நீயே என் இதய தேவதை_69_பாரதி

0
352

ஒரே வாரத்தில் திருமணம் என்றதுமே கவியை கம்பெனி செல்ல வேணடாம் என்று மறுத்துவிட்டான் அன்பரசன்.

அடுத்தநாளே பைக்கில் அவள் இடம் வந்து நின்றவன்
அடுத்த அடுத்த நாட்களில் அவளுக்கான உடையை,நகையை எல்லாம் அவளே தேரந்தெடுக்கட்டும் என்று அழைத்துக் கொண்டு சுற்றினான்.

திருமணத்திற்க்காக பட்டுப்புடவை தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அந்த கடையிலிருந்த  வயலட் நிற புடவைகளை மட்டுமே அவன் தேர்ந்தெடுத்து இதுல உனக்கு எது பிடிச்சிருக்கு….? எனறு கேட்க

வயலட் கலர் புடவை தான் எடுக்கணும்.அப்படித்தான் உங்க வழக்கமா என புடவைகளை பார்த்தபடியே கேட்க

அப்படி இல்லை என்று அவளைப் பார்த்து விஷமமாக சிரித்தவன் அது வேற மாதிரி சென்டிமென்ட்

புரியாது விழித்தவள்  என்னன்னு சொல்லுங்க என்றுவிட்டு  சொல்லித்தான் ஆகணும் என்றொரு பிடிவாத பார்வை பார்க்க

இந்த கலர் ட்ரெஸ் ல தான் உன்னை முதல்முதல் ல சைட் அடிச்சேன் சிரித்துக்கொண்டே  சொல்லிவிட்டு  கண்ணடித்தவனை

முறைத்து வைத்தாலும் அவன் சொன்ன மாதிரி வயலட் நிற புடவைகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்தாள்.

பிறகு அவளுக்கு தேவையான சாதாரண உடைகளையும் மாயாவுக்கு சில உடைகளும் அவளை தேரந்தெடுக்கச் சொல்லி  வாங்கினான்.தனக்கான உடைகளை கவிதா வை தேர்ந்தெடுக்க சொன்னான்.

பிறகு நகைக்கடைக்கு அழைத்து சென்று காசைப் பத்தி கவலைப் படாத  உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்கலாம். என கவிதா மலங்க மலங்க விழித்தாள்.அவளுக்கு நகைகள் பற்றி அவ்வளவு தெரிவு இல்லை.

என்ன பாக்கணும்…? என்று கடையில் கேட்க இயலாமையாக அன்பரசன் முகம் பார்த்து வைத்தாள் கவி. அவளது முகத்தைப் பார்த்தே அவளை புரிந்து  கொண்டவன் சின்னக் குழந்தை தெரியாதவங்க சாக்லேட் கொடுத்தா அம்மாவைப் பார்க்குற மாதிரி…பார்க்குற என்று செல்லமாக அவளது தலையை பிடித்து ஆட்டிவிட்டு
அவளுக்கான நகைகளையும் அவனே தேர்ந்தெடுத்தான்.

கவிக்கு நகைகளில் அதிக ஆர்வம் இல்லை என்று புரிந்து கொண்டவன் மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் அழகாக வேலைப்பாடு செய்யபட்ட நகைகளை தேர்ந்தெடுத்தான்.

தங்கத்தில் ஜிமிக்கி வைத்த காதணிகள், மெல்லிய  செயின், வெள்ளி கொலுசு, வளையல்கள் மட்டும் வாங்கினான்.சந்தியாவும் அவள் முறைக்கு சில நகைகள் எடுத்து தருவதாக சொன்னதால் இத்தோடு நிறுத்திக் கொண்டான்.
இப்படியாக மூன்று நாட்கள் முடிந்தது.

அடுத்த மூன்று நாட்கள்  இதே வேலையாக கவி சுகுணாவோடு சுற்ற வேண்டியதாயிற்று.மதுரவாணியிடம் பேசி சம்மதம் வாங்கியாயிற்று.ஆனாலும் அவரது மூத்த பெண்ணின் பிரசவம் நேரம் என்பதால் கவியை பிறகு வந்து பார்க்கிறேன் என்று சொல்லியிருந்தார்.கவிக்கு பிடித்த மாதிரி சில புடவைகளை வாங்கி கொடுத்தவர்  மேலும் அவளுக்கு அந்த வீட்டில் என்னென்ன தேவைப்படும் என்று பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தார்.நகைகள் மட்டும் தனது கொடுத்த பணத்தில் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டியதாற் போயிற்று.

நாளை திருமணம் எனும் நிலையில் கவி இத்தனை நாட்கள் அலைந்து திரிந்ததில் பகலிலே சுகமாக படுத்து தூங்கிக் கொண்டிருக்க  மொபைல் அலறி தூக்கத்தை கெடுத்தது.
ப்ப்ச்ச் என்று சலித்துக் கொண்டே யாரென்று பார்க்க அன்பரசன் என்றதும் முகம் ஒளிர்ந்து சொல்லுங்க.
என்றாள்.

என்ன சொல்ல….?  கிளம்பு வெளிய போலாம்.

எதாவது முக்கியமா….எங்கே இருக்கீங்க

எங்கே…னு சொன்னாத்தான் வருவியா…அங்க தான் வந்திட்டு இருக்கேன்.சீக்கிரம் கிளம்பி வா..

ப்ப்ச்ச் எனக்கு தூக்கம் வருது என்று சிறுபிள்ளை தன்மையோடு அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன்

நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு இன்னைக்கு என்ன தூக்கம் ஒழுங்கு மரியாதையா…ரெடியாக வெளிய வாடீ.இல்லை நானே உள்ளே வந்து தூக்கிட்டு வந்திருவேன் என மிரட்ட

நிஜமாகவே அவன் தூக்கி கொண்டு போனால் எப்படியிருக்கும் என்று நினைத்து பார்த்து மிரண்டவள் நானே வரேன். என்று பல்லைக் கடித்துக் கொண்டே எழுந்தவள் சோர்வு முழுமையாக கலையாத முகத்துடன் தயாராகி அவனுக்காக காத்திருந்தாள்.குழந்தை சுகுணா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.சித்தியிடம் கால் செய்து விபரம் சொன்னாள்.
அன்பரசனது பைக் அருகில்  வந்து நின்றதும் பொரியத் தொடங்கினாள்.

எல்லாத்துலயும் பிடிவாதம்.நாளைக்கு கல்யாணம்.இன்னைக்கு என்ன அப்படி முக்கியமான வேலை.எதுவும் வாயைத் திறந்து சொல்லிடாதீங்க என்று அவனை திட்டிக் கொண்டே பைக்கில் அமர்ந்தாள்.

எங்கு செல்கிறோம்…? எதற்கு செல்கிறோம் என்று தெரியாமலே ரொம்ப தூரம் பயணிப்பது போல தோன்றிய நேரம் பைக் நின்றது.வா என்று அழைத்து செல்ல இத்தனை நேரம் இருந்த கடுப்பு மெல்ல மெல்ல  மறைந்து ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது கவிதாவுக்கு.இதழ்கள் புன்னகையை உதிர்த்தன.

தனக்கு முன்பே விரிந்திருந்த அந்த நீலக் கடலை கண்டதும் இத்தனை நேரம் தான்  கொண்டிருந்த சோர்வு எல்லாம் எங்கு ஓடிப் போனதென்று தெரியவில்லை.அனுமதி வேண்டி அன்பரசனை ஒரு பார்வை பார்த்தவள் அவன் புன்னகைக்கவும் மகிழ்ச்சியோடு ஓடிச் சென்று  கடல் நீரில் கால் பதித்து அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஒஓஓஓஓஓ என்று கடல்  ஆர்ப்பரிக்க சில்லென்ற காற்று  முகத்தில் வீச அந்த  குளுமையுடன் கரையில் அமர்ந்து அவளையைப் பார்த்துக் கொண்டிருந்தான் அன்பரசன்.இல்லை இல்லை முன்பே அவள் ஷர்மியுடன் இங்கே குழந்தை போல கத்தி குதித்து விளையாடிக் கொண்டிருந்த ஞாபகம் நினைவுக்கு வந்தது.அன்று அவளைப் பார்க்கும்போதே அவளை இன்னொரு நாள் இங்கு தன்னுடன் அழைத்துவர வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
இன்றுதான் நடந்தேறியது.

சிறிது நேரத்திற்கு பின் கரைக்கு வந்த கவி  வாங்க… என்று அன்பரசனின் கரம் பிடித்து இழுத்துச் செல்ல அவனும் மறுக்காமல் அவளுடன் சென்றவன் கால்கள் மட்டும் முழங்கால் வரை பேன்ட்டை மடித்துவிட்டு அலைகள் கால் நனைக்கும் படி
அமைதியாக  நின்றிருந்தான்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த கவியோ அத்தனை ஜனத்திரளையும் கண்டு கொள்ளாது அன்புவை நெருங்கி பக்கவாட்டில் அணைத்தது போல ஒட்டிக்கொள்ள அவனும் அளது தோள்களை அணைத்த படி நின்றான்.
அந்த காட்சியை அழகாக அவனது செல்போனில் சுயமியாக பதிவு செய்து வைத்தான்.

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க கள்ளமில்லா புன்னகையோடு அன்றலரந்த மலர் போன்று தனக்கு வெகு அருகில்  ஒட்டிக்கொண்டு நிற்பவளது  நெற்றியில் இதழ்களை ஒற்றி எடுத்தான்.கவி முகம் சிவந்தாலும் அவனை விட்து விலகவில்லை.  இந்த புன்னகையும் மலர்ச்சியும் இனி எப்போதும் இவளை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என மானசீகமாக வேண்டிக் கொண்டான்.

அடுத்தநாள் திருமணத்தில் அதே முகச் சிவப்போடு பொலிவுடன் இயல்பான அலங்காரத்திலே தேவதையாக மணக்கோலம் பூண்டிருந்தாள் கவி.கம்பீரமாக அவளது அருகில் அமர்ந்திருந்தான் அன்பு.திருமணம் எளிமையாக முருகன் கோவிலில் நடந்தேறியது.சுகுணாவுக்கு மனம் நிறைந்து போனது.ப்ரியாவும் ஷர்மியும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.சுகுணாவுடன் இணைந்து காமாட்சி அம்மாள்  சொல்லும் வேலைகளை பார்த்துக் கொண்டும் அவர்களின் அண்ணன் சொன்னது போல எல்லா நிகழ்வையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

கவியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்ட சந்தியாவுக்கு முன்பொரு நாளில்  அதே கோலத்தில் இருந்த சங்கீதாவின் முகத்தை ஒப்பிட்டு பார்க்க தோன்றியது. இரண்டிற்கும் இருந்த வித்தியாசம் புரிந்தது. தனக்கு இருந்த சிறு உறுத்தலும் மறைந்து போய் இனி அண்ணன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.

ஆனந்த்துக்கும் அப்படித்தான்.இனியாவது எந்த பிர்ச்சனையுமின்றி அன்பு வாழ்வு  சந்தோசமாக அமைய வேண்டும் என்று ஆயிரமாவது முறையாக முருகனை வேண்டிக் கொண்டான்.மாயாவை கைகளில் வைத்து கொண்டு அவனது அருகில் நின்றிருந்த நித்யாவோ ஆனந்தின் மனம் புரிந்து கொண்டு இனி எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று சொல்லி  புன்னகைத்தாள்.புவனேஷ் ஹப்பாடா இனி சந்தியாவின் நச்சரிப்பிலிருந்து  தப்பித்து விட்டோம் என்று நினைத்தவன் மானசீகமாக தனது மச்சானுக்கு நன்றி சொன்னான்.

அவனது தாய் கல்யாணமன்றும் வந்து ஏதோ முனுமுனுத்தாலும் அதையெல்லாம் கவனிக்கும்  நிலையில் அங்கு யாரும் இல்லை.அன்பரசனுக்கு கவியது முகம் தவிர நினைவில் ஏதுமில்லை.

கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று அய்யர் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க அன்பரசன் கவிதாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு  தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here