்படியெல்லாம் பண்ணா கட்டி இனி நகர முடியாதபடி  கட்டி போட்டுடுவேன் என அன்பரசனிடம் காட்ட முடியாத கோவத்தை மகளிடம் காட்ட
மாயாவோ எப்போதுமில்லாமல் புதிதாக திட்டுகிற அன்னையை சில நொடி குறுகுறுவென பார்த்துவிட்டு பின் அவள் மூக்கை கடித்து நானும் உனக்கு சளைத்தவளில்லை என்று காட்டியது.

ஆ…. வலிக்குது…விட்றி…என்று அவளிடம் போராடி விடுபட்டு பின் மூக்கைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.மாயாவை தூக்கிக் கொண்டவள் கடிச்சா வைக்குற…வேலைக்கு டைம்ஆய்டுச்சு வந்து வச்சிக்குறேன் உன்ன என்று சின்னபில்ளையை சிறுபிள்ளைத் தனமாக மிரட்டி சுகுணா வீட்டில் கொடுத்து விட்டு வேலைக்குச் சென்றாள்.

அந்தநாளை சபித்தபடியே படியேறி அவள் வேலைப் பார்க்கும் தளத்திற்கு சென்றாள்.காலை உணவு மீண்டும் தன்னிடத்திற்கு வந்தூ வேலை செய்துகொண்டிருந்தவள் ஏதோ ஓர் உள்ளுணர்வு தாக்க திரும்பிப் பாரத்தாள்.  மேனேஜருக்கு அருகில் நின்று அவளையே நோக்கியபடி புன்னகைத்தான் அன்பு.இன்பமாய் அதிர்ந்து போனவள் அவள் விழி விரித்து ஆச்சர்யமாக பார்க்க அவளைப் பார்த்து  புருவமுயர்த்தி
கண்ணடித்தான்.

“அடப்பாவி”என்று சத்தம் வராமல் முனுமுனுத்தவளுக்கு பிறகு வேலையில் கவனம் செல்ல கொஞ்சம் நேரமானது.ஒவ்வொரு பணியாளர்களிடம் சென்று அவர்கள் பணியை கெடுக்காமல் நலம் விசாரித்து விட்டு வந்தான்.

நல்லாருக்கியா….தம்பி
விசாரிக்கும் அக்காக்களும்

எங்கள லாம் மறந்துட்ட போலடா தம்பி என்று குறைபடும் தங்கைகளுக்கும் புன்னகையுடன் பதில் கூறி பின்

ஏண்ணா…அங்க போயிட்ட…எனக்கும் ஒரு வேலை அங்க சொல்லி வை.நானும் வரேன் என்று கவலைகொள்ளும் இளவயது  பசங்களையும் சமாளித்துவிட்டு பின்
கவிதாவிடம் போய் நின்றான்.

புன்னகைத்துக் கொண்டே நான் சொன்னதுக்காக தானே வந்தீங்க என்றவளிடம்,

எனக்கு வேற வேலை இல்லை பாரு,உன்னைப் பாக்க வர, என்று அலுத்து கொண்டவனிடம்

பின்ன எதுக்காம்

நான் செய்து வச்ச வேலைல மேனேஜருக்கு கொஞ்சம் புரியலையாம்.அதுக்காக கொஞ்சம் வந்து போடா ன்னாரு.அதான் வந்தேன்.சரி சரி வெட்டிப் பேச்சு பேசாம வேலையப் பாரு என

ம்ம்கும் என்று நொடித்து கொண்டவள் அவன் சொன்னது போலவே வேலையை பார்க்க ஆரம்பித்தான்.அன்பு அவனிடத்தில் சென்று அமர்ந்து அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.

ஷிப்ட் முடிந்தவுடன் கவி விடைபெற அன்பரசனைத் தேட அவனைக் காணவில்லை.கொஞ்சநேரம் முன்னாடி தானே பார்த்தன் எங்க போயிருப்பாரு.என்று யோசித்துக் கொண்டே கீழே இறங்கி கம்பெனியை விட்டு வெளிவர அவள் மிக அருகில் கொண்டு வந்து பைக்கை நிறுத்திய அன்பு ஏறு போலாம் என்க.

எங்க என்று திருத்திருத்தவளிடம்

சொன்னாத்தான் கூட வருவியா.டைம் ஆச்சு உட்காரு என்று சிடுசிடுக்க வேறெதும் கேட்காமல் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

நேற்று இருந்த அதே சாலையில் இறககி விட்டவன் உனக்கு 5 நிமிஷம் தான் டைம்.அதுக்குள்ள போய் யூனிபார்ம் மாத்திட்டு  வா.

அவள் எங்கே போறோம் எனறு கேட்க வர

எதுவும் கேட்க வேணாம்.5 நிமிஷத்தில வரலைனா நானே உன் மேன்சன் க்கு வந்திடுவேன்.என்று சொல்ல

விரைந்து நடந்தவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் உடைமாற்றி வந்திருந்தாள்.பரவாயில்லையே கரெக்டா ஐந்து நிமிஷத்துல வந்துட்ட என்றவன் கவனிக்க பீச்சில் இருந்த போது பார்த்த அதே  பின்க் நிற சுடிதாரை அணிந்திருந்தாள்.

நைஸ் வண்டியில ஏறு என.இந்த முறை எங்கப் போறோம் என்று அவள் கேட்காது வண்டியில் அமர்ந்தாள்.அமைதியாக வந்தளிடம்

எங்க போறோம் னு கேட்க மாட்டியா…..என கேட்க

கேட்டா மட்டும் சொல்லிட போறா மாதிரி

சிரித்துக் கொண்டவன் சரி இப்போக் கேளு.சொல்றேன் என்றான்.

எங்கப் போறோம்

முருகன் கோவிலுக்கு

ஓஓஓஓஓ

எதுக்குனு கேட்க மாட்டியா…?

ம்ம் எதுக்கு

கல்யாணம் பண்ணிக்கத் தான் என்று அவளை அதிரவைத்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here