நிறைவு_JSL புகைப்படக் கவிதைப் போட்டி

0
663

வணக்கம் நட்புக்களே,

ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற  JSL புகைப்படக்கவிதைப் போட்டிக்கான இறுதிப் பதிவு இது.
ஒரு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டி இருந்தது. வெகு தாமதமாக பதிவிடுவதற்கு மன்னிக்கவும்.

முதலில் இந்தப் போட்டி நடைபெறுவதற்கு காரணமான எனது முக நூல் நட்புக்கள். கவிதைப் போட்டிக்கென புகைப்படம் தேவைப்பட்ட போது நான் கேட்டதும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பகிர்ந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்.
கவிதைப் போட்டியில் பங்குக் கொண்டு சிறப்பித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

JSL புகைப்படக் கவிதைப் போட்டிக்கான மொத்த கவிதைகள் 130. போட்டிக்கான   புகைப்படங்களையும் பகிர்ந்துக் கொண்டவர்கள் விபரமும், அவற்றிற்காக புனையப்பட்ட கவிதைகள் எண்ணிக்கை விபரங்களும்  கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

புகைப்பட எண் 6 ஜெனோஷா விசாகராசா
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 13 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 7 Mithra
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 10 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 8 Shanbagavalli Ashok
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 15 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 9 Krithika Vijay
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 13 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 10 Sid Shravan
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 8 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 11 Kiruthi Priya
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 26 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 12 Sid Shravan
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 17 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 13 Preeti RS ( இந்த புகைப்படத்தை இவரே வரைந்திருக்கிறார் என்பது இன்னும் சிறப்பானது.)
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 10 கவிதைகள் எழுதப்பட்டன.

புகைப்பட எண் 14 Kiruthi Priya
இப்புகைப்படத்திற்கு மொத்தம் 17 கவிதைகள் எழுதப்பட்டன.

அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நடுவர்கள்:

அடுத்து நடுவர்கள் அறிமுகம்;

மூன்று நடுவர்கள் அதில் ஒருவர் வாசகராக இருத்தல் வேண்டும், அனைத்து கோணத்திலும் படைப்பை அணுகி மதிப்பெண்கள் தரப்பட வேண்டும் என்பது ஒரு கருத்தாக பின்பற்றி வருகின்றேன்.

  1. நடுவர் எழுத்தாளர் “லதா பைஜீ” அவர்கள்

நமது கவிதைப் போட்டியின் முதல் நடுவர் எழுத்தாளர், கவிதாயினி, சிறுவர் சிறுகதைகள் எழுதி மனம் கவர்பவர் நமது அன்பிற்குரிய “லதா பைஜீ” அவர்கள்.

இவர் எளிமையும் இனிமையும் கொண்ட எழுத்தாளத் தோழமை கவிதைப் போட்டிக்கான நடுவராக இருக்க வேண்டும் எனும் எனது அழைப்பை  அன்புடன் ஏற்றுக் கொண்டதோடல்லாமல் மிகுந்த கவனத்துடன் மதிப்பெண்கள் வழங்கி இந்தப் போட்டியின் வெற்றியாளர்களை தெரிவுச் செய்ய உதவி செய்த அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மிக்க நன்றிகள் லதா சிஸ்.

கவிதைப் போட்டிக் குறித்து லதா பைஜீ அவர்களின் கருத்து:

சில கவிதைகள் நச்சுன்னு இருந்துச்சு… சில கவிதைகள் நெகிழ்வாவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படியும் இருந்தது… சிலது புதிய முயற்சி போலத் தோணுச்சு… இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்… இந்த மாதிரி போட்டி நடத்தி எழுதுபவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்…

2. நடுவர் தீபா கணேஷ் அவர்கள்

அடுத்த நடுவர் சிறந்த, மிகுந்த இரசனை மிக்க வாசகர் எனும் வகையில் “தீபா கணேஷ்” அவர்கள் நடுவர் பொறுப்பை அலங்கரித்தாலும் அவர் வாசகர் மட்டும் அல்ல. பன்முகத் திறமையாளர் ஆவார்.

அழகுற கவிதைகள், சிறுகதைகள் புனைவதோடு, இனிய குரலில் பாடல்க்ளுக்கான செயலியில் ஆயிரக்கணக்கான பாடல்களை இதுவரையில் பாடி இருக்கின்றார். தன்னம்பிக்கையும், கனிவும் இனிமையும் கொண்ட நட்பு “தீபா கணேஷ்” அவர்கள். கவிதைப் போட்டிக்கான நடுவராக இருக்க வேண்டும் எனும் எனது அழைப்பை  அன்புடன் ஏற்றுக் கொண்டவராக மிகுந்த கருத்தோடு மதிப்பெண்கள் வழங்கி  இந்தப் போட்டியின் வெற்றியாளர்களை தெரிவுச் செய்ய உதவி செய்தார். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மிக்க நன்றிகள் தீபா டியர்.

கவிதைப் போட்டிக் குறித்து தீபா கணேஷ் அவர்களின் கருத்து:

Thnx 4 the opportunity to njoy the beautiful kavidhai feast.. இந்த கவிதை விருந்து மிகவும் சுவையாக இருந்தது.i njoyed it.. பங்குபெற்ற  அனைவருக்கும் ,,,and வெற்றிபெறபோகும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.❣️❣️💐💐🍫🍫…and hats off to u.. for taking the initiative and conducting such lovely competition. thnx much da🙏🙏🙏🙏….

3. நடுவர் ஜான்சி

அடுத்த நடுவராக இந்த தளத்தின் அட்மின் மற்றும் எழுத்துலகில் சில வருடங்களாக படைப்புக்களை பகிர்ந்து வரும் ஜான்சி எனும் நான் கவிதைகளை வாசித்து, மதிப்பெண்களை வழங்கி இருந்தேன்.


கவிதைப் போட்டிக்கான நடுவராக எனது கருத்து


போட்டிக் கவிதைகள் ஒவ்வொன்றுமே மிகுந்த அழகுற அமைந்திருந்தன, எத்தனை எத்தனை விதமான கருத்துக்கள். பெரும்பாலானக் கவிதைகள் ஒன்றையொன்று விஞ்சி நின்றன.


இத்துடன் இந்தக் கவிதைப் போட்டியின் திரியை நிறைவு செய்கின்றேன்.


அன்பும் வாழ்த்துகளும்,


ஜான்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here