115. ஏக்கம்_10.6_கவி ரகு

0
415
தவளைகள் மூன்றும்
தாளமிட்டன உற்சாகமாய்
அன்போடு வாழ்ந்தன
ஒன்றாய் இருந்தன
புயலொன்று வீச
சிதறின ஒவ்வோரிடம்
எந்தன் அன்பு
தமக்கைகளே நாமும்
தவளைகளாய் கத்தினோம்
தாளமிட்டு ஆடினோம்
கூடிஆடி மகிழ்ந்தோம்
புயலும் கடந்தது
அன்னை மரணத்தில்
ஆனாலும் சேர்ந்திருந்தோம்
அன்பால் இணைந்திருந்தோம்
மீண்டும் வந்தது
புயலா தென்றலா
தெரியவில்லை பிரிந்திருக்கிறோம்
வெவ்வேறு இடங்களில்
மணமுடித்து மழலைகளோடு
மனதோரம் ஏக்கம்
தவளைகளாய் தாளமிட்ட
உற்சாக நாட்களுக்கு
திரும்பிச் சென்றிட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here