Thursday, October 28, 2021
Home உள்ளம் உந்தன் வசம்

உள்ளம் உந்தன் வசம்

அத்தியாயம் 11 பெரியப்பா வீட்டிலும் கூடத் தன் மனைவி உரிமையாய் எல்லோரிடமும் பேசி வளைய வருவதை ஆதவன் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதெப்படி அவள் மிக உரிமையாய் எல்லா இடத்திலும் ஒன்றி விடுகிறாள்? ஆனால், வெளியில்...
அத்தியாயம் 10 ராமானுஜம் மகன் மருமகளை அழைத்து தன் அண்ணன் வீட்டிற்கு விருந்துக்குச் செல்ல வேண்டிய விபரம் சொல்லவும், இரவு உணவிற்காக அனைவரையும் நிர்மலா அழைக்கவும் நேரம் சரியாக இருந்தது. ஆதவன் வாஷ் பேசினில் கை கழுவச் சென்றவன் ஏதோ வேலையாகத் தனது அறைக்குச் சென்றான்.
அத்தியாயம் 9 ‘மருமக வந்ததும் மகளை மறந்தாச்சு’ என்று உரிமைப் போராட்டத்தில் வீஞ்சிக் கொண்டிருந்த (கோபப்பட்டுக் கொண்டிருந்த) நிர்மலாவை அகிலாவும், அப்பா, ரவியும் சேர்ந்து சமாதானப்படுத்திக் கொண்டிருக்கக் கலகலவெனச் சிரித்துக் கொண்டிருந்த அம்மாவை ஆதவன் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த அகிலாவோடு சேர்ந்து...
அத்தியாயம் 8 திருமணத்தின் அடுத்த நாள் காலை: வழக்கமான நேரத்தில் கண் விழித்த ஆதவனின் உடலின் அலுப்புக் கொஞ்சம் மிஞ்சியிருக்கச் சோம்பலாய் நெளிந்தவாறு திரும்பிப் படுத்தான். திருமணத்திற்கான அலைச்சல், கால் மூட்டுகளில் அடிப்பட்டது மற்றும் இரவு சாப்பிட்ட வலி மருந்தின் தாக்கத்தில் அகிலா...
அத்தியாயம் 7 அவள் அழுகை பொறுக்காமல் அவன் அவளை தன்னோடு சாய்த்துக் கொண்டிருக்க, அவளோ அவனிடமிருந்து விருட்டென விடுபட முயன்று திமிறினாள்.தன் முன் நெற்றிச் சுருங்க மனைவியை விடுவித்தவன் கண்களாலேயே என்னவென்று கேட்டான். ‘நம்மளை அந்தத் தாத்தா பார்க்கிறாங்க…’
அத்தியாயம் 6 அகிலாவை சந்தித்து வந்திருந்ததில் இருந்து அவனது மனச் சஞ்சலம் குறைவு பட்டிருந்தது. அவள் தான் தன் பெற்றோரை அந்த அளவு அன்பாய் விசாரித்து இருந்தாளே? அவள் தனது உயரம் கண்டு கிலேசப்படுகிறாள் என்று உணர்ந்ததும் அவளது குறைவான உயரம் கண்டு...
அத்தியாயம் 5 ஆதவன் அகிலாவை சந்திக்க திட்டமிட்டிருந்த அன்றைய நாளில்…. ஆதவன் திருமணத்திற்கான அழைப்பை மற்ற உறவினர்களுக்கு ஆதவனின் அம்மாவும், அப்பாவும் விடுத்து வந்திருந்தனர். தன் நெருங்கிய நட்புகளுக்கு மட்டும் திருமணக் கார்டுகள் சென்று கொடுக்கும் வேலையை ஆதவன் அன்று ஆரம்பித்து இருந்தான்....
அத்தியாயம் 4 திருமண வீடு களைக் கட்டிக் கொண்டு இருந்தது. ஊரில் இருந்து பெரியவர்கள் சிலர் குடும்பமாக வந்திருந்தனர். அனைவரும் பெண் வீட்டார் குறித்துக் குடைந்து எடுத்து விட்டனர்.உறவில் அல்லாமல் அசலில் பெண் எடுத்ததால் அனைவருக்குமே ஒரு விதமான ஒவ்வாமை உணர்வு. தன் மகனுக்காகப் பெண்...
அத்தியாயம் 3 ஒரு வாரம் கழிந்திருந்தது. ஆதவன் தனக்கான ஹோட்டலறையில் கட்டிலின் மேலே முதுகுக்குத் தலையணைக் கொடுத்து தனது கால்களை ஆசுவாசமாய் நீட்டி அமர்ந்தவன் நிர்மலா அனுப்பியிருந்த போட்டோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் இல்லாமலேயே அவனுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. அம்மாவிடம் தனக்கு யூ...
அத்தியாயம் 2 யூ எஸ்ஸில் மற்றொரு நாள்: "அம்மா…எப்படி இருக்கீங்க?" தூக்ககலக்கத்தில் கொட்டாவி விட்டவாறே பேசிக் கொண்டிருந்தான் ஆதவன். "நல்லாயிருக்கேன் கண்ணா…ரொம்ப அசதியோ? தூங்குடாம்மா நாளைக்குப் பேசலாம். ' "அதெல்லாம் ஒன்னுமில்லம்மா, இனி தூங்கதான்...

Recent Posts

error: Content is protected !!