122. அருவமாய் என் அன்பு_7.11_Mary Naveena

0
348

அருவமாய் என் அன்பு

தெருவோரமிருந்து தூக்கி வந்தாய்..

ஆசையாய் பெயரிட்டாய்..

அவ்வப்போது அம்மாவிடம் திட்டும்  வாங்கிக் கொண்டாய்.

நடை பழக்கி..

உண்ண வைத்து..

தூய்மையாக்கி…

உடனிருத்தி…

என் தாயாகிப் போனாய்..

இத்தனை ஆண்டுகளில்

நானின்றி நீயிருந்த நேரங்கள் 

வெகு சொற்பம்..

இன்றோ..

மொத்தமாய் உன்னைப் பிரிகிறேன்..

என் இறுதி நிமிடங்களை 

நீ தாங்க மாட்டாய் என்பதால்..

உயிரோடு இல்லையென்றாலும்

அருவமாய் உன்னோடிருக்கும்

என் அன்பும் நன்றியும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here