அறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020

0
3278

அனைவருக்கும் அன்பான வணக்கஙகள்,


வானம் பொதுவானது, மேகம் பொதுவானது ஆனால், அவற்றைப் பார்க்கும் போது மனிதனின்  மனதில் எழும் கற்பனைகள் ஆளாளுக்கு மாறுபடும் அல்லவா?


அது போலவே ஒரு புகைப்படம்…பேசும் புகைப்படம் அதனைக்  காண்கையில் எல்லோருக்கும் வெவ்வேறு சிந்தனைகள் எழும்.


அவரவர் அனுபவம், மனமுதிர்ச்சி, மொழியாளுமை அத்தனையும் சேர்த்து ஆளுக்கொரு விதமாய் அல்லது பற்பல விதங்களாய்  கலையாய் அது பரிணமிப்பது வியப்பிற்கு உரியது அல்லவா?
இதோ அப்படி ஒரு சிந்தனைப் பரிமாண விழாவிற்கு உங்கள் அனைவரையும் மிகுந்த அன்புடன் வரவேற்கின்றேன்.


JSL தளத்தின் “புகைப்படக் கவிதைப் போட்டி 2020” யை அனைவரும் சேர்ந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்கின்றேன்.


போட்டிக்கான நாள்:
30 மார்ச் 2020 முதல்
30 ஏப்ரல் 2020 வரை

போட்டி முடிவு:
 மே10 ம் தேதி  2020 அன்று போட்டி முடிவுகள் வெளியிடப் படும்.


நடுவர்கள்:
மூன்று நடுவர்கள் அவர்களுள் ஒருவர் வாசகர். நடுவர்கள் விபரம் போட்டி முடிவிற்குப் பிறகு தெரிவிக்கப் படும்.

புகைப்படக் கவிதைப் போட்டியின் பரிசுகள்:

மொத்தம் மூன்றுப் பரிசுகள்


முதல் பரிசு: ₹500


இரண்டாவது பரிசு: ₹300


மூன்றாவது பரிசு: ₹200

போட்டிக்கான விபரங்கள் கேள்விப் பதில் வடிவில் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

கேள்வி பதில்கள்/ FAQs:
1.இது என்னப் போட்டி? 


பதில்: புகைப்படங்களுக்கேற்ற விதத்தில் அதாவது புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும் மனதில் தோன்றுவதை கவிதையாக வடிக்கும் போட்டி.
ஏற்கெனவே, இது போன்ற  5 புகைப்படங்களுக்கு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. 


மேலும் விபரங்களுக்கு: https://www.facebook.com/கவிதை-சொல்லுங்கள்-224001898155442/
&
https://jansisstoriesland.com/category/poem-contest-photo/

சுட்டிகளில் சென்று பார்வையிடலாம்.

2. இந்த முறை புகைப்படக் கவிதைப் போட்டியில் ஏதேனும் மாற்றங்கள் உண்டா?


பதில்: ஆம், இம்முறை ஒரே ஒரு புகைப்படத்திற்கு கவிதை எழுதுவதை மாற்றி, பரிசோதனை முயற்சியாக தேர்ந்தெடுக்கப் பட்ட 9 புகைப்படங்களுக்கு கவிதை எழுதும் விதமாக போட்டி அமைந்திருக்கின்றது.


3. அப்படியானால் 9 புகைப்படங்களுக்கும் சேர்த்து ஒரு கவிதை எழுத வேண்டுமா?


பதில்: இல்லை, கவிதையானது ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தனிக்கவிதையாகவே இருக்க வேண்டும்.


கொடுக்கப் பட்டுள்ள 9 புகைப்படங்களுள் ஏதேனும் ஒன்றிற்கோ, அல்லது எல்லாவற்றிற்குமோ கவிதை எழுதுவது உங்கள் விருப்பத்தைப் பொறுத்து அமையும். 
புகைப் படங்களையும் அவற்றின் எண்களையும் காண்க..

புகைப்படம் எண் 6

புகைப்படம் எண் 7
புகைப்படம் எண் 8
புகைப்படம் எண் 9
புகைப்படம் எண் 10
புகைப்படம் எண் 11
புகைப் படம் எண் 12
புகைப்படம் எண் 13
புகைப்படம் எண் 14

4. ஒருவர் எத்தனைக் கவிதைகள் எழுதலாம்?


பதில்: ஒருவர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.


5. தங்கள் சொந்தப் புகைப்படங்களுக்கு கவிதை எழுதலாமா?


பதில்: போட்டிக் கவிதைக்கான புகைப்படங்களுக்கு கவிதை எழுதினால் மட்டுமே போட்டியில் இடம் பெற இயலும். வேறு ஏதாகினும் புகைப்படத்திற்கு கவிதை எழுதினால் போட்டியில் பங்கேற்க இயலாது.

6.போட்டிக் கவிதைகளில் வெல்ல கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் எவை?


பதில்.அ.கவிதைக்கு உரிய தலைப்பிடுவது ( title) .
ஆ. பிழையில்லா தமிழ்.
இ. புகைப்படத்திற்கேற்ற பொருளுள்ள கவிதையாக இருக்க வேண்டும்.  மற்றும்
ஈ. கருத்துச் செறிவு


7. போட்டியில் பங்கேற்பது எப்படி?


பதில்: போட்டியில் பின்வரும் இரண்டு முறையில் பங்கேற்கலாம்.
அ. உங்கள் கவிதையை பின் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 
jansisstoriesland@gmail.com
ஆ. உங்கள் கவிதையை “கவிதைச் சொல்லுங்கள்” முக நூல் பக்கத்தில் பதிவிடவும்.சுட்டி https://www.facebook.com/கவிதை-சொல்லுங்கள்-224001898155442/
பின் குறிப்பு: உங்கள் கவிதை எந்த புகைப்படத்திற்கானது என அதன் எண்ணை குறிப்பிட மறக்க வேண்டாம்.
 எண்ணிடாத கவிதைகள் பதிவிடுவதிலும்,  நடுவர் தேர்வின் போதும் குழப்பத்தைத் தரக் கூடும்.

8. பதிவிடப்படும் கவிதைகள் எழுத்துப் பிழைகள்/வார்த்தைகள்/வாக்கியங்கள் திருத்தப் படுமா?

பதில்: பங்கேற்பாளர்களின் படைப்புகள் அப்படியே வெளியிடப்படும். எந்த வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது

இது தவிர்த்து வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் கேளுங்கள் விபரம் தெரிவிக்கின்றேன்.


அன்புடன்,
ஜான்சி
JSL தள நிர்வாகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here