112. நாயகன்_7.10_ கவி ரகு

0
431
ஏகாந்த இரவு
ஏந்திழை எந்தன்
விழிகளில் கனவு
நட்சத்திரங்களை கண்டு
நாயகனுக்காய் காத்திருந்தேன்
நாயகன் வந்தான்
நாய் வடிவில்
உணராமல் நானும்
உறங்காமல் காத்திருந்தேன்
நாயகனோ பார்த்திருந்தான்
கன்னி எந்தன்
தவிப்புகளை ஏக்கங்களை
மனதால் அழைத்தேன்
மன்னவன் வந்தான்
மங்கை நாயகனாய்
தாமதம் ஏனென்றேன்
உந்தன் அன்பில்
கட்டிக் கிடந்தேன்
இமைக்காமல் பார்த்திருந்தேன்
பாவை உந்தன்
பார்வை சொல்லிய
பாஷைகளை படித்திருந்தேன்
விழியில் வீழ்ந்தவன்
மொழியில் உருப்பெற்றேன்
என்றும் உந்தன்
அன்பில் கட்டுண்டு
உன்னையே விடாமல்
சுற்றி சுற்றி வரும்
நாய் நானென்றான்
எந்தன் நாயகன்
உறக்கம் கலைந்தேன்
கயிறால் என்னை
மொற்றிக் கொண்டிருந்தாள்
எந்தன் அன்னை
எழுந்திரு நாயே
என்று அழைத்தப்படி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here