106. மகிழ்ந்திரு! களித்திரு _9.11_ஜெயக்குமார் சுந்தரம்

0
436

மகிழ்ந்திரு! களித்திரு

அந்தி சாய்ந்த வேளையிலே
ஆகாய விரிவினிலே
அழகான காட்சி ஒன்று
ஆண்டவனின் ஓவியமா!

அழகான பெண் ஒன்று
அந்தரத்தில் பறந்து சென்று
ஆனந்த கூத்தாடும்
அழகான காட்சி அன்றோ!

இறக்கை இரண்டு தனக்கிருந்தால்
ஆகாயம் சென்றிடுவாள்
அலைகடல் மேல் பறந்து சென்று
அலைமீது நடம் புரிவாள்

அடிவானம் பொன்னிறமாய்
ஆழ்கடலோ செந்நிறமாய்
அதிகாலை எழுந்துவரும்
ஆதவனை வலம் வருவாள்

வெண்மேகத் தேரில் ஏறி
வெண்ணிலவில் களித்திடுவாள்
சிதறி கிடக்கும் விண்மீன்களை
ஒவ்வொன்றாய் எண்ணிடுவாள்

சுழலுகின்ற பூமியிலே
சுதந்திரமாய் சுற்றிடுவாள்
கவலைகளை தான் மறந்து
கற்பனையில் மிதந்திடுவாள்

ஜெயக்குமார் சுந்தரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here