Wednesday, October 20, 2021
Home தொண்ணூறும் இரண்டும்

தொண்ணூறும் இரண்டும்

92ம் வருடத்திய நினைவுகள்

அத்தியாயம் 9. மாறிவிட்டன எல்லாமும் ஒரு வாரம் கழிந்திருந்தது, மாமூலான நிலைக்கு வந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு இருந்தது. வெகு நாளைக்குப் பிரகு ராணி வினியோடு மார்க்கெட்டிற்குக் காய்கறிகள் வாங்க வந்திருந்தாள். நாளை முதல் பள்ளி செல்ல வேண்டும். குமரனிடம் இன்று வரை அவளால் சகஜமாகப் பேச முடியவில்லை.
அத்தியாயம் 8: அந்நாள் கரிநாள். அடுத்த நாள் விடிந்ததிலிருந்து ஆரம்பித்தது வன்முறை. ரோட்டிற்கு யாரும் செல்லாதீர்கள் எனக் கூறப்பட்டது. அனைவரும் தத்தம் வீட்டில் பயந்த வண்ணம் அமர்ந்து கொண்டிருந்தனர். காற்றில் எங்கும் ஏதோ தீயின் வாசனை. சற்றே கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள் ராணி. ‘ஆ...
அத்தியாயம் 7: என்னவாயிற்று? “இந்த டிசம்பர் மாசம் வந்தாலே வேலை தான்” “ஹம்மாடி எவ்வளவு வேலை?” கிறிஸ்மஸ்ஸிற்காக வீட்டை ஒட்டடை அடிப்பது கதவிற்கும், சீலிங்கிற்கும் பெயிண்ட் பூசுவது மட்டும் இன்னும் மிச்சமிருந்தது. மதியம் வழக்கம் போலத்...
அத்தியாயம் 6: தீபாவளி வந்ததே புதுப் பட்டுப் பாவாடை சட்டை தீபாவளி உடையோடு ராணி வெடிகள் வெடித்துக் கொண்டிருக்கக் குமரன் ஒவ்வொரு வெடியாய் எடுத்துக் கொண்டிருந்தான். “அக்கா உனக்குப் பயமாவே இல்லையா?” “வெடி வெடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா தம்பி”...
அத்தியாயம் 5: நீ என் நண்பன் தானா? நண்பனே தானா? பள்ளி விட்டு வந்து ட்யூசன் செல்கையில் வழக்கம் போல அந்த மறைவான இடத்தில் பையன்களுக்கு மட்டும் ஏதோ பயிற்சிகள் நடந்து கொண்டிருந்ததை நின்று கவனித்தாள். பரத்தும் அவளும் ஒரே ட்யூஷன் தான்.
அத்தியாயம் 4: சலீமும் அவளும் ஃபர்ஜானா வீடு பக்கத்துத் தெருவில் இருந்தது கணவன் வெளி நாட்டில் வசிக்கப் பன்னிரண்டு வயது சலீமும், பதினெட்டு முதல் இருபத்தி ஒரு வயதிலான மூன்று பெண் பிள்ளைகளோடு துலங்கும் வீடு அது. அவர்கள் வீடு ராணிக்கு மிகவும் பிடித்ததொன்று, அவர்கள்...
அத்தியாயம் 3. ஆட்களும் நம்பிக்கைகளும் “விளையாடிட்டே திரிகிறது, முடியில் ஒரே தெத்து, வா இங்கின உட்காரு” மகளை அமர்த்தி நீண்ட பின்னல்களைப் பிரித்துச் சிக்கலின்றி வார தொடங்கினார் வயலட். “அம்மா வலிக்குது” கத்தியவளை பொருட்படுத்தாமல் வறட் வறட்டென வாரினார். கேரளத்து பெண்மணி...
அத்தியாயம் 2: புதிய ஊர் இது எனக்கு புதிய ஊர் தற்போதைய ‘சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்’ முன்பு விக்டோரியா டெர்மினஸ் என்று அழைக்கப் பட்ட மும்பையின் ரயில்வே நிலையமாகும். யுனேஸ்கோவினால் உலகப் பாரம்பரிய இடங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்...
அத்தியாயம் 1. காலங்கள் மாறுபாடுள்ளன வருடம்: 1992 இடம்: மும்பை மாநகரத்தின் அதிகப் பரபரப்பில்லாத மிகச் சாமான்யமான ஓர் பகுதி, மஹாராஷ்ட்ர மாநிலம். நவம்பர் மாதம் அதன் ஜில்லிப்பை ஆரம்பித்து விட்டிருந்தது. மும்பை மாநகரம் எப்போதுமே அப்படித்தான் காலத்திற்கேற்ப செயல் புரியும்...

Recent Posts

error: Content is protected !!