116. காத்திருப்பு _11.25_கவி ரகு

0
451
கல்யாண கனவுகள்
கண்ணோரம் மிதக்க
கைத்தலம் பற்றினேன்
கட்டழகன் எந்தன்
காதல் கணவனை
கழுத்தில் தாலி
ஏறிய வேளை
காற்றில் வந்தது
கணவனுக்கு ஓலை
எல்லையை காக்கும்
எந்தன் ஏகலைவனை
உடனே வரும்படி
கிளம்பினான் கணவன்
கலக்கத்தை விலக்கினேன்
ஒட்டி நின்றேன்
எந்தன் உரியவனோடு
உயரம் குறைத்தான்
பாதத்தில் என்னை
ஏந்தி எந்தன்
ஆருயிர் பாதி
அவன் தந்த
முத்தங்கள் போதும்
யுத்தம் முடிந்து
என்னவன் வரும்வரை
காத்திருக்கிறேன் முடியாத
கவிதையாய் என்னவன்
இதழ் தூரிகையால்
முடித்து வைக்க
சாமிக்கு மூடிந்து
வைத்து வேண்டியபடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here