நீயே என் இதய தேவதை_65_பாரதி

0
357

வழி நெடுகிலும் சும்மா தான சொல்றீங்க.

விளையாட்டுக்கு தான…. எனறு கேட்டு கேட்டு அன்புவை நச்சரித்துக் கொண்டே வந்த கவியிடம்

அவனோ போய் தெரிஞ்சுக்க நிஜமாவா? இல்லையானு என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட இவளுக்கு உள்ளுக்குள் பகீரென்றது.இருந்தாலும் இல்லை அப்படியெல்லாம் இருக்காது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தைரியமாக பயணம் செய்தவளுக்கு சொன்ன மாதிரியே அவன் முருகன் கோவிலில் நிறுத்தவும்
லேசான பயம் வந்தது.

இறங்கு  என்றவனது உடையை ஆராய அவன் நேரத்தியாக உடுத்தியிருந்ததை வைத்து  ஒருவேளை உண்மையாத்தான் சொல்றாரோ? என்று யோசித்தவள் மாலையும் கழுத்துமாய் சித்தி முன்பு போய் நிற்பது போலவும் அதைப் பார்த்தி சித்தி அதிர்ச்சியடையது போலவும் ஒரு கற்பனை காட்சி மனதில் எழ பயத்தில் சிலிர்த்தது.

பைக்கிலிருந்து இறங்கி பக்கத்தில் இருந்த கடையில் அவன் என்னென்னவோ வாங்கி வந்தவன்

வா உள்ளே போலாம். என்றான்

இல்லை நான் வர மாட்டேன்.என்று பின்னே நகர்ந்தாள்.

அட நல்ல நேரம் முடியப் போகுது வாம்மா….என்று அவளை அவன் அவசரப்படுத்த

நிஜமாகவே அவன் சொன்னது உண்மையென்றே நம்பியவள் சிறுகுழந்தை போல் கண்ணை கசக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.நான் தான் அப்பமே சொன்னேன்…ல என் சித்திங்க சம்மதிச்சா தான்
கல்யாணம்னு.இப்படி திடீர்னு கல்யாணம் னு சொன்னா நான் அவங்கிட்ட என்ன சொல்லுவேன் என்று அவள் மூக்கை சுருக்கி அழ

அவனோ வாய்விட்டு சிரித்தவன் சரிடீ….எல்லாரும் பாக்குறாங்க.அழாத நாம இப்போ சாமி கும்பிடத்தான்  வந்தோம். என்று அவன் சொன்னதும்

பாருங்க உங்களுக்கு எது எதுல விளையாடுறதுனு விவஸ்தையே நான் பயந்தே போய்ட்டேன் என்று சிரித்தபடி அவன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

இப்போவாச்சும்  வருவியா என்று அவளது கை பற்றி நடந்து கொண்டே

பாரு சுத்தி இருக்கவங்க  எல்லாரும் என்னை வில்லன் மாதிரி பாக்குறாங்க.சும்மா விளையாடுனதுக்கு இப்படியா சின்ன குழந்தை மாதிரி அழுது வைப்ப…..எனக் கேட்க

அது நீங்க விளையாடுனீங்க…னு எனக்குத் தெரியும்.அதான் நானும் சும்மா பயந்த மாதிரி ஆக்ட் பண்ணேன்.மத்தபடி நான்லாம் ரொம்ப தைரியசாலி என்று கெத்தாக சொல்லிக்கொண்டே நடந்தபடி எதிரில் நோக்கியவளின் தைரியம் எல்லாம் காற்றில் பறந்தது.

எதிரில் நின்றிருந்த சுகுணாவைப் பார்த்துவிட்டு அன்புவின் கைகளுடன் கோர்த்திருந்த தன் கையைப் பார்த்தாள்.

ஐய்யோ…..சுகி சித்தி…. மாட்டுனேன் என்று அன்புவின் பின்னால் மறைய
அவனோ எங்க…எங்க…வா பகலாம் என்று கேட்டபடி அவளை விலகி நிறுத்தி சுகுணாவை நோக்கி அழைத்துச் சென்றான்.

சுகுணா பார்த்துவிட்டார் என்று அறிந்து கொண்ட கவி அவள் முகத்தில் இருக்கும் உணர்ச்சி என்னெவென்று பிரித்தறிய முயற்சித்தாள்.முடியவில்லை ஆதலால் சித்தி என்ன சொல்ல போகிறாரோ என்று பயத்தில் நெஞ்சை அடைக்க நிதானமாக அடியெடுத்து நடந்து வைத்தாள்.

அது..வந்து சித்தி…என்று ஆரம்பித்து அவள் ஏதோ பேச வர சுகுணா தன் கையிலிருந்த குங்குமத்தை அக்கா மகளின் நெற்றியில் ஒற்றிவிட்டு அன்புவிடம் பேசினார்.

எங்கே வாழ்க்கை முழுசும் மாயா மட்டுமே போதும்னு கவி தனியாவே இருந்துடுவாளோ னு பயத்தில இருந்தேன்.இப்போ எனக்கு ரொம்ப சந்தோசம் ப்பா.வாணி அக்காகிட்ட நான் பேசுறேன்.இவளுக்கு ஒரு நல்லது நடக்கும்னா அவங்க மறுப்பு சொல்ல மாட்டாங்க. சீக்கிரமே கல்யாணத்தை வச்சிக்கலாம் என்று உள்ளார்ந்த குரலில் பேசிவிட்டு பின் ஏதோ சொல்ல வந்து வார்த்தைகள் தேடி

சின்ன வயசுலயே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.நல்லா பாத்துக்க ப்பா.உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.இருந்தாலும் இவளுக்கு அம்மா ன்ற முறையில நான் இருக்கிறதால சொல்றேன். என்று  மட்டும் சொல்லிவிட்டு கண்கலங்க.

புன்னகைத்த அன்பரசன் கவியின் தோளை அணைத்து நிச்சயமா கண்டிப்பா.கவிக்கும் பாப்பாக்கும் எந்த கஷ்டமும் வர விடாம பாத்துப்பேன்.நீங்க கவலைப் பட வேண்டாம் ம்மா என்று நம்பிக்கை கொடுக்க

கவி இருவர் பேசுவதையும் வாயை பிளந்தபடி பார்த்திருந்தாள் இரண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் முன்பே தெரியுமா…? என்று .

சிறிதுநேரம் பேசிவிட்டு சுகுணா கவியிடம் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு என்று இருவரும் விடைபெற்று கொண்டு செல்ல சித்தி தன்  கண்பார்வையை விட்டு மறையும் வரை  காததிருந்த கவி அன்புவை சரமாரியாக அடிக்கத் துவங்கினாள்.

அவள் கொடுத்த அடிகளை அவார்டு வாங்குவது போல வாங்கிக் கொண்டவன் கவி கவி எல்லாம் பாக்குறாங்க….ப்ளீஸ்  நிறுத்து என அப்போது சிரித்துக் கொண்டே சொல்ல

அவனைப் பார்த்து முறைத்து வைத்தவள் உங்களுக்கு சித்தியை முன்னாடியே தெரியுமா….?  நேத்துதான்
நான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்.அதுக்குள்ள அவங்களுக்கு எப்படி தெரியும்..?சீக்கிரமே கல்யாணத்தை வச்சிக்கலாம் சொல்றாங்க…? என்ன நடக்குது இங்க…? உண்மையை சொல்லுங்க… என சிஐடி போல் கேள்வி மேல் கேள்வி கேட்டவளின்  மூக்கை பிடித்து செல்லமாக திருகியபடி கேட்டான்.

இப்போதான் இந்த மண்டைக்குள்ள பல்ப் எரிய ஆரம்பிச்சிருக்கு போல….?

பதில் சொல்லுங்க என்று அவள் முறைக்கவும்

அன்னைக்கு நீ குழந்தை தூக்கிட்டு நடந்து வரும்போது நான் அதே ரோட்ல வந்து நின்னேனே…? எப்படி…னு நினைக்குற…

இவன் சொன்னவுடன் கவியின் மூளை யோசித்தது.அன்று தற்செயலாக வந்ததாக அல்லவா நினைத்தாள்…?
அன்றைக்கு சித்தியிடம் சொல்லிவிட்டு க்ளினிக் கிளம்பியதை நினைவு கொண்டு சித்தி தான் சொன்னாங்களா…? என்று கேட்க

யெஸ்…… அவங்க கிட்ட எப்பவோ பொண்ணு கேட்டாச்சு.நீ ஓகே சொல்றதுக்காக மட்டும்தான் இவ்ளோ நாள் வெயிட்டிங்.

அவன் பேசிய வார்த்தைகளில் இன்னும் முழுதாய் புரியாது சித்திகிட்ட எப்போ பேசுனீங்க… என்று கேட்க

உன்கிட்ட  என்னை கல்யாணம் பண்ணிக்கிறாயா…. னு…. கேட்ட மறுநாள் என்றாள்.

அடப்பாவீீ……என்றவள் வியப்பில் வாய்மீது கை வைத்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here