123. நவீன கல்லறை_13.10_Mary Naveena

0
432

நவீன கல்லறை

மரங்களை வெட்டி 

மனிதன் எழுப்பிய கட்டிடங்கள்

ஒருபோதும்

மழையைத் தருவதேயில்லை!

வனங்களை அழித்து

மனிதன் உருவாக்கிய தொழிற்சாலைகள்

ஒருபோதும்

உணவை விளைவிப்பதேயில்லை!

இயற்கையை சிதைத்து 

மனிதன் கட்டிய கோபுரங்கள் 

ஒருபோதும்

உயிர்வளியை உருவாக்குவதேயில்லை!

வளர்ச்சி என்றெண்ணி் நாம் உருவாக்கிக் கொண்டிருப்பவை எல்லாம்

வளர்ச்சியே இல்லை…

நமக்காக நாமே வடிவமைக்கும்  நவீன கல்லறைகள் அவை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here