114. பூமரம்_8.14_கவி ரகு

0
416

சூரிய ஒளி பெற்று

வேர் தரும் நீரால்

வாடாது மகரந்த சேர்க்கையடைந்து

பூத்து குலுங்கும் பல

வண்ண வண்ண பூக்களை 

உண்டாக்கி வாசம் தரும்

பூ மரமாவது போல்

எந்தன் சூரியனின் உயிர்துளி 

பாவை எந்தன் அகத்தே

சேர்ந்து மழலை பெற்று

வசந்தமாய் வாழ எண்ணியிருந்தேன்

காலம் கடந்து சென்றும்

உயிர்த்துளி  கருவில் சேராமல் 

விழலுக்கு இழைத்தநீராய் வீணாக

வண்ணங்களற்ற வாடிப் போன

எஞ்சிய வேர்களோடு காத்திருக்கும் 

பட்டமரமென நானும் காத்திருக்கிறேன்

வண்ணமாய் பூக்கள் பூக்க

வசந்தம் வரும் எந்தன்

வாழ்வு இனிமை பெறுமென

வீசும் காற்று தரும்

ஆறுதல் போல் எந்தன்

தலைவன் அன்பில் ஆறுதலுற்றேன்

வசந்த காலம் வந்தது 

வாழ்வு இனிமை கொண்டது

இனி மகிழ்ந்திரு என

காலம் வாழ்த்த கருவில்

வந்தாள் எந்தன் தேவதை

மகிழினி வடிவில் மகளாக

மழலை மொழியில் மகிழ்ந்து

அவள் அபிநயத்தில் விழுந்து

மகிழ்வோடு வாழ்கிறேன் பூமரமாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here