நீயே என் இதய தேவதை_67_பாரதி

0
438

சுகுணா காமாட்சி அம்மாவிற்கு முன்பு கண்ணத்தின் மீது கைவைத்து அமர்ந்திருந்தாள்.

என்னடி கப்பல் கவுந்த மாதிரி கண்ணத்துல கை வத்து உக்காந்திருக்க என்றதும் நடந்ததை விவரித்தார்.

எப்போதும் போல செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்ற தன்னை நோக்கி வந்த இளைஞனிடம் குழப்பமாக யார் தம்பி….நீ என கேட்க

அன்பரசன் முதலில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

கவி வேலைசெய்யும் இடத்தில் சூப்பரவைசர் என்று அறிந்து கொண்ட பின் சுகுணா அவன் தன்னிடம் எதற்கு பேச வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டே கவனித்தாள்.

பின் அவன் கவிதா மணக்க விரும்புவதாக கூற சுகுணாவுக்கு அதிர்ச்சி தான்.அப்போது கவியின் கணவன் இறந்து கொஞ்சகாலமே ஆகியிருக்க அவளுக்கு வேறொரு  கல்யாணம் பற்றி யோசித்திருக்கவில்லை.இவன் இப்படி பட்டென்று சொல்லிவிட

ஆனாலும் அவளால் முழுதாக அன்பரசனிடம் மறுத்துவிட முடியவில்லை.முடிந்து போன ஒன்றிற்காக கவியின் எதிர்காலம் மொத்தமாய் அழிந்து போவதை அவள் விரும்பவில்லை.

குழப்பத்தில் இருந்த சுகுணா அன்புவிடம் யோசித்து சொல்வதாக சொல்ல

இதையும் சேர்த்து யோசிங்க என்று அவனது கடந்தகாலம் பற்றியும் அதன் பிறகான தன் நடத்தை பற்றியும் ஒன்றுவிடமால் வெளிப்படையாக சொல்லி வைக்க சுகுணா குழப்பமானார்.

இப்படிபட்ட ஒருவனிடமா கவியையும் மாயாவையும் ஒப்படைப்பது…? என்று எண்ணியவரின் முகம் பார்த்தே அவர் மனதில் நினைப்பதை  அறிந்து கொண்டவன்

நீங்க என்ன நினைக்கிறீங்க…னு எனக்கு புரியுது.ஆனா கவி விரும்புன பிறகு நான் என்னை மாத்திக்கிட்டேன்.

குடிக்கிறதையோ…யாரையும் மோசமா பேசுறதோ இல்லை.இது எல்லாமே என் அம்மா இறந்த இரண்டு வருசத்துல எனக்கு நானே போட்டுக்கிட்ட வேசமே தவிர அடிப்படையில நான் கெட்டவன் இல்லை.என்னோட இயல்பும் அது இல்லை.

கவியோட பழைய வாழ்க்கைல அவ எவ்வளவு கஷ்டப்பட்டான்றதும் எனக்குத் தெரியும்.அந்த துன்பங்களோட நிழல் கூட படாம கவியையும் மாயாவையும் நான் பாத்துப்பேன்.என்னை நம்புங்க.

உங்களுக்கு நான் பேசுறது அதிகப் படியா தோன்றினாலும் இது உண்மை.என்னை விட வேற யாராலயும் கவியை சந்தோசமா வைச்சிருக்கவே முடியாது. யோசிச்சு சொல்லுங்க  என்று சொல்லிவிட்டு  நடந்தவனின் கண்களில் இருந்த உண்மை சுகுணாவை நம்பிக்கை கொள்ள வைத்தது.

அப்போதும் அவள் தன்வரையில் தனக்குத் தெரிந்த அந்த கம்பெனியின் ஒரூ கான்ட்ராக்ட் சூப்பர்வைசரான பாலாவிடம் அன்பரசனை பற்றி விசாரித்தாள்.அதன் பிறகு தான் கவியை அன்பரசனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தாள்.

கவி திருமணத்தை மறுக்கவும்
அன்பரசன் அவளைப் பிரிந்து கவி உயிர்ப்பில்லாமல் உலவியதை கவனித்த சுகுணாவுக்கு  என்னை விட யாராலும் அவளை சந்தோசமாக பார்த்துக் கொள்ள முடியாது என்று அன்பு கர்வத்தோடு சொன்னது நினைவுக்கு வந்தது.

கவிக்கும் அன்பரசன் மீது பிடித்தம் தாண்டி ஒரு நேசம் இருக்கிறது என்று உணர்ந்த சுகுணா

  நான் அவளுக்கு சொல்லிப் புரிய வைக்குறேன் தம்பி.. என்ற போதும் இல்லைம்மா அவள கட்டாயப் படுத்தாதீங்க…. அவளாவே நிச்சயமா என்னை ஏத்துப்பா…அதுவரை நான் காத்திருப்பேன் என்று சொன்னான்.

அவன் சொன்னதைப் போல காத்திருந்ததன் பலனாக கவி தன் மனதார அவனை கரம்பிடிக்க ஒப்புக் கொண்டாள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சி அம்மா மகிழ்ச்சியில் திககு முக்காடிப் போனார்.

அடியேய்….என்ன ஆச்சு உனக்கு…? நம்ம பொண்ணுக்கு   நல்லது தானே நடந்திருக்கு.இதுக்கு ஏன் மூஞ்சைத் தூக்கி வச்சிகிட்டு திரியுற….?
என குமட்டில் குத்த

அட போங்க அத்தை….இதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடந்தது.இதுக்குமேல நான் என்னப் பண்ணப் போறன்னு நினைச்சுதான் கொஞ்சம் உள்ளுக்குள்ள  நடுங்குது  என்றவளை புரியாது பார்த்தார் காமாட்சி.

என்னடி சொல்ற….

ஆமா அத்தை.மாப்பிள்ளை எதும் வேணாம் சொன்னதலா அவள அப்படியே விட்ற  முடியுமா…? அவ கல்யாணத்துக்கு எதாச்சும் செய்யணும்ல…

அட இங்க கேட்டியா கதையா….உக்காந்து தின்னாலும் கரையாத மாதிரி பணம் நகை சொத்து னு எல்லாம் இருக்கு.
ஆனாலும் அந்த பிள்ளைக்கு எதாவது செய்யணும் னு இழுக்கிற….நீ நினைச்சா செய்ய முடியாதா என்க

விரக்தியா சிரித்தவள் எல்லாம் இருக்கு.ஆனா என்னோடதுனு எதுவும் இல்லை.என் மாமியார் அனுமதிக்காம நான் கவிக்கு எதுவுமே செய்ய முடியாதே அத்தை…என்று கவலையுற..

விஷமமாக சிரித்த காமாட்சி அம்மாள் பேசாம உன் அத்தைக்கு பாயாசத்துல பாய்சன கலந்திடு என்று விட்டு மீண்டும் சிரிப்பை தொடர்ந்தார்.

அதிர்ந்த சுகுணாவோ
கிழவிக்கு குசும்ப பாத்தியா… என்று முறைத்துக் கொண்டவள் நல்லதுக்கு வழி கேட்ட என்னை கொலைக்கேசுல உள்ள தள்ள வழி  சொல்ற நீயி… நான் கிளம்புறேன் என்று ஓடப் பார்க்க

சரி சரி சும்மா சொன்னேன்.உட்காரு சுகுணா என்று சமாதானப்படுத்தி அவரை மீண்டும் அமர வைத்தவர்
அவளிடம் நான் சொல்ற மாதிரி செய் என்று காதில் ஏதோ கிசுகிசுத்தார்.

ஒர்க் அவுட் ஆவுன்றிங்க…என்று சந்தேகமாக கேட்க

கண்டிப்பா….என்று தைரியமூட்டி அவளை அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த சுகுணா தனது கணவன் சந்திர சேகரும் அத்தையும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை கவனித்தார்.இது தான் சமயம் என்று காமாட்சி அம்மாள் சொன்ன திட்டத்தை செயல்படுத்த துவங்கினாள்.

என்ன பேச்சு பேசுறான் அந்த பையன்…? என்ன நினைச்சிட்டிருக்கான் மனசுல…? இவரு வந்து பொண்ணு பிடிச்சிருக்கு சொல்வாராம்…?  சொன்னவுடனே எங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துடனுமாம்…? யார பாத்து என்ன கேக்குறான்….?  அதுலாம் முடியாது ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டு வந்துட்டன்… என்று தனக்குத் தானே பேசுவது போல சத்தமாய் பேசிக்கொண்டு சென்றார்.மேலும் கோபத்தில் தம் தம் மென்று தரையில் காலை அழுத்த பதிந்து நடந்து தனது அறைக்குள் சென்றார்.

தனது மருகள் என்றுமில்லாது இப்படி நடந்து கொள்வதை பார்த்த சேகரின் அம்மாவோ என்னடா…? இன்னைக்கு உன் பொண்டாட்டி இந்த குதி குதிக்கிறா…? என்ன விஷயம் சேகரா  என்று  கேட்க அவரோ தெரியலை ம்மா என்றவர் சுகுணாவை அழைத்தார்.

ஆஹா….கூப்பிட்டாங்க ஒர்க் அவுட் ஆகுது என்று முனுமுனுத்த சுகுணா அவர்களின் முன்பு போய் நின்றாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here