120. காத்திருப்பு_12.16_ஆஹிரி

0
389

காத்திருப்பு

கண்களில் தொடங்கி

மின்காந்த அலைகளின் வழி

நம் காதல் பயணம்..

அனுப்பிய குறுஞ்செய்தி 

காவிவரும் பதிலுக்காய்

தலையணையில் 

முகம் புதைத்து

காத்திருக்கும் பொழுதுகளில்

கறுத்தடர்ந்த உன் 

மீசை முடி பற்றிய 

என் ஆராய்ச்சி முடிந்திருக்கும்…

நள்ளிரவு தாண்டி வரும்

உன் அலைபேசி அழைப்புக்கள் 

விடியலைத்தாண்டியும் 

முடிந்ததேயில்லை..

இடையிடையே

நீ சொல்லும் செல்லச்

சீண்டல்கள்..

சலிக்காத பொழுதுகளாய்

சந்தனம் பூசிக்கொண்டு..

அழுத்தமாய் உள்ளிறங்கும்

உன் கரகர குரலில்

ஒவ்வொருராத்திரியும் 

என் தூங்கா இரவுகளாய்..

ஏனென்று தெரியாமல்

காணாமல் போய்விட்டாய்..

குப்புறப்படுத்தபடி

மௌனக்குமுறல்கள்…

அவை தேடியது என்னவோ

தொலைந்த உன்னை மட்டுமல்ல

தொலைத்த தூக்கத்தையும் தான்..

காத்திருந்த கணங்களெல்லாம்

காணாமல் கரைந்துவிட…

அலைபேசித்திரையை

வெறித்தபடி

வெள்ளைப் படுக்கையிலே

என் கடைசி ஆசை..

உன் ஒற்றை அலைபேசி 

அழைப்பிற்காய்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here