125.அலைபேசியோடு அனாதையாய்_12.17_Mary Naveena

0
458

அலைபேசியோடு அனாதையாய் 

அலைபேசியோடு வாழ்ந்தேன்

உறவுகளை மறந்து

உணர்வுகள் மழுங்கி

அலைபேசியே அனைத்துமாய்..

நலம் விசாரிக்க

சுப துக்க நிகழ்வுகளில் பங்கேற்க..

உரையாடல் முதல் 

ஊர் சண்டை வரை…

அலைபேசியோடு முடிந்து போனது.

எதிர்பாராமல் ஒருநாள்

இறந்து போனேன்..

எலும்புக் கூடாகிப் போன பின்னும்

வந்து பார்க்கவோ..

எனக்காக அழவோ..

என்னை அடக்கம் செய்யவோ

எவருமில்லை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here