நீயே என் இதய தேவதை_68_ பாரதி

0
471

சேகரின் அம்மா  என்ன நடந்துச்சு…?எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க….?என்று சுகுணாவை  கேட்க

இதற்காகவே காத்திருந்த சுகுணாவோ
அது வந்து அத்தை….. இன்னைக்கு ஒரு பையன் என்கிட்ட வந்து நம்ம கவியை விரும்புறேன்.மொறைப்படி கல்யாணம் பண்ணிக் கொடுங்க னு கேட்குறான்.

கல்யாணம் என்றதும் சுகுணா தன்னிடம் எதாவது உதவி கேட்பாள் என்ற எண்ணத்தில் மறுப்பாக “சுகுணா தப்பா எடுத்துக்காத…அந்த பொண்ணும் நம்ம பொண்ணு தான்.ஏன் எனக்கு இன்னொரு பொண்ணு மாதிரி கூட வச்சிக்கயேன்.அதுக்கு கல்யாணம் னா பண்ணி வைக்குறதுல தப்பு இல்லை.ஆனா இரண்டாவது கல்யாணம் லாம் நம்ம இனத்திலே இல்லையே. என்று சுகுணா கேட்கும் முன்பே கவியின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தவர்

சரி அந்த பையன்கிட்ட நீ என்ன சொன்ன….என்றவரின் பார்வை தன் மீது கூர்மையாக படிவதை உணர்ந்து கொண்டவள்

நான் முடியவே முடியாது னு சொல்லிட்டேன்.நம்ம இனத்திலாச்சு பொண்ணுங்களுக்கு மறுமணம் பண்றதாவது.

அதானே…என்று சேகரின் அம்மா சொல்ல

அப்படியும் அவன்  விடாம தொல்லை பண்ணவும்
நான் அவனை  கண்டபடி திட்டிட்டேன் அத்தை என்று சொல்லி தனது அத்தையின் முகத்தை கவனித்துக் கொண்டே தொடர்ந்தார் சுகுணா.

ஆனா அந்த பையனும் விடலை அத்தை.என்னை பாத்து ஒரு கேள்வி கேட்டான்.

அப்படி என்னக் கேட்டான்.

உங்க பொண்ணுக்கு ஒரு நல்லதுனா குறுக்க விழுந்து தடுக்கிறீங்களே..
நீங்களே கடைசி வரை அவளையும் அவ குழந்தையும் பாத்துப்பீங்களா…

குழந்தை வளர வளர செல்வுகள் அதிகமாகும்.இப்பமே அவளுக்கும் அவ குழந்தைக்கும் சம்பாதிக்க அவதான் வேலைக்குப் போறா…

நீங்க எப்படி கடைசி வரை அவளப் பாத்தூப்பீங்க…னு கேட்டான்.

நான் சும்மா விடுவானா….அவனை.

நீ  ….. என்ன சொன்ன

என் அத்தைக் கிட்ட இல்லாத சொத்தா…கவி அவங்களுக்கு இன்னொரு பொண்ணு மாதிரி.நாளைக்கே கவியை வேலையை விட்டு நிறுத்திடுறேன்.அவளோட  எல்லா செலவையும் கடைசி வரைக்கும்  என் அத்தையே பாத்துப்பாங்க னு சொல்லிட்டேன் அத்தை என்று சொல்லி முடித்தும்  நெஞ்சடைத்துப்  போனார் சேகரின் அம்மா.

ஏதோ சின்னதாக உதவி கேட்பதையே எப்படியாவது மறுத்துவிடலாம்  என்று பார்த்தால் இவளோ பாதி சொத்தை  அந்த அனாதைப் பெண் மீது எழுதி வைக்க சொல்வாள் போல என்று யோசித்தவர் அது அது…வந்து
செய்யலாம் சுகுணா…. என்று இழுத்தவர் பின்பு அந்த பையன் என்ன பன்றான் னு சொன்ன

கவி வேலை செய்த இடத்தில கம்பெனி சூப்பர்வைசர் அத்தை

இதை நீ ஏன் முன்னாடியே சொல்லலை
நல்ல சம்பளம் ஆச் வியந்தவர்

பையன் எப்படி…. நல்ல பையனா…

நல்லவன் மாதிரி தான் இருக்கான்.

அப்புறம் என்ன ஏதோ நம்மால முடிஞ்ச அளவு கழுத்துல காதுல நகையப் போட்டு அவனுக்கே கட்டி கொடுத்துடுவோம்.

என்னம்மா நீங்க… நம்ம பழக்க வழக்கத்தில இப்படி இல்லை னு சொல்வீங்க.இப்போ நீங்களே கட்டிக் கொடுத்துடலாம் ங்கிறீங்க என்று சந்திரசேகர் குழம்பியடி கேட்க

அட அது இல்லை சந்திரா.என்ன தான் அவளுக்கு நாம எல்லாமே செஞ்சாலும் வாழ்க்கைத் துணை னு ஒருத்தர் வேணும்ல.அந்த பொண்ணுக்கும் அப்படி ஒன்னும் வயசாகிடலையே.அந்த காலத்துல தான் நாங்க எப்படியோ இந்த பழக்க வழக்கத்தை கட்டிக்கிட்டு அழுதோம்.இனியும் எதுக்கு இதுலாம் என்று திடீர் முற்போக்குவாதியாய் மாறிய தனது அத்தையை கண்டு வியந்த சுகுணா மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாது

அது எப்படிங்க அத்தை முடியும்.என்னதான் இருந்தாலும் நம்ம சாஸ்திர சம்பிரயதாயங்களை விட்டுத் தர முடியுமா….? என்று முறுக்கிக் கொள்ள

அட என்னடி…நீயி…எந்த காலத்துல இருக்க..? அந்த காலத்து மனுசி நானே சரிங்குறேன்… உனக்கு என்ன என்று கடுமையாக கேட்க

சந்திர சேகரோ சுகுணாவிடம் திரும்பி சுகுணா அம்மாவை எதிர்த்து பேசாத.அவங்க எது செய்தாலும்  அது சரியாத்தான் இருக்கும் என கண்டிப்போடு சொல்ல

சரிங்க.

அந்த பையனை நாளைக்கே வந்து அம்மாகிட்டே பேச சொல்லு

சொல்லிடுறேங்க…என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு தனது அறைக்குச் சென்ற சுகுணா  அங்கு நினைத்தது நடந்த சந்தோசத்தில்  விளையாடிக் கொண்டிருந்த மகனை தூக்கி ஒரு சுற்று சுற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒரே வாரத்துல கல்யாணமா…?
முன்பு அன்பு சொல்லி விளையாடியது போல சித்தியும் தன்னிடம் விளையாடுகிறாரோ என்று சந்தேகம் வந்தது கவிக்கு.

விளையாடாதீங்க சித்தி…என்று சொல்லிய கவியின் தலையில் ஒரு கொட்டு வைத்த சுகுணா  நானா டீ விளையாடுறேன்.என் அவஸ்தை உனக்கு புரியாது.என் அத்தையும் வீட்டுக்காரரும் ஏதோ குழப்பத்துல உன் கல்யாணத்தை நடத்தி வைக்குறன் சொல்லியிருக்கிறாங்க.அவங்க மனசு மாறுறதுக்குள்ள உனக்கும் அன்புவுக்கும் கல்யாணத்தை முடிச்சி வைக்கணும் பாக்குறேன்.

கவி ஏதோ பேச வர இடை மறித்த சுகுணா

.உன் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னே முடிஞ்சு போச்சேனு நான் ரொம்ப கஷ்டப் பட்டிருக்கேன் கவி.ஆனா கடவுளா பாத்து உனக்கு  இன்னொரு நல்ல  வாழ்க்கையை ஏற்படுத்தி தர வாய்ப்பை எனக்கு தந்திருக்காரு.நீ எதுவும் பேச வேண்டாம் கவி.இந்த ஒரு விஷயத்தில நான் சொல்றதை மட்டும் கேளு என்ற அவள் தலையை வாஞ்சையாய் வருட அதற்கு மேல் கவிக்கு பேச ஒன்றுமே தோன்றவில்லை.

அன்பரசனைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறாள் என்று அறிந்து பிறகு அது என்றைக்கு நடந்தால் என்ன…? ஒரு வார்த்தில் திருமணம் எனூம் போது பயம் இருந்தாலும் கூடவே ஒரு மகிழ்ச்சி உள்ளமெங்கும் பரவுவதை உணர முடிந்தது அவளால்.

ஆனால் அன்பு நிலை தான் சற்று தர்ம சங்கடமாய்ப் போனது.சந்தியாவிடம் புவனேஷிடம் ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று நடந்த கதை அத்தனையும் சொல்லி முடிக்க  சந்தியாவோ “கூடப் பொறந்த தங்கச்சி னு நான் ஒருத்தி இருக்கேன். இத்தனை நடந்திருக்கு என் கிட்ட சொல்லணும் னு தோணலை ல.ஒரு வார்ததுல கல்யாணத்துக்கு னந்திடுனு மட்டும் கூப்பிடுற…அவ்ளோதான் நீ எனக்கு கொடுக்குற முக்கியத்துவமா என்று முறுக்கிக் கொண்டாள்.

சந்தியாவுக்கு பெரும்கோபம் என்றால் புவனேஷோ மயங்கி விழாத குறைதான்.

கவிக்கு ஏற்கனவே மணமாகி ஒரு குழந்தை இருப்பதை பற்றி சொன்ன போது சந்தியாவுக்கு அது  இன்னும் உறுத்தலாய் இருந்தது.அந்த ஒரு வாரத்தில் அவளை சமாளிப்பதே பெரும் வேலையாக இருந்தது அன்புவுக்கு.

பின் இதுநாள் வரை தனியாக இருந்த அண்ணனுக்கு இப்போதாவது ஒரு நல்லது நடக்கிறதே என்றெண்ணி அவனது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் சந்தியா.

ஆனந்துக்கு முன்பே தெரிந்ததால் அவனுக்கு அத்தனை அதிர்ச்சி இல்லை.கல்யாண வேலைகள் அத்தனையும் தான் பார்த்துக் கொள்வதாய் உறுதியளித்தான்.

திருமணம் மிக மிக எளிமையாக அதே முருகன் கோவிலில் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here