117. அன்னையின் தவம் _12.15_கவி ரகு

0
432

அகழ்வாராய்ச்சி ஒன்று நடந்தது
அலைப்பேசியோடு கூடொன்று கிடைத்தது
கண்டவன் அறிந்திலன் அது
அலைப்பேசியோடு தவமிருந்த தாயின்
மிஞ்சிய அவளது எலும்புக்கூடென
கடல் கடந்து வாழும்
பிள்ளைகள் அழைப்பை வேண்டி
அன்னை அவள் தவமிருந்தாள்
அனுதினமும் விடாது காத்திருந்தாள்
எந்திரமாகி பொருளாதாரத்தின் பின்
ஓடி ஓடி கலைத்தனர் பிள்ளைகள்
அன்னையைப் பற்றி மறந்து
உயிர் பெறுவாள் அவள்
பிள்ளைகள் அழைப்புக் கேட்டாள்
ஆசரிரி  ஓன்று கேட்டது
கனவு முடிந்து விழித்தேன்
நனவுலகிற்கு வந்தேன் நான்
சாப்பாட்டிற்கு மட்டும் பேசிய
எந்தன் அன்பு அன்னையிடம்
நலம் விசாரித்தேன் நான்
வியப்புற்றாள் அவள் ஆனால்
அவள் விழி ஒளியடைந்தது
எந்தன் அன்பு மொழியால்
அவள் ஏக்கத்தை தான்
கண்டேனோ கனவாக நான்.
இனி அவள் விழி
ஒளி என்றும் நிலைக்கும்
எந்தன் அன்பின் திரியால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here