111. எதிர் நீச்சல்_6.12_Kavi Ragu

0
424

உணவிற்காய் காத்திருக்கும் கொக்காய்

உலகமே காத்திருக்கும் நாக்கால்

உன்னை வசைபாடி விழுங்கிட 

உயர்ந்தால் புறம் பேசும்

வீழ்ந்தால் விரட்டி வேட்டையாடும்

சின்ன மீனாய் நீயும்

சிக்காமல் தப்பி ஓடு

சிந்தையும் கலங்காது காத்திரு

சிறந்த தருணம் தப்பித்திடு

வசை மொழிகளுக்கு நாவால்

விடையளிக்காது வாழ்ந்து காட்டு

அனைவரையும் கவரும் சின்னஞ்சிறு 

அழகிய மீனாய் நீந்திடு

வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here