நீயே என் இதய தேவதை_66_பாரதி

0
310

இது யார் வீடு என்று தலையை சொறிந்து கொண்டே  இறங்கி அன்பரசனுடன் இணைநாது நடந்தாள் கவி.

அவனை ஒருமுறைப் பார்த்தவள் கேட்டாலும் சொல்ல மாட்டான்.எதுக்கு கேக்கணும். என்று தோளைகுலுக்கி விட்டு நடக்க

அன்பு அந்த வீட்டின் கதவை தட்ட உள்ளே ஏதோ ஓர் மழலையின் பேச்சுக் குரலில் சிரித்துக் கொண்டே கதவை திறந்தவர் அன்பரசனை பார்த்ததும் ஏதோ குற்றவுணர்வோடு தலை தூக்க அவர் முகம் வெளுத்தார்.முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது.

கணநேரத்தில் எல்லா உணர்வுகளையும் தனக்குள் மறைத்துக் கொண்டவர் “வாங்க” என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு புன்னகைக்க முயன்று பின் தலை தாழ்த்திக் கொண்டார்.

அன்பு “வா கவி” என்று அவளை அழைக்கும்போது அவர் கவியை கவனித்தார்.அவர் சங்கீதாவீன் அப்பா.

உள்ளே வந்ததும் காபி….டீ….என்று எல்லாவற்றையும் மறுத்துவிட்டு சில நிமிடம் மௌனமாக இருந்தவன் சுற்றுப்புறத்தை கவனித்தான்.கிட்டதட்ட மூன்று வயதிருக்கும் ஒரு குழந்தை சங்கீதாவின் அன்னையின் பின் ஒளிந்து கொண்டு இவர்களைப் பார்த்தது.சங்கீதாவின் அக்கா குழந்தை யாக இருக்கும் என்று கணித்துக் கொண்டான்.அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கவி சிறு பிள்ளை போல திருதிருத்துக் கொண்டிருத்தாள்.

சங்கீதாவின் அம்மா கவியை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தார்.இந்த பொண்ணு யாராயிருக்கும் னு…?

பேச வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் குழம்பியவன்
“இது நான் கல்யாணம் செய்துக்க போற ….. பொண்ணு” என்று கவியை அறிமுகப்படுத்தினான்.அவர்கள் முகத்தில் சின்ன சந்தோசம் தெரிந்தது.

அது…வந்து… நான் என்ன சொல்ல வந்தேன்னா…..என்று நாசுக்காய் சொல்ல வார்த்தைகள் தேடியவன் பின் தலையை மறுப்பாய் அசைத்துவிட்டு
நான் நேரடியாவே பேசிடுறேன்.எனக்கும் சங்கீதாவுக்கும் விவாகரத்து ஆய்டுச்சு.இனி எனக்கும் அவளுக்சும் எந்த சம்மந்தமும் இல்லை னு முடிவாசிடுச்சு.நானும் இன்னொரு கல்யாணம் பண்ணி என் லைப் அ பாத்துட்டு போகப் போறன். என்றவன் அவர்கள் முகத்தை மீண்டும் ஒரு முறைப் பார்த்துவிட்டு

சங்கீதா “அவ புருசனோட….வீட்ல கொஞ்சம் கஷ்டப் படுறா… னு நினைக்கிறேன் என்று ஆரம்பித்தவனை

வேணாம் தம்பி… அவளை பத்தி ஆரம்பிக்காதீங்க….இப்போதான் நாங்க எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்.உங்களுக்கும் வேறொரு வாழ்க்கை அமைஞ்சிடுச்சி.இத்தோட அந்த சனியன் விட்டுச்சு னு போக வேண்டிதான்.எங்கள அவமானப்படுத்திட்டு போன அவ சங்காத்தமே  எங்களுக்கு  வேணாம். வேணாம் என்று பேசிவிட்டு அவர் மூச்சிறைக்க அவர் அருகில் வந்து அவருடைய மனைவி அவரின் நெஞ்சை நீவிவிட்டு “தண்ணீர் வேண்டுமா…?” எனக் கேட்க மறுப்பாய் தலையசைத்துவிட்டு அன்பரசனை நோக்கி திரும்பியவர்

போனவ எங்களை மட்டுமா அவமானப் படுத்திட்டு ஒரு உயிரையும் கொன்னுட்டு ல போனா…?.அந்த பாவத்துக்கு அவ கஷ்டப்பட்டு தான் ஆ௧ணும் .அவளுக்கு இது தேவைதான். அவள உசுருக்கு உசுரா வளர்த்த நான்தான் சொல்றேன்.என்னைக்கோ என் பொண்ணு செத்துட்டா…. என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டே போக

இடைமறித்த அன்பரசன் அப்படியெல்லாம் பேசாதீங்க மாமா.தப்பு அவ மேல மட்டும் இல்லை.நம்ம மேலேயும் இருக்கு.நீங்க அவ விருப்பம் இல்லாம கல்யணம் அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சதும் தப்புதான்.அவளுக்கு என்னை பிடிச்சிருக்கா னு… தெரிஞ்சிக்காமலே கல்யாணம் பன்ன நானும் தப்பு தான்.வாழ்க்கையில தப்பு பண்ணாதவங்க னு யாரு இருக்கா…?
நடந்ததையெல்லாம் மறுபடி எதுக்கு பேசிகிட்டு….?

இப்போ எங்களை என்னப் பண்ண சொல்றீங்க…

“ஒருவேளை கீதா காதலிக்காம இருந்து நீங்க பாத்து வச்சு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை  ஊதாரியாவோ, பொறுப்பில்லாதவனாவோ இருந்தா என்னப் பண்ணியிருப்பீங்க…

………

ஒட்டுமொத்தமா அவளை பிரிச்சு கூட்டுட்டு வந்திடுவீங்களா…?.அவளுக்கு சப்போர்ட் பண்ணியிருப்பீங்க …ல.நாங்க இருக்கோம் னு ஒரு தைரியத்தை குடுத்திருப்பீங்க…ல.அப்படி நினைச்சு அவளுக்கு ஆதரவு கொடுங்க.

[20/9, 21:02] Bhar: கீதா திருமணம் செய்ய கேட்டபோது தினேஷ் பின்வாங்கினாலும் அவளுடன் கூடிய அந்த நாளிற்கு பிறகு  அவன் சிந்தை யாவும் அவளே ஆக்ரமித்திருந்தாள்.

தன் மீது எத்தனை பெரிய நேசம் வைத்திருந்தால் இப்படி ஒரு செயல் செய்ய துணிவாள்.
என்று எண்ணி வியந்தான்.

அன்றிலிருந்து அவளை மனதளவில் மனைவியாகவே பாவித்து வந்தவனுக்கு அன்பரசனுக்கும் கீதாவுக்கும் திருமணம் நடந்த பிறகு இனி அவள் தன் வாழ்வில் இல்லை என்ற நினைவே கசந்தது.

அவளை முழுதாக இழந்துவிட்டோம் என்று மனக்கசப்பில் தினம் தினம் குடித்துவிட்டு தன்னைத் தானே இழந்து கொண்டிருந்தான்.

அப்போது திடீரென கீதா தனது திருமண வாழ்வை துறந்து தன்னை தேடி வர அகமகிழந்து போனான்.அப்போது அவனுக்கு அவள் வேறொருவனின்  மனைவி என்ற எண்ணம் எலலாம் இல்லை.தான் அடையவே முடியாதென்று நினைத்த காதல் தற்போது தனது கைகளில் வந்து சேர்ந்த பெருமிதம் மட்டும் தான் மனதிற்குள்.

ஆனால் தினேஷின் பெற்றோர்க்கு அப்படி அல்லவே.இன்னொருவனின் மனைவி திருமணமே ஆகாத தனது மகனுடன் வாழ வந்திருக்கிறாள் என்பது அவர்களுக்கு அத்தனை அவமானமாக இருந்தது.

முதலில் பொறுமையாய் எடுத்து சொல்லி அவளை அனுப்பி வைக்க பார்த்தனர்.அது முடியாமல் போக பின் அவளிடம் என் மகனது எதிர்காலமே கெட்டு போய்விடும் என்று காலில் விழுந்து பார்த்தனர்.அப்போதும் கீதா சிலை போலவே நிற்க

அவளை அடித்து துரத்த பார்க்க தினேஷ் தடுத்தான்.அவளை விரட்டினால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அப்போதைக்கு பெற்றோர்களின் பலவீனத்தில் குறி வைத்து நாடகமாடி ஒருவழியாய் கீதாவை வீட்டுக்குள்ளே சேர்த்துவிட்டான்.
[20/9, 22:04] Bhar: அன்றே கீதா போட்டிருந்த தாலியை கழற்றி வீசியவன்  

அடுத்தநாள் அவன் கையால் மாங்கல்யத்தை அணிவித்தான்.மனது ஏதோ பெரும் நிம்மதியில் மூழ்கிப் போனது அவனுக்கு.அதற்கு எதிர்மாறாக சங்கீதாவுக்கு நிம்மதி என்றே சொல்லே வாழ்வின் அகராதியில் நிம்மதி என்ற சொல்லே அழிக்கப்பட்டு விட்டது.

தினேஷை சமாளிக்க தற்சமயம் கீதாவை வீட்டினுள் அனுமதித்து விட்டு எப்போது அவளை வீட்டை விட்டு துரத்தலாம் எனக் காத்திருந்த அவளது பெற்றோருக்கு மகனது இந்த செயல் கோபத்தை விளைவித்தது.ஆனால் அதை மகன் கண்டுகொள்ளவே போவதில்லை என்றுணரந்த பின்  அதை அப்படியே கீதா மீது கொட்டினர்.

தினேஷின் அம்மா கீதா எழுந்தது முதல் இரவு தூங்குப் போகும் வரை அவளை அர்ச்சித்துக் கொண்டே இருப்பார்.அவளது நடத்தையை அவளது பெற்றோர் வளர்ப்பின் குறைகளை என்று தினமும் பேசி அவள் குன்றிப் போன முகத்தை பார்க்க அவருக்கு அத்தனை சந்தோசமாக இருக்கும்.

செய்த தவறிற்கு தண்டனை என்றெண்ணி பேசாமல் இருந்தாள்.ஆனால் அவளின்  அத்தியாவசிய தேவைக்கு கூட அவள் தனது மாமியாரை நாட வேண்டியிருந்ததை அவளால் சகித்து கொள்ள முடியவில்லை.

பெத்ததே தண்டச்சோறுதான் திங்குது.இதுல கண்ட கண்டதுங்களுக்கு வேற தண்ட செலவு செய்யணும்னு எழுதியிருக்கு பாரு.எல்லாம் தலையெழுத்து என்றுவிட்டு அந்த பணத்தை வாங்கும் போது அவளுக்கு அவமானம் பிடுங்கித் தின்னும்.

அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது.தினேஷ் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருந்ததேயில்லை.அப்படியே சம்பாதித்தாலும் அந்த பணம் நண்பர்கள்
, குடி ,கொண்டாட்டம் என்றுதான் செலவழியும்.அவனால் அந்த வீட்டிற்கு ஒரு பைசா கூட லாபமில்லை என்று தெரிந்தபின் அவனது பெற்றோர்களை எப்படி குறை சொல்வது..?

இந்த விஷயத்தில் தினேஷை நம்பினால் வேலைக்காது என்று உணர்ந்தவள் தன் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி பின் அது கிடைக்காமல் போக சொற்ப சம்பளத்திற்கு வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கம்பெனியில் சேர்ந்தாள்.

அன்று தொடங்கியது தினேஷின் பயம்.சங்கீதா வீட்டில் மொத்தமாய் தன்னை சார்ந்து இருந்த போது  நிம்மதியாய் இருந்தவன் அவள் வேலைக்கு செல்கிறாள் என்றதும்  எங்கே தன்னை விட்டு மீண்டும் செ்னறிடுவாளோ என்று பயம் நெஞ்சை அசைத்தது.

வேலையை விட்டு நிற்கச் சொல்ல அவளோ பிடிவாதாமாக முடியாது என்றாள்.

மேலும் தினேஷின் ஊதாரித்தனத்தையும் பொறுப்பில்லா தன்மையையும் சுட்டிக் காட்டி பேச அவனுக்கு ஆயுதமானது அவளது கடந்த காலம்.

நானாச்சும் ஊதாரி தறுதலை மட்டும்  தான்.மூனு மாசம் வேறொத்தன் கூட தங்கிட்டு என்னை தேடி வந்தவ தான நீ… உனக்கு என்ன பேருனு நீ யோசிச்சிக்கோ என்ற போது அவளது முகத்தில் தோன்றிய அவமானம், காயம் பட்ட வலி எல்லாம் அவனுக்குப் போதுமானதாய் இருந்தது.அவனது தேவை எல்லாம் தன்னை யாரும் கேள்வி  கேட்க கூடாது என்பது தான்.

அவள் வேலைக்குச் சென்ற நாள் தொடங்கி  சண்டையும் சச்சரவும்  அதையும் தாண்டி சில நாட்களில் அடி உதைகளுமாய் தான் வாழ்வு நகர்கிறது.

எல்லாவற்றையும் அறிந்து தான் வைத்திருந்த கீதாவின்  பெற்றோர்களால்  இதுவரை ஒரு துரும்பை கூட நகர்த்த போட முடியவில்லை.செல்லமாய் வளர்த்த மகள் செய்து வைத்த காரியத்தால் கண்முன்னே ஒரு இளைஞனின் வாழ்வு பாழாய் போனதை பார்த்துவிட்டு அவளுக்கு மட்டும் உதவி செய்ய மனம் உறுத்தியது.அந்த குற்றவுண்ர்வை தான் அன்பு இப்போது தகர்த்தி வைத்திருக்கிறான்.

நான் நலமாகத் தான் இருக்கிறேன்.எனக்கென்று ஒரு வாழ்வு இருக்கின்றது.நீங்கள் உங்கள் பெண்ணை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று தெளிவுப் படுத்திவிட்டு சென்றான்.

என்னதான் இருந்தாலும் பெத்த மனம் பித்து அல்லவா…?மகளது வாழ்வில் தன்னால் என்ன செய்யும் முடியும் என்று சிந்தையில் ஆழ்ந்தார்  கீதாவீன் அப்பா.காலம் கனியட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here