110. முரண்_6.11_ஆஹிரி

0
400

முரண்

சத்தங்கள் வேண்டாம் என சாத்திவைத்த என்
மனக்கதவுகளை மீறி
மீட்டிக்கொண்டிருக்கிறாய்
உன் காதல் யாழை..
கொட்டும் மத்தளங்களாய்
அவை எதிரொலித்த படி…
சொட்டுச்சொட்டாய்
இறங்கும் தேன் துளி போல
உள்ளத்தின் அடி வரை
ஊறியிருக்கும் உன்னை
எதைக்கொண்டு
பிரிப்பது???
உன் பிரியங்களை
முன்னிறுத்தி
என் கோவங்களை
தோற்கடிக்கும்
போதெல்லாம்
மழைக்கால மேகமாய்
ஸ்தம்பித்தபடி நான்..
கொக்கின் வாயில்
துள்ளி விளையாடும்
தங்க மீன் என நீ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here