12.மு(யு)த்தத்தால் அழுதேனே_ 11.5_சேதுபதி விசுவநாதன்

0
553

**மு(யு)த்தத்தால் அழுதேனே**

விடியவிடிய கதைபேசி விழித்திருந்த

நாட்களும் யாருக்கும் தெரியாமல் அனுப்பிய

கடிதங்களும்உறங்காமல் நினைத்திட வைக்கிறது…


மகிழ்ச்சியான உரையாடலின்நெகிழ்ந்துபோன என்னிதயம்போர்களத்தில் நீயிருக்கபூகம்பமும்

கண்டதடா!!!


ஒருமுறை குரல் கேட்கவும்மறுமுறை முகம்

பார்க்கவும்பலமுறை

அழுதுகொண்டேஇறைவனிடம்

வேண்டிகொண்டேன்


மன்னவனே….


காதலின் (சு)வாசம்கண்ணீரில்

உறையகண்முன்னே வந்தாயேகரைசேர்க்கும்

மருந்தாக..


நித்தமும் இதயத்தில்யுத்தங்கள்

சூழ்ந்திடவேசத்தமில்லாமல்

அழுதவளைமுத்தத்தில் அ(ரவ)ணைத்தாயே..

என் உச்சி வகிடுனிலேஉதடுகளை நீ

பதிக்கஉன் நெற்றியில் முத்தமிடகால்மீது

நின்று உயர்ந்தேனே ஆனந்த கண்ணீருடன்….


       – சேதுபதி விசுவநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here