நீயே என் இதய தேவதை_71_பாரதி

0
356

கவி தன்மீது வைத்திருக்கும் நேசத்தை தங்களது பிரிவுதான் அவலுக்கு உணயத்தும் என்றுதான் அவளை தவிர்த்தான்.ஆனால் இவ்வளவு தவித்துப் போவாள் என்று அவனும் எண்ணியிருக்கவில்லை.தன்னையே நொந்து கொண்டவன் தப்புதான்….டா மன்னிச்சிடு என்றும் மனதார.

இனிமே எப்பவும் என்னை விட்டு போக மாட்டீங்க ல்ல….என்று குழந்தை போல்
கேட்பவளின் உச்சந்தலையில் அழுத்தமாய் முத்தம் பதித்தவன்

இல்லைடா. எங்கேயும் போக மாட்டேன்.
என்று சத்தியம் செய்ய அழுகையில் விசும்பிக் கொண்டிருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்தாள்.

சரி.சொல்லு.மனசளவில என்னை பிரிந்து இவ்வளவு கஷ்டப்பட்டும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை.ஒரு நாள் திடீர்னு எனக்கே அதிர்ச்சியாகுற மாதிரி சரி கல்யாணம் பண்ணிக்கிறேன் னு போட்டு உடைச்சிட்ட..என்று அவன் வியப்பாக வினவ

புன்னகையோடு அவன் முகம் பார்த்தவள் வேற கம்பெனி போனதுக்கு அப்புறம் நீங்க போன்ல தான் பேசுவீங்க.அதும் ரொம்ப கேலி பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கலாா னு சொல்வீங்க.நானும் முடியாது சொல்ல என்னை வெறுப்பேத்துற மாதிரி எதாவது சொல்லிட்டு போனை வச்சிடுவீங்க.அப்பவே நீங்க ஒருநாள் சீரியசா பேச என்னால பதில் சொல்லவே முடியலை.எனக்கு உங்களை பிடிக்கலை னு சொன்னா என் மனசாட்டசியே சிரிக்கும்.ஆனா கல்யாணம் ன்ற வார்த்தையிலேயே பயம் தான் வந்துச்சி.

மனசு ஒரு நிலையில் இருக்காது.ஒரு முறை கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க அருகாமையிலே கடைசி வரை இருக்கலாமே னு தோணுற மனசு.இன்னொரு தடவை ஒரு கல்யாணம் பண்ணி அனுபவிச்சது பத்தாதா னு கேள்வி கேட்கும்.போனை கட் பண்ணி வைக்கதறது தான் அப்போதைக்கு நான் என்கிட்டேயிருந்தே தப்பிக்கக்கிறதுக்கான வழி.

அத்தனை நாளும் போன்ல அதை பண்ணிட்டு  அன்னைக்கு ஹாஸ்பிட்டல் ல நேருக்கு நேரா பாத்து என்னை பிடிச்சிருக்கா?  யோசித்து சொல்லு சொன்னதும் என்னால என் மனசை மறைக்க முடியலை.நீங்க என் கையை பிடிச்சப்ப நான் அத்தனை பாதுக்காப்பா உணர்ந்தேன்.இந்த உலகத்துல நமக்கே நமக்குனு ஒருத்தர் இருக்கிறாங்குறது எவ்வளவு பெரிய தெம்பு தெரியுமா…? அதை அன்னைக்குத்தான் உணர்ந்தேன்.நீங்க மறுபடி கையை விலக்கும்போது அதுயெல்லாம் மறைஞ்சு போன மாதிரி இருந்தது.

என்னோட சின்ன உலகத்துல நானும் மாயாவும் மட்டும் போதும் நினைச்சிட்டிருந்தேன் என்றுவிட்டு  ஆனா அப்போதான் புரிஞ்சிகிட்டேன்.நீங்க இல்லாம நான் நானாகவே இருக்க முடியாது.அதுதான் அப்பவே என் சம்மதத்தை சொல்லிட்டேன்.

இத்தனையும் அவள் சொல்லும் போது அவள் முகபாவனைகளை இரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தான்.

அன்பு

ம்ம்ம்

ஐ லவ் யூ…என்று அவள் அவன் நெஞ்சில் இறுகிக் கொள்ள

ம்ம் என்று சாதாரணமாக சொன்ன்வன் அவள் சொல்லிய வார்த்தைகள் பிறகு புரிய உற்சாகமாக ஏய்….என்ன சொன்ன என்ன சொன்ன…திரும்ப சொல்லு என அணைத்திருந்தவளை விலக்கி முன் நிறுத்தி அவள் முகம் நிமர்த்தி  கண்களோடு கண்கள் கலக்கவிட்டவன்

ப்ளீஸ்…ஒரு தடவை சொல்லேன் என்று மென்மையான குரலில் கிசுகித்தான்.

அவளும் அவனைப் போலவை ஐ லவ் யூ… அன்பு என மிக நிதானமாக அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல
சந்தோசத்தில் உச்சத்தில் அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டவனின் உதடுகள் அவளின்  இமைகள் கன்னம் என்று முகம் முழுவதும் முத்தங்களால் நிறைத்தது.

பாவையவள் முகம் இதுவரை கண்டிடாத காதலாலும்   நாணத்தாலும்  செந்தாமரையாக சிவக்க ஒரு நொடி நிதானித்து அதை ரசித்தவன் அவளின் இதழ்களை மென்மையாக சிறை செய்தான்.

கவிக்கு உள்ளூர ஒரு நடுக்கம் தொடங்கி  பின் மெது மெதுவாய் உடலெங்கும் பரவசமாய் ஏதோ ஓர்  உணர்வு பரவ  இமைகளை மூடி அனுமதித்தாள்.

பின் இளமை உணர்ச்சிகள் தங்கள் வேலையை செய்ய
காதல் மிகுதியில் கவி அன்பு  இருவரும் ஒருவரிடம் ஒருவர் சரணடைய மலர் ஒன்று மொட்டவிழந்து போல இவர்களின்  சங்கமம் நிகழ்ந்தது.

அடுத்தநாள் கவி வெகு நேரம் தூங்கிவிட்டோமா ? என்று மாயா நினைவு வர அவசரஅவசரமாக எழ மாயாவும் அன்புவும் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த சத்தம் உணர்ந்தாள்.

நேற்றைய நினைவுகளில் மனம் நிறைந்திருக்க சின்ன சிரிப்புடன் எழுந்து குளியறைக்குச் சென்றாள்.

தலைக்கு குளித்து முடித்து ஹாலிற்கு வந்தவளை “அம்மா” என்று கட்டிக்கொண்டது  மாயா.அவளை தூக்கி கொண்டவள் அன்புவிடம் “சாரிங்க ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல”

ரொம்ப டையர்ட் ஆ இருந்த.அதான் எழுப்ப வேண்டாம் னு நினைச்சேன் என்று சாதாரணமாக சொல்லி அன்பு புன்னகைக்க

கவிக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.அதைக் கண்டு சிரித்தான் அன்பு.

அதைக் கண்டு முறைக்க முயற்சி செய்து தோற்றவள் இன்னமும் சிவந்த முகத்துடன் பேச்சை திசை திருப்ப நான் காபி போடுறேன் என்று சமையல்கட்டுக்குள் செல்ல மேலும் சிரித்தவன் அவளிடம் வந்து  பாப்பாவுக்கு பாலை காய்ச்சி கொடுத்துட்டேன் என்றவன் லேட் ஆகிடுச்சு.இன்னைக்கு காபி வேண்டாம் என்றுவிட்டு மாயாவை தூக்கிக் கொண்டான்.

காலை உணவுக்கு என்ன செய்ய என்று யோசித்து உப்மா செய்து விட்டு அதற்கேற்றாற் போல சட்னி அரைத்து வைத்தாள்.நல்லவேளை இவர்கள் திருமணத்திற்கு புடவை நகைகள் வாங்கும் நேரத்தில் சந்தியா வீட்டை சுத்தப்படுத்தி முன்கூட்டியே  மளிகை பொருட்கள் அத்தனையும் வாங்கி வைத்திருந்தது நல்லதாய் இருந்தது.வெகு நாளைக்குப் பிறகு அன்பரசன் வீட்டில் நல்ல சமையல் செய்யப்பட்டிருந்தது.

நேரம் 9.30 ஐ தொட்டிருக்க அன்புவை சாப்பிட அழைத்தவள் “லேட் ஆகிடுச்சு இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று சொல்லி பரிமாறிவிட்டு எழுந்தவளிடம்  “நீ மட்டும் தனியா சாப்பிடுவியா.வா கவி என்றழைத்தவன் அவளுக்கு பறிமாறினான்.

கவி ஷிப்ட் முறைப்படி வேலைப் பார்த்தில் தினசரியான உணவுப் பழக்கம் மாறியிருந்தது.இப்போது அவளுக்கு பசியில்லை என்றாலும் அன்பரசனின் அக்கறை மனதிற்குள் இனிக்க அவனுக்காக சாப்பிட்டாள்.

தன்னுடைய தட்டில் இருந்த உணவை பாதிக்கு பாதிக்கு தரையில் சிந்திவிட்டு மாயா சாப்பிட அந்த காட்சியை  இரசித்தவன் மாயாவை மடியிலமர்த்தி ஊட்டிவிட்டான்.

கவியோ வேண்டாம்.அவளே தனியா சாப்பிட பழகட்டும் என்று தடுக்க அன்புவுக்கு பதிலாக மாயா அன்னையை முறைத்துவிட்டுப் பின் அவளை கைகாட்டி அதன் மொழியில்  புகார் சொல்லியது.

“அது ஒன்னுமில்லடா அப்பா உனக்கு மட்டும் ஊட்டி விடுறேன்ல அதான் அம்மாக்கு கோவம்.அம்மாக்கும்…. ஊட்டிவிடலாமா” என்று அவன் மாயாவைக் கேட்க அவளுக்கு என்ன புரிந்ததோ சரியென்று தலையாட்டி வைத்தது.

சரி சரி …..போனாப் போகுதுனு உனக்கும் ஒருவாய் ஊட்டி விடுறோம்.அப்புறம் எங்களைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது என்ன …..? என்று சொன்னவன் அவளுக்காக ஒருவாய் எடுத்து அவளுக்கு ஊட்ட

அடப்பாவி…நான் பொறாமைப் படுறேனா என்று அவனை முறைத்தாலும் அந்த உணவு தேவாமிர்தமாய் தொண்டையில் இறங்கியது.

பிறகு நீங்க சாப்பிடுங்க… பாப்பாவுக்கு நான் ஊட்டுறேன் என்றவள் மாயாவை  வா என்றழைக்க மாயா தனது அப்பாவுடன் இன்னும் இறுக்கமாக ஒட்டிக்கொண்டு வர மாட்டேன் என்று அன்பு கவியைப் பார்த்து சிரித்தான்.

சரிதான் போடீ…ரொம்பத்தான் பண்றீங்க அப்பனும் பொண்ணும் என்று முறுக்கிக் கொண்டாலும் மனதை ஏதோ ஒரு சுகமான உணர்வு நிறைந்திருந்தது.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை எடுத்து வைத்த நேரம் சுகுணா அவள் கணவனோடு வீட்டிற்கு வந்திருந்தாள்.மாயா ஓடிச் சென்று தனது பாட்டியை கட்டிக் கொண்டது.

மதியம் விருந்துக்கு அழைக்க வந்த சுகுணாவுக்கு  உற்சாகமாக வரவேற்ற கவியையும் அன்பரசனையும்  பார்த்த மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
அன்று மதியம் விருந்து முடித்து அடுத்தாய் சந்தியா வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க அதற்கடுத்த நாள்  ப்ரியாவின் சித்தி விருந்துக்கு  மறுநாள் காமாட்சி அம்மாள் உரிமையோடு வீட்டிற்கு வரச் சொல்லி அதட்டினார்.

இப்படி அத்தனை பேரும் உபசரனையிலும் அன்பிலும் அன்புவுக்கு எப்படியோ கவிதாவுக்கு மனம் நிறைந்து போனது.தனக்கென யாரும் இல்லை என்ற பாதுகாப்பின்மை சுத்தமாய் ஒழிந்து  தற்போது எல்லோரும் தன்னை கொண்டாடும் நிலையில் மனமகிழ்ந்து போனாள்.வாழ்க்கை குறித்த கனவுகளோ, அல்லது கனவு காணும் படியான வாழ்க்கையோ இதுவரையில் அவளுக்கு  அமைந்ததேயில்லை.அந்த நிலை  இப்போது தலைகீழாய்  மாறியிருந்தது. அன்பரசனின் காதலிலும் நேசத்திலும் அக்கறையிலும் முழுதும் அவன் வசமாகிப் போனாள்.

——++++++++++++++—-+++++++++-

(ஒரு மாதம் கழிந்த பிறகு)

கவி தனது கணவனையும் மகளையும் முறைத்து கொண்டே தோசையை தட்டில் வைத்தாள்.அவர்கள் இருவரும் சமத்தாக சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

மூஞ்சியைப் பாரு.எல்லாத்தையும் பண்ணிட்டு அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரியே மூஞ்ச வச்சுக்க வேண்டியது.என்று பொதுவாக சொல்லிட்டு போக,

கொதித்து போன அன்பு ஏய்….என்ன டீ யாரை திட்டுற…..வர வர வாய் ரொம்ப நீளுது.இதோ வரேன் இருக்கு உனக்கு என்று வீராவசனம் பேசியபடி சமையலறைக்குச் செல்ல

வாயேன் பாக்கலாம்..வந்துதான் பாரு என்றபடி சூடான தோசைக்கரண்டியை ஓங்க

வந்த சுவடு தெரியாமல் மீண்டும் ஹாலிற்கு சென்றவன் தன்னையே குறுகுறுவென்று பார்த்து கொண்டிருந்த மகளிடம்   “அம்மா வன்முறைய கையில எடுக்கிறா பாப்பா.நமக்கு அது செட்டாவாது நாம சமத்தா இருப்போம் என்ன என்று  சொல்லி தோசையை சாப்பிட ஆரம்பிக்க அதை ஆமோதித்த  மாயாவும் அதையேச் செய்தது.

காமாட்சி அம்மாளிடமும் சுகுணாவிடமும் அடங்கி இருந்த மாயா கவியிடம் இருக்கும் போது மட்டும் பல சேட்டைகளை செய்யும்.இப்போது கவியே முழுநாள் மாயாவை பாராத்துக்கொள்வதால் வளரும் குழந்தையின் சேட்டை நாளுக்கு நாள் அதிகமானது.கவி கம்பெனியின் நாள் முழுக்க வேலை செய்யும்போது கூட இத்தனை சோர்ந்திருக்க மாட்டாள்.அவளது வாலுப் பெண் அவளை அப்படி ஆட்டி படைத்திருந்தாள்.மாலை வரை மாயா பின்னாடியே அலைந்து திரியும் கவி அன்பு வந்தவுடன் அவனிடம் மாயாவை பற்றி லிஸ்ட் போட்டு குறை படிப்பாள்.கண்டித்து வைக்க சொல்லுவாள்.ஆனால் அன்பு குழந்தைகள் விஷயத்தில் கண்டிப்பு என்றால் என்னவென்று கேட்பவன்.மாயா விடயத்தில் அவனது கண்டிப்புகள் அதட்டல்கள் அனைத்தும் மெல்ல மெல்ல சுவத்துக்கு வலிக்கப் போகுது என்பது போலத்தான் இருக்கும்.

மாயாவை கண்டிப்பதை விட அவனுக்கு கவியை சமாதானப்படுத்துவது தான் எளிது என்று புரிந்துகொண்டவன் அதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

கவியின் உங்க செல்ல பொண்ண ஒரு வார்த்தை சொல்லிடாதீங்க.இரெண்டு பேரும் கூட்டு களவானிங்க என்ற முனுமுனுப்பையும், அவளது பலவீனமான கோபத்தையும் அணைப்பினாலும் முத்தத்தினாலும் சரி செய்யும் வித்தை அறிந்தவனாயிற்றே.மொத்தத்தில் கடந்தகால நிகழ்வுகளின் கசடுகள் எதும் இல்லாது அவர்கள் இயல்பான இல்லற வாழ்வுக்குள் ஒன்றியிருந்தனர்.

இனறும் அதுபோல்தான்
பிரியாவின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்ப வேண்டும் என்று முடிவெடித்திருந்தினர் தம்பதியினர்.ஒரு வாரம் முன்னரே வருமாறு பிரியா மிகவும் வற்புறுத்தினாலும் அன்புவின்  அலுவலகத்தில் விடுமுறை வழங்கபட வில்லை என்று காரணம் காட்டி மறுக்க ப்ரியா கோபித்துக் கொண்டாள்.அவளை தாஜா செய்து  கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னரே வந்துவிடுவதாய் சத்தியம் செய்து சமாதானப் படுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டாள்.

சொன்னது போலவே காலை வழக்கத்துக்கு முன்பே எழுந்து மடமடவென வேலை செய்ய நினைத்தாலும் மாயாவை குளிப்பாட்டி, ஆடைமாற்றி தாயாராக்குவதற்குள் முழு சோர்வும் தொற்றிக் கொண்டது. அன்பு அதற்கு மேல்.நேற்று ஓவர் டைம் வேலை பார்த்து வந்தவன் 9 மணிக்கு முன் எழவே தயாராக இல்லை.
“அடப் போங்கடா”என்றுவிட்டு சமையலறைக்கு நடந்தவள் திடீரென  தரையில் வழிக்கி விழுந்து வலியில் அலறிக் கொண்டிருந்தாள்.அவளது அலறல் சத்தம் கேட்டு விழித்த அன்புவோ என்ன ஆச்சு பாத்து எழுந்திரு என்று கவியை  எழுப்பி நிற்க வைக்க முட்டிக்காலில் வலி கொஞ்சம் அதிகமாவே இருந்தது.

சில நொடிகள் ஒன்றுமே புரியாமல் விழித்தவள் தரையில் இருந்த தண்ணீரை பார்த்ததும் புரிந்து கொண்டாள்.இது யார்  வேலை என்று.மாயாயாாாாாா…….என்று இவள் பல்லை கடிக்க அம்மாவின் கோபம் உணர்ந்து கொண்ட மாயாக்குட்டி அப்பாவிடம்  சென்று மறைந்து கொண்டது.

ஏற்கனவே தாமதமான கடுப்பிலௌ இருந்தவள் அன்புவின் பின்னே ஒட்டிக்கொண்டிருந்த மாயாவை பிரித்து  தனித்து நிறுத்தி அடிக்க போக
அன்பு தடுத்து மாயாவை தனக்கருகே நிறுத்தி வைத்துக்கொண்டான்..அது கூட பரவாயில்லை.

நீங்க தள்ளுங்க.காலையில இருந்து ஒரே சேட்டை.இவ கீழே தண்ணி கொட்டி வச்சதால தான் நான் விழுந்தேன்.என்று சொல்லி மாயாவை இழுக்க நீ பாத்து நடக்காம குழந்தையை குறை சொல்லுவியா? அவளுக்கு என்ன தெரியும் ? என்று மகள் பக்கம் நிற்கவும் கவி கோபத்தின் உச்சிக்கு சென்றாள்.எப்படியோ போங்க என்றவள் தனியே போய் ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்.

அடிபட்டிருச்சா காலைக் காட்டு என்று வந்தவனிடமும் ரொம்பத்தான் அக்கறை என்று எள்ளலாய் சொல்லிவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள்.”ஆஹா….நெஜமாவே அம்மா  ரொம்ப கோவமாயிருக்கா போலவே பாப்பூ… இன்னைக்கு கொஞ்சம் ஓவராத்தான் நடந்துகிட்டமோ என்று மாயாவிடம் கேட்க அது என்ன புரிந்ததோ ஆமாம் என்று தலையாட்டிட்டு வைத்தது.

மாயாவுக்கு பிடித்த கார்ட்டூனை தொலைக்காட்சியில் ஒளிரவிட்டு பத்து நிமிடத்தில் தாயாராகி வந்தவன் (அதற்கு மேல் அவளை ஓரிடத்தில் பிடித்து வைப்பது எளிதல்ல) கவியிடம் கிளம்பலாமா ? என்ன நீ இன்னும் ரெடி ஆகலையா என்று கேட்க அன்பரசனை எரித்து விடுவது போல பார்த்தவள் கடிகாரத்தை பார்த்தாள்.

நேரம் கடந்து விட்டிருந்தது அவர்கள் முன்பதிவு செய்திருந்த பேருந்து இந்நேரம் பாதி தொலைவு கடந்திருக்கும்.அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவன் சரி சரி அடுத்த பஸ்க்கு போலாம்.ரொம்ப பசிக்குது.போய் டிபன் ரெடி பண்ணேன் சாப்பிட்டு பொறுமையாவே போலாம். என கவி பற்களை நறநறவென்று கடிப்பது வெளியில் கேட்டது.

என்னதான் கோபம் இருந்தாலும் அவன் சொன்னதை செய்ய மறுக்கவில்லை.முறைப்பதை தொடர்ந்து கொண்டே தான் தோசையை வார்த்துக் கொடுத்து கணவனுக்கும் மகளுக்கும் பசியாற்றியவள் மீண்டும் தனியே அமர்ந்து கொண்டாள்.

அன்புவும் மாயாவும்  அவளை மிரட்டி கொஞ்சி கெஞ்சி சாப்பிட வைக்க  முயற்சி செய்ய எதுவும் பலிக்கவில்லை.இறுதியாயுதமாக ஒன்று சொன்னவுடன் அதிர்ந்து போனாள் கவி.

சரி உனக்கு நான் தோசை வார்த்து தரேன்.நீ சாப்பிடுற என்று எழுந்து அவன் கிட்சனுக்குள் செல்ல மிரண்டவள் எதுக்கு ஒழுங்கா இருக்க நாசம் பண்ணி வைக்கவா ஒன்னும் வேணாம்.நானே செஞ்சு சாப்டுக்கிறேன் தள்ளுங்க என்றுவிட்டு அடூப்பை பற்ற வைத்தாள்.பின்னே அவளுக்குத்தான் தெரியுமே அவனது சமையல் கலையைப் பற்றி அப்படி வா வழிக்கு என்று சொல்லி  அவள் எதிர்பாரா நேரம் கண்ணத்தில்  அழுந்த முத்தமிட்டு செல்ல இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று கோபத்தோடு சொல்வது போல அலுத்துக் கொண்டாலும் சட்டென அவள் முகம் கொண்ட சிவப்பையும் உதட்டில் எழுந்த புன்னகையும் அன்புவின் கண்களிலிருந்து தப்பவில்லை.

உற்சாகமானவன் பின்னே வேற எதுக்கு குறைச்சலாம்? என்று அவளிடம்  பேச்சை வளர்த்து  அணைக்க

வேணா…நான் ஏற்கனவே ரொம்ப  கோவமாயிருக்கேன் போங்க. என்று குரலில் கடினத்தை வரவழைக்க முயன்றாள்

அன்புவோ உன் கோவத்தை நான் தான் பாத்தனே என்று சொல்லி சிரிக்கவும்
தன்னை கண்டுகொண்டு விட்டதை அறிந்து முறைக்க முயன்று தோற்று  இம்முறை செல்லமாக கோபித்து  ” ச்ச்சீ ப்போடா …” என்று அவனை தள்ளிவிட

மேலும் சிரித்து கொண்டே மீண்டும் அணைத்து முத்தமிட்டவன் சீக்கிரம் சாப்பிட்டு ரெடியாகு என்று சொல்லி மாயா இருக்குமிடம் தேடி நகர்ந்தான்.கவியின் பலம் மற்றும் பலவீனம் இரண்டு அன்புதான்.கவியின் கோபத்தின் அளவு என்ன என்பதும் அதற்கு தீர்வு என்ன என்பதும் அன்புவிற்கு நன்றாகவேத் தெரியும்.

ஒருவழியாக மூவரும் தயாராகி கிடைத்த  பேருந்தில் ஏறி அமர்ந்ததும் தான் கவிக்கு நிம்மதியாக இருந்தது.இன்றைக்கு மட்டும் பேருந்து கிடைக்காமல் போயிருந்தாலும் ப்ரியாவை யார் சமாளிப்பது.?
@@@

பேருந்து நகர ஆரம்பித்ததும்,
இதுவரை ஆட்கொண்டிருந்த புழுக்கம்,வியர்வையினால் உண்டான அசௌகரியம் எல்லாம் கரைந்து புதுக்காற்று தேகம் தொட புன்னகையுடன்  பேருந்து இருக்கையில் தலை சாய்ந்து அன்புவை பார்க்க, அவன் ஒருபக்க தோளில் மாயாவை தட்டுக் கொடுத்தபடி இருந்தவன் இவளின் கரம் பற்றி புன்னகைத்தான்.

இந்த புன்னகையில் அவர்கள் இருவருக்கும் மட்டும் அர்த்தம் புரியும்படி இருந்தது.

கடும்பனி சுடும்வெயில் காலத்தை கடந்து வந்துவிட்ட இரு பறவைகள் இனி  வசந்தகாலத்தில் சிறகடிக்கட்டும்.

நாம் விடைபெற்றுகொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here