109. தாஜ்மஹால்_14.15_R.பிரேமா

0
443

தாஜ்மஹால்

சலவைக்கல்லில் வடித்த

ஆச்சரியமான சவப்பெட்டி..!!!!!!!


ஆசை மனைவிக்கு

ஆருயிர் கணவனின்

உன்னதமான

அன்பு மாளிகை


யமுனை நதியில்

அமைதி

ஓட்டத்தில் ரீங்காரம்

கேட்கும்

ஆடம்பர அரசபை

உலக அதிசயமாய்

உன்னத அன்பின்

அடையாளம்.

யுகங்கள் பலகடந்தும்

ஆச்சரியத்தின்

சிகரமாக

உயர்ந்து நிற்கும்

ஆசை உணர்வினை

ஆலோலமிசைத்து

பறைசாற்றும்

அழகான மின்னல்

கீற்றாக

பளபளக்கும் மண்டபம்..

அழகான மனைவிக்கு கற்பனையில் அழகூட்டி

சித்திர

வடிவமைத்த

காவியமாய்

திகழும்

ஓவியத்தின் அடையாளம்


நிலவெளியில் பளிச்சிடும்

வீசும் தென்றலுடன்

பேசியே

காலம் கடத்திய

உயிரோட்ட

ஓவியம்……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here